தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வாரத்திலும் குழந்தைகளுடன் குடும்பமாகப் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இதைக் கொண்டாடும் விதமாக படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ‘இயக்குநர் இமயம்’, நடிகர் பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தங்கச்சங்கிலி வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தருணத்தில் கதாநாயகன் ஜிவி பிரகாஷ், மேனேஜர் ஸ்ரீதர், இயக்குநர் ஷங்கர், எடிட்டர் லோகேஷ், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் பூர்னேஷ் ஆகியோர் உடனிருந்து கெளரவித்தனர். இயக்குநராகத்…
Read MoreMonth: April 2024
பரபரப்பைக் கிளப்பும் துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” பட டீஸர்
துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ பட டீசர் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்துள்ளது! துல்கர் சல்மான் பல்வேறு மொழிகளில் தனது அழுத்தமான நடிப்பின் மூலம், தான் பல மொழி நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ளார். ’மகாநடி’ மற்றும் ’சீதா ராமம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் மூலம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தனி அன்பைப் பெற்றுள்ளார். அவர் வரவிருக்கும் தனது பல மொழி திரைப்படமான ’லக்கி பாஸ்கர்’ படத்திற்காக புகழ்பெற்ற இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்துள்ளார். ’லக்கி பாஸ்கர்’ படத்தில், துல்கர் ஒரு எளிய பேங்க் கேஷியராக நடித்துள்ளார். இதுவரை பார்த்திராத தோற்றத்தில் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க முடிகிறது. ‘லக்கி பாஸ்கர்’ படக்குழு ஈத் பண்டிகையை கொண்டாடும் வகையில் படத்தின் டீசரை ஏப்ரல் 11, இன்று வெளியிட்டனர். அதிர்ஷ்டத்தையும் பணத்தையும்…
Read Moreராம் சரணுக்கு ஐசரிகணேஷ் வழங்கும் கெளரவ டாக்டர் பட்டம்
தென்னிந்திய நடிகர் திரு. ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம். திரு ராம் சரண் அவர்கள் மெகா ஸ்டார் என மக்களால் கொண்டாடப்படும் நடிகர் திரு சிரஞ்சீவி திருமதி. சுரேகா சிரஞ்சீவி அவர்களுக்கு மகனாக 1985 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தார். புகழின் வெளிச்சம் தன் மகன் மீது படாமல் இருக்க ராம் சரணை சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் படிக்க வைத்தார். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் சேர்ந்தார் ராம் சரண். கல்லூரி நாட்கள் தொட்டே திரைத்துறை மீது பேரார்வம் கொண்டிருந்தார். தன்னை தேர்ந்த நடிகராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் குதிரையேற்றம், நடனம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். திரு. ராம்சரண் அவர்கள் 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற…
Read Moreஎன்னை எதிர்ப்பதற்க்காக எடுக்கப்படும் படங்கள் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை -பா இரஞ்சித்.
புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் முதல் நாளான 08.04.2024 அன்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களால் பறை இசையுடன் துவங்கி வெகுசிறப்பாக நடந்து முடிந்தது. முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர்…
Read Moreஅறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டீசர் சரிகமா மியூசிக் நிறுவனத்தால் இன்று YouTube வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும் என்பதே நோக்கம் ஆகும். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ். வித்தியாசமான…
Read Moreமதுபானக்கடை கமலக்கண்ணனின் ”குரங்கு பெடல்” படத்தை வெளியிடும் SK
நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதையைத் தருவதில் பெருமை கொள்கிறது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ். தமிழ்நாட்டின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மயக்கும் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980 களின் கோடைகாலத்திற்கு பார்வையாளர்களை படம் கொண்டு செல்கிறது. மனதைக் கவரும் இந்தக் கதை, சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சி பெறத் துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிக்கொண்டு வருகிறது. ராசி அழகப்பன் எழுதிய ’சைக்கிள்’ சிறுகதையால் ஈர்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் குடும்ப அமைப்பு மற்றும் கனவுகள் பற்றிய ஒரு கூர்மையான ஆய்வு ஆகும். இயக்குநர் கமலக்கண்ணன் படம் உருவாக்குவதில் தனது…
Read Moreபாலிவுட்டில் வார்-2 மூலம் வில்லனாக அறிமுகமாகும் ஜூனியர் என்.டி.ஆர்
‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘வார்’ திரைப்படம் வெளியானது. இதன் சீக்வல் ‘வார் 2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில்தான் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட்டின் முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார். ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸின் (YRF Spy Unvierse) ஒரு பகுதியாக ‘வார்2’ திரைப்படம் இருக்கும். இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கான படப்பிடிப்புத் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, அவர் மும்பை வந்துள்ளார். மேலும், ஜூனியர் என்.டி.ஆரை வரவேற்கு விதமாக படத்தில் இருந்து மாஸான அவரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். இதில் கியாரா அத்வானியும்…
Read Moreஒரு நாளில் துவங்கி ஒரே நாளில் முடியும் கதை “சிறகன்”
MAD பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள படத்திற்கு ” சிறகன் ” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் – வெங்கடேஷ்வராஜ். S ( இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் MF. Tech – மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ் துறையில் பட்டம் பெற்றவர் ) படம் பற்றி இயக்குனர் வெங்கடேஷ்வராஜ். S பகிர்ந்தவை.. ஹைபர் லிங்க் நான் லினியர் முறையில் கிரைம் திரில்லர் ஜானரில் 11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது தான்.…
Read Moreராமாயணத்தை உலகளாவிய ரசிகர்கள் விரும்பி ஏற்றுக் கொள்வர்.
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது. திரைப்படத் துறையில் அனுபவமிக்க பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கதையாக இப்படம் தயாராகிறது. மும்பை, இந்தியா- ஏப்ரல் 22, 2024 – பொழுதுபோக்கு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன் இந்திய பார்வையாளர்களுக்கு மட்டுமுல்லாமல் சர்வதேச பார்வையாளர்களுக்காகவும் உருவாக்குகிறது. தொலைநோக்கு சிந்தனையைக் கொண்ட தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பல அகாடமி விருதுகளை வென்ற விசுவல் எபெக்ட்ஸ் நிறுவனமான DNEG…
Read More‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் நிவின்பாலி கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை கொடுக்கும்
நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது. இந்திய திரையுலகின் பரந்த பரப்பில் திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்பால் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிவின் பாலியின் தனித்துவமான நடிப்பு.. கவனத்தை கவர்கிறது. ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் அவரது திரை தோற்றம்… அவர் ஆற்றல்மிக்க நடிகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் மட்டுமல்லாமல் இத்திரைப்படம்.. சினிமா ரசிகர்களின் ரசனையை புதிய உயரங்களுக்கு உயர்த்துகிறது. இந்தத் திரைப்படம், 70 கள் மற்றும் 80களில் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் வாழ்வியலை பற்றியதாகும். சினிமா ரசிகர்களின் மையமாக திகழும் கோடம்பாக்கம்.. பல திரைப்பட தயாரிப்பாளர்களின் வெற்றியையும், புகழையும், தோல்விகளையும் கண்டது. இந்த நகரம்தான் படத்தின் கதைக்கள பின்னணி.…
Read More