திறமையான படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஸ்வீட் ஹார்ட்’ என பெயரிடப்பட்டு, இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு…
Read MoreMonth: July 2024
அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ துல்கர் சல்மான் படத்தின் டைட்டில் ட்ராக்!
துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக்! பல மொழி ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான், ஒரு சாதாரண மனிதரான ‘லக்கி பாஸ்கரி’ன் அசாதாரண கதையுடன் இந்த முறை வருகிறார். ஜூலை 28ம் தேதி நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 1980களின் பிற்பகுதிக்கும் 1990களின் முற்பகுதிக்கும் நம்மை அழைத்து செல்லும் இந்த இசை ரசிகர்களுக்கு போதை தருகிறது என்றால் மிகையில்லை. இசைக்கருவிகளின் பயன்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக, பழம்பெரும் பாடகி உஷா உதுப்பின் குரல் இந்த ட்ராக்கை ஒரு ராக்கிங் நாஸ்டால்ஜிக்காக மாற்றி இருக்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், 1980களின் இண்டி-ராக்கை தற்போதைய தலைமுறை உணர்வுகளுடன் இணைத்து இந்த பாடலை…
Read Moreயோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் டீசர், இரண்டு பாடல்கள், ப்ரோமோ பாடல், முன்னோட்டம்…
Read More’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் நம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் – மிர்ச்சி விஜய்
நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்.ஜே. மிர்ச்சி விஜய். சப்போர்ட்டிங் ரோலில் இருந்து இப்போது முன்னணி கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது பாராட்டுக்குரியது. ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியாக இருக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் வெளியீட்டை அவர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார். மிர்ச்சி விஜய் கூறும்போது, ”வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் நல்ல நடிகராக உருவாக உதவும் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தேவை. ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்த அனந்த் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. என் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் எளிதில் கனெக்ட் செய்து கொள்ள முடியும். படக்குழுவில் நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்களாகி விட்டோம். அனந்த் இயக்குநராகவும் நடிகராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இந்தப் படம் வெளியான பின்பு…
Read MoreDeadpool & Wolverine – விமர்சனம்
எக்ஸ் மென் பட வரிசையில் இது 11வது படமாகும்.. எக்ஸ்-மென் வரிசையைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் ரசிக்கவே முடியாமல் புரியாமல் கூட போகலாம்.. கதை… எரிபொருள் டேங்கிற்குள் தீ வைத்து வேட் வில்சன் தற்கொலை செய்ய முயல்கிறார்.. அப்போது முதல் படம் தொடங்குகிறது… பொதுவாகவே ஆங்கில படங்களை டப்பிங் செய்யும் போது தமிழில் ஏகப்பட்ட வசனங்கள் தமிழ் ரசிகர்களின் ரசனைக்காக காமெடிக்காக சேர்க்கப்படும்.. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.. காமெடி என்ற பெயரில் அடல்ட் ஒன்லி ஜோக்குகளை வைத்து குழந்தைகளை பார்க்க விடாமல் செய்து விட்டனர்.. அதிலும் ஏகப்பட்ட கேரக்டர்கள் பேசுகிறது பேசுகிறது.. பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.. கேன்சர் நோயாளி வேட் வில்சன் (ரையான் ரெனால்ட்ஸ்), தன் காதலியோடு (மொரேனா பாக்கரின்) குழந்தை பெற திட்டமிடுகிறான். அதற்குள் அவரின் காதலியை எதிரிகள் கொன்றுவிட, தானும் இறக்க…
Read Moreஎன் கேரியரில் சிறந்த கதாபாத்திரம் – நடிகை மேகா ஆகாஷ் நெகிழ்ச்சி !!
ஸ்டைலிஷ் கதாநாயகி, பக்கத்துவீட்டுப் பெண் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்திப் போகும் கதாநாயகிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளத்தோடு வரவேற்பார்கள். அப்படிபட்ட திறமையான நடிகைகளில் மேகா ஆகாஷும் ஒருவர். ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார். படம் குறித்தானத் தனது அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார், “விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களைத் தருவார். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைக் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறது என்பதுதான். நான் நினைத்தது போலவே, படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. நடிகராக என் திறமையை வெளிப்படுத்த இந்த கதாபாத்திரம்…
Read Moreவெளியானது யோகி பாபுவின் “சட்னி சாம்பார்” சீரிஸ் : முன் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், ‘சட்னி – சாம்பார்’. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அஸ்வின் பேசியதாவது… வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், நாங்கள் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. பெரிய நட்சத்திரங்களை வைத்துத் தயாரித்துள்ளோம், ஹாட்ஸ்டார்க்கு எங்களது நன்றி. இயக்குநர் ராதா மோகன் மிக அற்புதமாக இயக்கியுள்ளார். இரண்டு எபிஸோட்…
Read More“’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நான் இணை ஹீரோ” – நடிகர் சரத்குமார்!
சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி நடிகர் சரத்குமார் உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார், “விஜய் மில்டனின் முந்தைய படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெவ்வேறு ஜானர்களை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். இருப்பினும், அவர் என்னிடம் கதை சொன்னபோது இந்தப் படத்தில் எனது…
Read Moreமறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்த ‘ஜமா’, – நடிகை அம்மு அபிராமி!
நடிகை அம்மு அபிராமி பல நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது இந்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளிவரவிருக்கும் ‘ஜமா’ திரைப்படத்திலும் இவர் நம்பிக்கைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அம்மு அபிராமி கூறும்போது, “எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ’ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை அளித்துள்ளது, இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இசையமைப்பாளர் இளையராஜா சாரின் இசையில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக இருக்கும். எனக்கு…
Read Moreபிரபு சாலமன் படத்தில் நாயகனாகும் வனிதா விஜயகுமாரின் மகன்.. நிஜ சிங்கத்துடன் படப்பிடிப்பு!!
தமிழ் சினிமாவின் மெலோடி கூட்டணி என்று அழைக்கப்படுபவர்கள் இசையமைப்பாளர் இமான் மற்றும் இயக்குனர் பிரபு சாலமன்.. இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இயக்குநர் பிரபு சாலமன் அடுத்ததாக MAMBO ‘மாம்போ’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படம் உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட முதல் ஆசியப் படம் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் நடிகர் விஜயகுமாரின் பேரனும், வனிதா விஜயகுமார் – ஆகாஷ் தம்பதிகளின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’பெண்ணின் மனதை தொட்டு’, ’தேவதையை கண்டேன்’, ’பேரரசு’ போன்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தயாரிப்பாளர் எம்.காஜா மைதீனின் ‘ரோஜா கம்பைன்ஸ்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைப்பட தயாரிப்பை தொடங்கியுள்ளது. இந்தப்…
Read More