விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது . காந்தக்கோட்டை ,வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பிற்கு பிறகு TD ராஜா தயாரிக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது .இதைத்தொடர்ந்து இவர் தயாரிக்கும் பெயரிடாத படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார் . ” மெட்ரோ ” பட புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார் . இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார் . உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் .இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் . இந்த திரைப்படத்தின்…
Read MoreMonth: March 2020
நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? ரஜினி புதுக் கேள்வியும், பதில்களும்!
இதோ அதோ என்று தன் அரசியல் வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருந்த ரஜினி நேற்று அதிரடியாக இனி தன்னை வருங்கால முதல்வர் என அழைக்க வேண்டாம் என, தன் ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த வாரம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தன் அரசியல் கண்ணோட்டம் குறித்தும் இன்று (மார்ச் 12) சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் பேசினார். அப்போது, தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கு தான் 3 முக்கிய திட்டங்கள் வைத்துள்ளதாகக் கூறினார். கட்சியில் குறைவான பதவிகள், 50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு வாய்ப்பு, கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு ஆகிய 3 திட்டங்களை வைத்திருப்பதாக ரஜினி கூறினார். தான் கட்சித் தலைவராக இருப்பேன் எனவும், முதல்வராக இருக்க மாட்டேன்…
Read More