‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் திரு.மாணிக்கம் திரைப்படத்தில் கவரவிருக்கிறார். சமுத்திரக்கனி. நாசர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கியது. பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் இத்திரைப்படத்தில் பாடல்களை எழுதியுள்ளனர். ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை…
Read MoreMonth: April 2024
ரோமியோ திரை விமர்சனம்
மலேசியாவில் பெரிய தொழிலதிபராக இருக்கும் விஜய் ஆன்டனி தனது சொந்த ஊரான தென்காசிக்கு வருகிறார். 35 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் அவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். இதற்கிடையே துக்க நிகழ்வு ஒன்றில் உறவுக்கார பெண் மிருணாளினி கண்ணில் பட, அப்போதே காதல் . அதேவேகத்தில் அந்த பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரியாமலலே அவள் பெற்றோரிடம் பேசி திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது. திருமணமான மறுநாளே மிருணாளினி, ‘எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. சினிமாவில் ஹீரோயின் ஆவதுதான் எனது லட்சியம்’ என்று குண்டை தூக்கிப்போட… மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற மனைவியை ஹீரோயினாக வைத்து, சொந்தப் படம் தயாரிக்கிறார் விஜய் ஆன்டனி. அதோடு, தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்தப் படம் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ். .ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்கும் கதையில் தன்னால் என்ன முடியுமோ…
Read MoreDeAr விமர்சனம்
மேலோட்டமாக படத்தின் ட்ரைலரை மட்டும் வைத்துப் பார்த்தால் குறட்டை தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல் தான் இத்திரைப்படம் என்று தோன்றும். ஆனால் திரைப்படம் அதையும் தாண்டி குடும்பம் என்னும் அமைப்புக்குள் இருக்கும் ஆண்களின் பல்வேறுபட்ட குறைபாடுகளையும் ஓரளவிற்குப் பேசி இருக்கிறது. தீபீகாவான ஐஸ்வர்யா ராஜேஸுக்கு சிறுவயதில் இருந்தே குறட்டை விடும் பிரச்சனை இருந்து வருகிறது. இதை வெளிப்படையாக அவர் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் தெரிவிக்க, அவரின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தன் குறையை மறைத்து, பெண் பார்க்க வந்த அர்ஜூனாகிய ஜி.வியை மணமுடிக்கிறார். முதலிரவன்றே ஐஸ்வர்யாவின் குறட்டைப் பிரச்சனை வெளியே தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளுமே DeAr திரைப்படம். படத்திற்கு மிகப்பெரிய பலமே நடிகர் நடிகைகள் தேர்வு…
Read Moreடி.ராஜேந்தர் ஆர்.எம்.வீரப்பனுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தி
மறைந்து விட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய ஒப்பற்ற உதவியாளராக, சரித்திரம் படைத்த சத்யா மூவிஸ் நிறுவனத்தின் சாதனை படைத்த தயாரிப்பாளராக, பல்வேறு காலகட்டங்களில் அரசியல் களத்தில் போராட்ட வீரராக, அண்ணா திமுகவின் முன்னாள் அரும்பெரும் செயலாளராக, முன்னாள் அமைச்சராக ஒய்வின்றி பணியாற்றிய ஆருயீர் அண்ணன் ஆர்.எம்.விரப்பன் அய்யா அவர்களின் மறைவு மனதிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய இழப்பு தமிழ் நல்லுலகிற்கே பெரும் இழப்பாகும். அமரராகிவிட்ட அய்யாவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். இப்படிக்கு, டி. ராஜேந்தர் M.A, தலைவர், இலட்சிய திமுக, தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் கௌரவ ஆலோசகர், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.
