பிதா 23 : 23 – சினிமா விமர்சனம்

காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட ஒரு தொழில் அதிபரையும், தனது அக்காவையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை… ஒரு தொழில் அதிபரை அவரது டிரைவருடன் கடத்தி வைத்து விட்டு அவரது மனைவியிடம் 25 கோடியை கேட்கின்றனர் ஆதேஷ் பாலா சாம்ஸ் & மாரீஸ் ராஜா.. இவர்களை கடத்திக் கொண்டு போகும் வழியில் நாயகி அனு-வையும் கடத்திக்கொண்டு அவரையும் அடக்கி வைத்து இருக்கின்றனர்.. தன் அக்காவை தேடி மாஸ்டர் ஹர்ஷித் அங்கு வருகிறான்.. அவன் என்ன சாகசங்கள் செய்தான்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர்கள் அனைவரும் தங்கள் பணிய சிறப்பாக செய்திருக்கின்றனர்.. ஒரே இரவில் நடக்கும் கதையை…

Read More

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்குக் கொண்டாட்டாட்டம்… தயாராகிறது 131வது படம்!!

  கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின் 131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவன்னாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது. சிவண்ணாவின் 131வது படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று சிவண்ணாவைச் சந்தித்தது. இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் எடிட்டர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில்…

Read More

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் -இன் 12ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

  *பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!* லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லுதீர் பைரெட்டி இயக்குகிறார். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் திரைவாழ்வில் மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தை சிவன் ராமகிருஷ்ணா வழங்குகிறார்.  …

Read More

“பிதா” படத்தை பாராட்டும் பிரபலங்கள்!

‘பிதா’ படத்தின் போஸ்டரை இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்! ஜூலை 26’ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23′ மணி நேரம், 23′ நிமிடங்களில் எடுக்கப்பட்ட ‘பிதா’ படம் திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் அனைவருமே படத்தையும், பட குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்கள்! தயாரிப்பாளர்கள் ஜி.சிவராஜ், அன்புச் செழியன், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ், இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, கேபிள் சங்கர், எஸ்.சுகன், நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், ஆதேஷ் பாலா, சாம்ஸ், சம்பத்ராம், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரிஸ் ராஜா, மாஸ்டர் தர்ஷித், நடிகை ரிஹானா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘பிதா’! எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில்…

Read More

16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் கலர்ஸ் ஆஃப் கோலிவுட் – எ மெலனின் டெஃபிசியன்ஷி

சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் (அடையார் திரைப்பட கல்லூரி) நான்காம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ – BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் இடம்பிடித்துள்ளது. ‘கலர்ஸ் ஆஃப் கோலிவுட் – எ மெலனின் டெஃபிசியன்ஷி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரோ சலில் இயக்கியுள்ளார். இருபது வயதே ஆன அவரும் அவரது கல்லூரி குழுவினரும் ஐந்தாவது செமஸ்டர் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஆவணப்படம் பற்றி பரோ சலில் கூறுகையில், “வெள்ளை சருமத்தின் மீதான விருப்பம் இந்தியர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ளது, தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடனான…

Read More

SJ சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் : நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” வீடியோ வெளியாகியுள்ளது !!

  நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோ வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக, ஒரு அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வாய்ஸ் ஓவரில் தீமையின் சக்தி வலுவடையும்போதெல்லாம், அதைத் தடுக்க அதற்குச் சமமான அல்லது அதைவிட சக்தி வாய்ந்த நல்ல சக்தி உண்டாகும் எனும் ஒரு…

Read More

அதர்வா நடிப்பில் உருவான டிஎன்ஏ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! ‘டாடா’ போன்ற வெற்றித் திரைப்படங்களின் தயாரிப்பாளரான எஸ். அம்பேத் குமார் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் ‘டிஎன்ஏ’ படத்தை இயக்கியுள்ளார். திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. தன் கதை மீதும் தன் மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் படம் பற்றி பேசுகையில், “‘டிஎன்ஏ’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கதையை சொன்னபடியே படமாக்கியதில் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். அதர்வா முரளி இந்தப் படம் முடியும் வரை…

Read More

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்

  ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி கட்டு’ என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், ‘ஆட்டோகிராப்’ மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில், தனது தொய்வில்லாத திரைப் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்க உள்ளார் சேரன். பெரிதும் பாராட்டப்பட்ட ‘இஷ்க்’ மலையாள வெற்றி படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் முக்கிய வேடத்தில் சேரன் நடிக்கிறார். ‘நரிவேட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அனுராஜ் மனோகரின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 26 முதல் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.   மலையாள திரையுலகில்…

Read More

அன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன்

  அன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன். த்ரில்லர், ஹாரர் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டே நாட்களில் அதிக திரையரங்கில் அதிக காட்சிகளுடன் உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. D. இமானின் இசை, கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவு என யாவும் டீன்ஸ்ஸை ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற வைத்தது குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களுடன் திரையரங்கிற்கு வந்து டீன்ஸை பெரும் ற்றி பெறச் செய்தனர். இத்திரைப்படத்தில் பார்த்திபனின் மகள் கீர்த்தனா பார்த்திபன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பெரும் பங்களித்திருக்கிறார். இதனை முன்னிட்டு அன்பு இல்லத்தை சேர்ந்த நூற்றுக்கும்…

Read More

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் இசை வெளியீடு

திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது.‌ :தி ஃபேமிலி மேன்’, ‘ ஃபார்ஸி’ ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார். எதிர்வரும் ஆகஸ்ட்…

Read More