கதை… தன் நண்பன் ரெட்டின் கிங்சிலியை தேடி சென்னைக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி.. அங்கு ஒரு வேலையாக தங்குகிறார்.. அப்போது நாயகி ரியாவை அடிக்கடி டிரெயினில் சந்திக்க சந்திக்க காதலும் கொள்கிறார். இதனிடையில் தேர்தல் நேரத்தில் ட்ரெயினில் அடிக்கடி அரசியல்வாதியின் கோடிக்கணக்கான கருப்பு பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொள்ளையனை தேடி போலீஸ் விசாரித்து வருகிறது. ஒரு கட்டத்தில் கொள்ளையனை போலீஸ் நெருங்கி துப்பாக்கி சூடு நடத்த முயலும் போது ஒருவன் விஜய் ஆண்டனி சுட்டு விடுகிறான்.. அப்பொழுது அவனை பிடித்து மிரட்டி கௌதம் மேனன் விசாரிக்கும் போது விஜய் ஆண்டனி தான் கொள்ளையன் என அந்த நபர் சொல்கிறார். அப்படி என்றால் விஜய் ஆண்டனி உண்மையில் யார்.? அவருக்கு கொள்ளை அடிப்பது நோக்கம் என்ன?என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை. நடிகர் – நடிகையர் : சமூக…
Read MoreMonth: September 2024
தில்ராஜா விமர்சனம்.. செம தில்லு
கதை… நாயகன் விஜய் சத்யா.. தன் மனைவி ஷெரின் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.. ஒருநாள் ஷாப்பிங் சென்று விட்டு இவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு அமைச்சரின் மகன் இவரிடம் பிரச்சனை செய்கிறார்.. மனைவி மகளைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்தும் சென்று விடுகிறார்.. ஆனால் மந்திரி மகன் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது.. இதனை எடுத்து போலீசின் கவனம் இவர் பக்கம் திரும்பி விடுகிறது… அதன் பிறகு என்ன நடந்தது? அமைச்சரிடம் இருந்து தப்பித்தாரா.? போலீஸிடம் இருந்து தப்பித்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர் – நடிகையர் : பாட்டு ஃபைட் என இரண்டிலும் அதிரடி காட்டி இருக்கிறார் நாயகன் விஜய் சத்யா.. கிளைமாக்ஸ் சீனில் சட்டையை கழட்டி விட்டு அவர் மோதும் சண்டை காட்சி வேற லெவல் ரகம்.. ஸ்மார்ட்டான இவருக்கு…
Read Moreகாம்தார் நகருக்கு எஸ். பி பாலசுப்பிரமணியன் சாலை என்று பெயரிட அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றிகள் – இயக்குநர் பாரதிராஜா
வணக்கம், காம்தார் நகருக்கு காந்தக் குரலோனின் பெயர் வைத்தது ஆகப் பொருத்தமான செயல். நாம் கடந்து வரும் நண்பர்கள் பிரிந்து போனதும் அவர்களைச் சுற்றிய நினைவுகளையும் சேர்ந்து கடந்துவிடுகிறோம். அப்படியில்லாமல் கடந்துபோன நிகழ்வுகளை மீட்டுத் திரும்பவும் வைத்துக்கொள்வதில் இருக்கிறது நம் பேரன்பு. அப்படி நம்மிடையேயும், காற்றோடும் இவ்வுலகின் அலையோடும் கலந்து நிற்பவர் இசைக் குரலோன் பத்மஸ்ரீ பத்ம விபூஷன் எஸ். பி. பி . அவர் வாழ்ந்த காம்தார் நகருக்கு எஸ். பி பாலசுப்பிரமணியன் சாலை என்று பெயரிட. அறிவித்துள்ள தமிழக அரசுக்கும்…மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றிகள். தமிழ்த் திரையுலகிற்கு முதல்வர் அவர்கள் செய்துவரும் நலன்களும்… திரைத்துறையினரின் மீது கொண்டுள்ள அன்பும்… அவர்களுக்காக முன்னின்று செய்யும் ஆக்கமிகு செயல்களும் மிக மிக நன்றிக்குரியவை. மிகப்பெரும் நன்றிக்…
Read Moreமெய்யழகன் விமர்சனம்.. உறங்காத உறவுகள் 4.5/5
கதை.. தஞ்சாவூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் அரவிந்த்சாமி.. சொத்து பிரச்சனை காரணமாக இவரது குடும்பம் தனித்துவிடப்பட பெற்றோருடன் சென்னையில் குடியேறுகிறார். திருமணம் ஆகி மனைவி தேவதர்ஷினி மற்றும் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமி ஒரு கட்டத்தில் தன் சித்தி மகள் திருமணத்திற்காக தன் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு செல்லும் அரவிந்தசாமி அங்கு கார்த்தியை சந்திக்கிறார். சிறு வயது முதலே அரவிந்த்சாமி மீது அதீத பாசம் கொண்ட கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார்.. ஆனால் கார்த்தி யார் என்று கூட தெரியாமல் வேறு வழி இல்லாமல் அவருடன் கொஞ்சமாக பேசுகிறார்.. போன் நம்பர் கொடுப்பதை கூட தவிர்க்கிறார். இவர் யார்.. இவர் நமக்கு எதற்காக செய்ய வேண்டும்.. அத்தான் அத்தான் என்று…
Read Moreநடுக்கடலில் சொகுசுக் கப்பலில் வெளியான “பன் பட்டர் ஜாம்” படத்தின் செகண்ட் லுக் !!
Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “பன் பட்டர் ஜாம்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது லுக், நடுக்கடலில் கோர்டிலியா குரூஸ் சொகுசுக்கப்பலில், வெளியிடப்பட்டது. தமிழ் திரை வரலாற்றில் முதல் முறை, ஒரு சொகுசுகப்பலில் ஒரு திரைப்படத்தின் போஸ்டர் வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் படக்குழுவினர் அங்குள்ள பயணிகளுடன் உரையாடி, படத்தினைப்பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். படக்குழுவினர் இந்நிகழ்வின் கிளிம்ப்ஸே வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவ்வீடியோ தற்போது இணையமெங்கும் வைரலாக பரவி…
Read Moreகன்னியாகுமரி லெமூர் கடற்கரை கேஸில் திருப்பம்: விஷால் மேனேஜரின் மனுவுக்கு ஆணையர் பதில்
கன்னியாகுமரி லெமூர் கடற்கரை விவகாரம் குறித்து முதலமைச்சருக்கும் மனு கொடுத்த விஷால் மேனேஜர், சுற்றுலா ஆணையரிடம் இருந்து வந்த பதில் கடிதம் கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் V.ஹரிகிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு மனு ஒன்றை கொடுத்திருந்தார். கடந்த 06: 05: 2024 அன்று நடிகர் விஷால் அவர்களின் மேனேஜர் ஹரிகிருஷ்ணன் தன் குடும்பத்தினருடன் கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருந்தபோது அங்கே லெமூர் கடற்கரையில் திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த பயிற்சி மருத்துவ மாணவ மாணவிகள் கடலில் சிக்கி உயிருக்கு போராடி அதில் சிலர் இறந்தார்கள் என்பது செய்தியாக. அந்த துயரமான நிகழ்வு நடக்கும்போது ஹரிகிருஷ்ணனும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் அங்கு இருந்த உள்ளூர் நபர்கள் உதவியுடன் ஒரு சிலரை மட்டும் காப்பாற்ற…
Read Moreசட்டம் என் கையில் – விமர்சனம்
கதை… ஏற்காட்டில் ஓர் இரவு நேரத்தில் காரில் தனியாக பயணம் செய்து கொண்டிருக்கிறார் நாயகன் சதீஷ்.. ஏற்கனவே மன உளைச்சலில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென டூவீலரில் வந்த ஒருவன் மீது இடித்து விடுகிறார் சதீஷ்.. அந்த விபத்தில் மரணம் அடைந்த அவரை வேறு வழி இல்லாமல் கார் டிக்கியில் போட்டுக் கொண்டு பயணம் செய்கிறார். காட்டுப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபடும்போது குற்றத்திலிருந்து தப்பிக்க சரக்கு அடித்தது போல் நடிக்கிறார்.. மேலும் போலீஸ் பாவல் நவகிதனே அடித்து விடுகிறார்.. இதனை எடுத்து போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு அனைத்து வழக்குகளையும் சதீஷ் மீது போட காவல்துறை திட்டமிடுகிறது.. ஆனால் போலீஸ் பாவல் மீது மற்றொரு போலீஸ் அஜய் ஈகோ மோதலில் இருக்கிறார். இதனை பயன்படுத்த திட்டமிடுகிறார் சதீஷ். அதன் பிறகு சதீஷ் என்ன செய்தார்…
Read Moreதமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கீழே உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு : நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி, திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும் 1, பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும். அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களில் படம் 6 வாரங்கள் கழித்தும் OTT யில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம். 2, தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். 3, சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது அரசாங்க கவனத்திற்கு 1, திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி…
Read Moreவிஜய் சேதுபதியின் பிக்பாஸ் சீசன் 8: அக்டோபர் 6ல் தொடங்குகிறது!
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது. சமீபத்தில் மிகப்புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8ன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மிகப்பெரும் புகழைப்பெற்று, மக்களின் மனங்களில் இடம்பிடித்த நிகழ்ச்சி, பிக்பாஸ். கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன், கோலாகலமாக அறிவிக்கப்பட்டது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அசத்தலான ப்ரோமோ, வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது புதிய சீசன் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை…
Read Moreரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்!!
தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள், துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக ( Private Show) திரையிடப்பட்டது. இதனை ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார். பிறந்த நாளன்று துருவ் விக்ரம் ரசிகர்களை சந்தித்து கொண்டாடியது… ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இந்நிகழ்வை அகில இந்திய சீயான் விக்ரம் நற்பணி மன்ற தலைவரும், மேலாளருமான திரு. சூரிய…
Read More