கதை…
ஏற்காட்டில் ஓர் இரவு நேரத்தில் காரில் தனியாக பயணம் செய்து கொண்டிருக்கிறார் நாயகன் சதீஷ்..
ஏற்கனவே மன உளைச்சலில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென டூவீலரில் வந்த ஒருவன் மீது இடித்து விடுகிறார் சதீஷ்.. அந்த விபத்தில் மரணம் அடைந்த அவரை வேறு வழி இல்லாமல் கார் டிக்கியில் போட்டுக் கொண்டு பயணம் செய்கிறார்.
காட்டுப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபடும்போது குற்றத்திலிருந்து தப்பிக்க சரக்கு அடித்தது போல் நடிக்கிறார்.. மேலும் போலீஸ் பாவல் நவகிதனே அடித்து விடுகிறார்.. இதனை எடுத்து போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
அங்கு அனைத்து வழக்குகளையும் சதீஷ் மீது போட காவல்துறை திட்டமிடுகிறது.. ஆனால் போலீஸ் பாவல் மீது மற்றொரு போலீஸ் அஜய் ஈகோ மோதலில் இருக்கிறார்.
இதனை பயன்படுத்த திட்டமிடுகிறார் சதீஷ். அதன் பிறகு சதீஷ் என்ன செய்தார் காவல்துறையிடம் இருந்து எப்படி தப்பித்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
இடைவேளை வரை பாவல் மற்றும் அஜய் இருவருமே போலீசாக தங்கள் நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர்.. இவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பது தெரியாத அளவிற்கு இருவரும் மாறுபட்ட நடிப்பு கொடுத்திருக்கின்றனர்..
சதீஷ்க்கு பெரும்பாலும் முதல் பாதியில் வேலை இல்லை.. ஆனால் இரண்டாம் பாதியில் மட்டும் அவர் எதற்காக இந்த கொலைகளை செய்தார் என்பதை அடுத்தடுத்து திருப்பங்கள் அதிர வைக்கிறது.. படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்றாகும். படத்தில் இரண்டு மூன்று நாயகிகள் இருந்தும் சதீஷுக்கு ஒருவரும் ஜோடி இல்லை..
பல படங்களில் நாயகியாக நடித்த வெண்பா இதில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் போல வந்து செல்கிறார்..
போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வரும் பாவா செல்லதுரை, ராமதாஸ் உள்ளிட்டூர் அனைவரும் நடிப்பு ரசிக்கத்தக்கது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பி ஜி முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை.. முக்கியமாக இரவு நேர காட்சிகளை ஏற்காட்டில் படம் பிடித்திருப்பது சிறப்பு.. ஜோன்ஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார் படத்தில் மிரட்டல் இசையை கொடுத்து சீட்டு நுனியில் உட்கார வைத்து விட்டார்..
சாச்சி படத்தை இயக்கியிருக்கிறார்.. சட்டத்தை ஒருவன் கையில் எடுக்கும் சிறுகதையாக இருந்தாலும் அது திரில்லருடன் கலந்து கொடுத்திருப்பது சிறப்பு.. படத்தின் கிளைமாக்ஷில் ஏகப்பட்ட திருப்பங்கள் இருப்பதால் கதையை முழுவதும் விவரிக்க முடியாது..
ஆக சட்டம் என் கையில்.. திரில்லர்