நான் அப்செட் ; மா. செ. கூட்டத்திற்கு பின் ரஜினி பேட்டி – முழு விபரம்!

தமிழகத்தில், 2021ல், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அதற்கான முன்னேற்பாடாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

திரைமறைவில், கூட்டணி குறித்தும், துாதர்கள் வாயிலாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி, டில்லியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம் என, காட்டமாக பேட்டி அளித்தார். மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கத் தயார் என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முஸ்லிம் அமைப்புகள், மத குருமார்களையும் அழைத்து பேசி வருகிறார்.

சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் தேர்தல் குறித்தும், கட்சி அறிவிப்பது பற்றி விவாதித்து உள்ளனர். மன்ற செய்திகளை தலைமை உத்தரவின்றி வெளியே சொல்லக்கூடாது என ரஜினி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இந்த சந்திப்பு குறித்து மீடியாக்களிடம் ரஜினி சொன்னது இவைதான்:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீங்களும் கமலும் சேர்ந்து நிரப்புவீர்களா?

அதற்கு நேரம் வரும்போதுதான் பதில் தெரியும்.

கட்சி ஆரம்பிக்க போவதா அறிவிச்சு 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன? கூட்டத்தில் என்ன பேசினீர்கள்?

கூட்டத்துக்குள் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன பேசினீர்கள்? கூட்டம் எப்படி இருந்தது?

மாவட்டச் செயலாளர்களுடன் அதுகுறித்துத்தான் பேசினேன். கூட்டம் திருப்தியாக இருந்தது. அவர்களிடம் நிறைய கேள்விகள் இருந்தன. அதற்கெல்லாம் நான் பதிலளித்தேன். நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர்களுக் கெல்லாம் நிறைய திருப்தி. ஆனால் எனக்கு ஒரு விஷயத்தில் அவ்வளவு திருப்தி இல்லை. ஏமாற்றம்தான். அது என்னவென்று நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. பிறகு சொல்கிறேன்.

ஏமாற்றம் என்றீர்களே அது என்ன?

எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்தான். நேரம் வரும்போது சொல்கிறேன்.

Related posts

Leave a Comment