ஜூன் 21ல் குணா திரைப்படம் ரீ-ரீலிஸ் செய்யப்படுகிறது

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமத்தில் உள்ள திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே. குணா திரைப்படம்…

Read More

ஆத்வி சேஷு மற்றும் ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக இணைந்த ‘டகோயிட் திரைப்படம்

ஹைதராபாத்தில் நடக்கும் ஆத்வி சேஷின் பான்-இந்தியா அதிரடித் திரைப்படமான ‘டகோயிட்’ படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார் !! ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில் படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகர் ஆத்வி சேஷுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்து, இனிமையான ஷீட்டிங் அனுபவம் எனக்குறிப்பிட்டுள்ளார்.   இரண்டு முன்னாள் காதலர்கள், தங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டி, தொடர்ச்சியான கொள்ளைகளை ஒன்றாக இணைந்து செய்கிறார்கள். இதனை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லும் திரைப்படம் தான் ‘டகோயிட்’. ஆத்வி சேஷின் ‘க்ஷணம்’ மற்றும் ‘கூடாச்சாரி’ உள்ளிட்ட பல தெலுங்கு…

Read More

”முதல்பட இயக்குநருக்கு விதார்த் கிடைத்துவிட்டால் 50 % வேலை முடிந்துவிடும்” – இயக்குநர் ஷாஜி சலீம்

‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர். ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள,…

Read More

”தோனிமா” திரைப்படத்தில் பொறுப்பற்ற கணவராக காளி வெங்கட்

சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் – ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’! சாதாரண ஆண், பெண்ணின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சாரத்தை படம் பிடிக்கும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. இந்த வரிசையில், சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கிய ’தோனிமா’ திரைப்படமும் இணைந்துள்ளது. நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை இந்தப் படம் திரையில் காட்ட இருக்கிறது. தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடாமுயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக வரும் கோடி கதாபாத்திரம் குடும்பத்தின் மீது பொறுப்பற்ற ஒருவர். இதில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த…

Read More

இனிதே நடந்து முடிந்த உமாபதி ராமையா – ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம்

நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று (10 ஜூன்) கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் இனிதே நடைபெற்றது. விஷால் கார்த்தி துருவா சர்ஜா ஜெகபதி பாபு சமுத்திரகனி K.S. ரவிக்குமார் G.K.ரெட்டி S.R. பிரபு K.E. ஞானவேல்ராஜா விஜய குமார் செந்தில் நாஞ்சில் சம்பத் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

Read More

ரசிகர்களை பிரமிக்க வைக்கும் கல்கி 2898 AD முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி சயின்ஸ் ஃபிக்சன் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ்…

Read More

”யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது” – நடிகை அபிராமி

’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. நடிகர் வினோத், “‘ராட்சசன்’ பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக ‘மகாராஜா’ அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு மூன்றாவது படம் இது. அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது. அவருடைய சுறுசுறுப்பு நம் சோம்பேறித்தனத்தை தூர விரட்டி விடும். அனுராக் கஷ்யப் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவர் கூடவும் வேலை பார்த்தது…

Read More

தண்டுபாளையம் திரை விமர்சனம்

உண்மை சம்பவத்தை திரையில் பார்த்தாலே மனம் கதையோடு இன்னும் நெருக்கமாகி விடும். இதுவோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வீடு புகுந்து நடத்தும் வன்முறைக் கதை. அதை திரைப்படுத்திய விதத்தில் மனதுக்குள் திகில், அதேநேரம் விழிப்புணர்வுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆணியடித்து சொல்லியிருக்கிறார்கள். பெங்களூர் மற்றும் சுற்றுப்பகுதியில் வீடு புகுந்து கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவத்தை ஈவிரக்கமே இ்ல்லாமல் தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துகிறது. அந்த கூட்டத்தை போலீஸ் அதிகாரி கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை பெற்று தருகிறார். மக்களை பயமுறுத்திய கூட்டம் ஒழிந்தது என்று போலீசார் எண்ணும் நிலையில் அதேபோல் இன்னொரு கூட்டம் புறப்பட்டு அட்டூழியம் செய்கிறது. அந்த கூட்டத்தை பிடிக்க புதிய போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார் அவரால் அந்த கூட்டத்தின்ஆணிவேரை அறுக்க முடிந்ததா என்பது ரத்தம் தெறிக்கும் திகுதிகு…

Read More

வெப்பன் விமர்சனம் 3/5..

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம். சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’.. Youtuber வசந்த் ரவி வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதில் வல்லவர். எனவே இவர் வீடியோவுக்காக ஒரு முறை சூப்பர் ஹுயூமன் பற்றிய தகவல்களைத் தேட ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கு திடீரென ஒரு வெடி விபத்து நடக்கிறது. அப்போது இவர் அங்கு இருப்பதால் போலீஸ் இவரை அழைத்துக் கொண்டு விசாரிக்கின்றனர். அப்போது இவர் சூப்பர் ஹியூமன் ஒருவர் இருக்கிறார். அவரை உங்களால் அழிக்க முடியாது அது ஒரு அபார சக்தி கொண்டது என்கிறார். மேலும் அந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரிய வருகிறது.. அப்படி என்றால் வசந்த ரவி உண்மையில் யார்.? அவருக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.…

Read More

திருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சியை துவக்கி வைத்த கீர்த்தி சாந்தனு

சென்னையில் இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடவும், வீட்டுக்குப் பெண்களுக்கு குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் வகையில், திருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியது. சின்னத்திரை புகழ் கீர்த்தி சாந்தனு இந்த கண்காட்சியினை துவக்கி வைத்தார். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், முழுமையாக கைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், ஆடை, அணிகலன்கள், வீட்டுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள், பேக்ஸ், பர்னிச்சர்கள் என அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடு அனைவரும் சுற்றிப்பார்ப்பதுடன் ஜாலியாக ஷாப்பிங்கும் செய்யும் வகையில் ஒரு அருமையான வாய்ப்பாக இந்த கண்காட்சி இருக்கும். இந்த கண்காட்சியினை திறந்து வைத்த கீர்த்தி சாந்தனு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது… இந்த அருமையான கண்காட்சியினை திறந்து வைத்ததில் மகிழ்கிறேன். வட இந்தியா சென்று தேடித்தேடி வாங்கும் பொருட்களை, இங்கு நீங்கள் எளிமையாக வாங்கலாம். சுற்றுலா…

Read More