பிக்பாஸ் ஆரவ்-வின் “ஒரு கப் காபி” குறும்படம்

பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள 15 நிமிட ஒரு கப் காபி குறும்படம் யூட்யூப்பில் ரிலீசாகி இருக்கிறது… இதன் இயக்குனர் ஜெகதீஷ் கண்ணா.  இவர் இயக்குனர் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்… ஒளிப்பதிவாளர்  வம்சி. இவர் இதற்கு முன்னால் ஏன்டா தலையில எண்ண வைக்கல என்ற திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டர் கிரிதரன் எம்.கே.பி இவர் குதிரைவால் என்ற படத்தில் எடிட்டிங் செய்துள்ளார். இசை மாஸ்டர் தி பிளாஸ்டர், புகழ் பியான் சுரோ. இவர் நடிகர் விஜயின் பீஸ்ட் என்ற படத்தில் மாஸ்டர் தி பிளாஸ்டர் என்ற பாடலை பாடியவர். ஆரவுடன் சேர்ந்து தீபக் ராஜன், க்ரிஷ் ஹாரன், மனோஜ், சன்மதி இவர்களும் சேர்ந்து நடித்துள்ளனர்.  இது ஒரு சைக்காலஜி திரில்லர் என்ற ஜென்னர் படம். இது ஒரு கருணைக் கொலை மற்றும்…

Read More

கதாநாயகன் ஆன ஆர்.ஜே.விஜய்

*ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் இயக்குநர் ஹேமநாதன். ஆர் இயக்கத்தில், ஆர்ஜே.விஜய்-அஞ்சலி நாயர் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!* ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் படங்கள் தனித்துவமான கதைக்களங்களைக் கொண்டதோடு, குடும்பப் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த ஆண்டு, பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட அற்புதமான பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். நல்ல கதைகளுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் உற்சாக வரவேற்பை அடுத்து, தற்போது ஆர்ஜே. விஜய் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் நடிப்பில் மற்றொரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தயாரிக்கிறார் எஸ். அம்பேத்குமார். ஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹேமநாதன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 12, 2023) ஒரு…

Read More

“கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் கொண்டாட வேண்டும்.. அவர்களும் ஹீரோ தான்..” ; ரூட் நம்பர் 17 விழாவில் ஆரி வேண்டுகோள்

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படம் வரும் டிச-29ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை விஜயா போரம் மாலில் ரசிகர்கள் முன்னிலையில்…

Read More

மக்கள் பிரச்சினையைப் பேசினால் அது நல்ல படம்: ‘பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.எடிட்டிங் இத்ரிஸ். இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ‘பாய் ‘படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தியான ஸ்ரீ நியா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இவ்விழாவில் தயாரிப்பாளர் ஸ்ரீ நியா பேசும்போது, “பாய் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.சஸ்பென்ஸ் திரில்லர்…

Read More

விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கராஜன் கை கோர்க்கும் “LIC” திரைப்படம்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது !! விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது !! புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தில் லவ் டுடே…

Read More

ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!

  3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமா திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம். வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து…

Read More

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி”பாடல் வெளியாகியுள்ளது

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திலிருந்து, நட்புக்கு சாட்சியாக அழுத்தமான வரிகளுடன் வந்துள்ளது முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி” பாடல். இசையமைப்பாளர்: ரவி பஸ்ரூர் பாடியவர்: ஐரா உடுப்பி பாடலாசிரியர்: மதுரகவி பாடல் லிங்க் – https://youtu.be/UmycVwrn0Ng ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படம், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது, இந்த புதுமையான ஆக்சன் உலகைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது‌. முதல் சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பார்வையாளர்கள் சலாரின் இசை உலகத்தை…

Read More

வியாபாரத்தில் மிரட்டும் விஷாலின் “ரத்னம்”

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் OTT உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தின் உரிமையை விஷால் திரை பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் திருப்பதியில் நடைபெற்று வருகிறது என்பது…

Read More

தென்னிந்திய திரைப்படம், டி.வி. மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம். 50வது ஆண்டு பொன்விழா |

  தென்னிந்திய திரைப்படம் , டி.வி. மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடை பெற்றது. விழாவினை குஷ்பு சுந்தர் மற்றும் தேவயாணி இருவரும் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தனர். விழாவில் ராமதுரை, ஜே.துரை, தேனப்பன், எம். கபார், நாச்சியப்பன், உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு நினைவுக்கேடயங்கள் வழங்கப்பட்டது. சங்கத்தை பற்றிய 50 வருட நிகழ்வுகள் ஆவணப்படமாக காட்டப்பட்டது. முல்லை – கோதண்டம் இருவரின் ஓரங்க நாடகம் மூலம் தயாரிப்பு நிர்வாகிகள் பற்றிய வேலை விவரங்கள் நகைச்சுவையாக நடித்துகாட்டப்பட்டது. 50 வருட பொன்விழா நினைவை குறிக்கும் புத்தகத்தை எஸ்.ஆர்.எம். யுனிவர்சிட்டி வேந்தர் பாரிவேந்தர் வெளியிட, , வேல்ஸ் யுனிவர்சிட்டி வேந்தர் ஐசரி கணேஷ் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என். இராமசாமி, துணைத்தலைவர்…

Read More

அழகானதொரு காதல் பயணமாய் “ஓ மஹி” பாடல்

-ஷாருக்கான் மற்றும் டாப்ஸி இணைந்து, ஓ மஹி பாடலில் அற்புதமான இசையுடன், ஒரு அழகான காதல் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்கிறார்கள்- டங்கி டிராப் 4 – டிரெய்லர் இறுதியாக ராஜ்குமார் ஹிரானி உருவாக்கியிருக்கும் அன்பு மிகுந்த உலகத்தினை பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்தது. மில்லியன் கணக்கானவர்களின் இதயத்தைக் கவர்ந்த இந்த டிரெய்லர், 24 மணிநேரத்தில் ஹிந்தி சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர்களில் ஒன்றாக மாறி சாதனை படைத்தது. இந்த மயக்கும் கதையின் அடுத்த அத்தியாயத்தைப் படம்பிடித்து காட்டும்விதமாக, ஷாருக்கானும் டாப்ஸியும் இணைந்து தோன்றும் அழகான காதல் பாடலாக டங்கி டிராப் 5 ஓ மஹி வெளியாகியுள்ளது. ஹார்டி மற்றும் மனு கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள தன்னலமற்ற அன்பின் ஆழமான சக்தியை இந்த மெல்லிசைப் பாடல் வெளிப்படுத்துகிறது. அவர்கள் இதயங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் நிலையில், மிகக்கடினமான வாழ்க்கையை…

Read More