கம்பு சுத்தும் ஸ்ருதிஹாசன்.. ’கூலி’ படத்தில் ஆக்‌ஷன் பிளாக்?

உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சி… அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது. சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, ” எனது தந்தையும், பழம்பெரும் நடிகருமான கமல்ஹாசன் ‘தேவர் மகன்’ படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்பு…

Read More

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடந்த ’CorporArt’24’ கலாச்சார நிகழ்வில் சென்னையின் கார்ப்பரேட் திறமை மிளிர்கிறது!

பிரபல கலை இயக்குநர் உமேஷ் ஜே. குமார் மற்றும் இன்னோவேட்டிவ் கிரியேட்டிவ் இயக்குனர்/ ஈவண்ட்ஸ் ராகினி முரளிதரன் ஆகியோருக்குச் சொந்தமான, சென்னையின் முன்னணி ஈவண்ட்ஸ் மேலாண்மை நிறுவனங்களில் ஒன்று Renaissance Events. அரசு நிகழ்வுகள், கார்ப்பரேட் நிகழ்வுகள், தயாரிப்பு வெளியீடுகள், ஆடியோ வெளியீடுகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கான விழாக்களை நடத்தும் நிறுவனங்களில் Renaissance Events மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும். சென்னையின் மிகப்பெரிய இன்டர் கம்பெனி கல்ச்சுரல் விழாவான ‘CorporArt’-ஐ  நடத்துவதில் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இந்த நிகழ்வின் இறுதிப் போட்டி நாளை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னையின் கார்ப்பரேட் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த திறமையாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 277-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் 4000-க்கும் மேற்பட்ட பணியாளர்களின் படைப்பாற்றலை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கிறது. கடுமையான தேர்வுக்குப் பிறகு 4000 பணியாளர்களில் இருந்து 650 இறுதிப்…

Read More