Read Moreதிரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) தலைவராக விஷ்ணு மஞ்சு தொடர பொதுக்குழு ஒப்புதல்
விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது தலைமையிலான திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) நிர்வாகத்தை தொடர பொதுக்குழு ஒப்புதல்! தெலுங்குத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (MAA)-ன் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தலைவர் விஷ்ணு மஞ்சுவின் மதிப்பிற்குரிய வழிகாட்டுதலின் கீழ் MAA கட்டிடத் திட்டம் முடியும் வரை தற்போதைய தலைமை தொடர்ந்து பணியாற்றும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுமார் 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட இந்த பொதுக்குழு கூட்டத்தில், மே மாதம் திட்டமிடப்பட்ட வரவிருக்கும் தேர்தல்கள், ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட நிதி சேகரிப்பு நிகழ்வு மற்றும் MAA கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பேசப்பட்டது. ஆலோசனையின் போது, தலைவர் விஷ்ணு மஞ்சு தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தை (MAA) கட்டிடம் வெற்றிகரமாக முடிக்கும் வரை நீட்டிக்க…
Read More‘லவ் டுடே’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் – பிரதீப் கூட்டணி
தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை ‘ஓ மை கடவுளே’ புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இது ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் 26வது படைப்பாகும். கலகலப்பு மிக்க உணர்ச்சிப்பூர்வமான இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆவார். இணை கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ஐஷ்வர்யா கல்பாத்தி பங்காற்றுகிறார். லியோன்…
Read Moreஇயக்குநர் பரம் உடன் தனஞ்ஜெயா இணையும் புதிய படத்தின் பெயர் “கோடீ”
திரையுலக பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு ‘கோடீ’ என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்டவர் இயக்குநர் பரம். கலர்ஸ் கன்னட சேனலில் கன்னட மண்ணின் பாரம்பரிய கதைகளை வழங்குவதில் அவருக்கு இருந்த விரிவான அனுபவத்திலிருந்து கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை இயக்குநர் பரம் எழுதி இருக்கிறார். யுகாதி பண்டிகையான இன்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கோடீ’ படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் ‘கோடீ’ எனும் படத்தின் தலைப்பை ஆக்கப்பூர்வமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். டாலி தனஞ்செயாவின் வசீகரிக்கும் கண்களுடன் சுவாரசியமான அம்சங்களையும் இணைத்து, கதையின் தீவிரத்தையும், ஆழத்தையும் வெளிப்படுத்தும் வகையில் மடிக்கப்பட்ட 500 நோட்டுகளால் கடிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ‘கோடீ’ – ஒரு மில்லியன் கனவுகளை கொண்ட…
Read Moreவிபத்தில் சிக்கி மீண்டிருக்கும் ராட்டினம் இயக்குனரின் உருக்கமான கடிதம்
விபத்தால் நானும் எனது குடும்பமும் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பு நுனி வரை தொட்டு பார்த்து இன்றோடு 25 நாட்கள் ஆகின்றன. மனைவியின் உறவுகளில் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக கேரளம் சென்று திரும்புகையில் இவ்விபத்து ஏற்பட்டது. சில வருட காத்திருப்புக்கு பிறகு அனைத்தும் கைகூடி வந்த வேளையில் இவ்வாறு நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அதிகாலை நேரத்தில் இன்னொரு வாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் இது நிகழ்ந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி காரின் கதவுகளை உடைத்து எங்களை வெளியில் மீட்டெடுத்து இருக்கிறார்கள். அனைவருமே யாரென்று தெரியாத அந்த வழியாக சென்ற முகமறியா மனிதர்கள். எங்களை தீவிரமாக போராடி காப்பாற்றி சரியான மருத்துவமனையில் அனுமதித்தது வரை எல்லாமே யாரென்றே தெரியாத இன்னொரு மாநிலத்தை சேர்ந்த இந்த முகமறியா மனிதர்கள்தான். இவர்கள் இல்லாவிட்டால் இன்று நாங்கள் இல்லை. இவர்களுக்கு நன்றி என்பது மிக மிக சிறிய சொல்…
Read More4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” சென்னையில் பிரம்மாண்டமாக துவங்கியது
பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் முதல் நாளான 08.04.2024 அன்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களால் பறை இசையுடன் துவங்கி வெகுசிறப்பாக நடந்து முடிந்தது. முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று…
Read More“எத்தனை பிரச்சனை என்றாலும் குகன் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்”- பாடலாசிரியர் சினேகன்
மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’. நம் மக்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் அருமையான காவியமாக, அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திங்கட்கிழமை அன்று சென்னை கலைஞர் அரங்கத்தில், படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ‘வங்காள விரிகுடா…
Read More