‘All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் செப்டம்பர் 21, 2024 முதல் கேரளாவில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படம் இந்திய திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் வரலாறு படைத்தது. அங்குள்ள மதிப்புமிக்க கிராண்ட் பிரிக்ஸை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றது. ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தப் படத்தின் இந்திய விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. ஜிகோ மைத்ரா, சாக் அண்ட் சீஸ் பிலிம்ஸ் மற்றும் ரணபீர் தாஸ், அனதர் பர்த் ஆகிய படங்களைத் தயாரித்தவர்களே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் வாரத்தில் இந்திய மொழிகளில் ஒன்றான மலையாளத்தில் வெளியாகிறது. கேரளாவில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே படத்தை…

Read More

கடைசி உலகப்போர்- திரை விமர்சனம்

இதுவரை நட்பு ரொமான்ஸ் என பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் ஹிப் ஹாப் ஆதி… இந்த முறை நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர் என ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷனில் இறங்கி வித்தியாசமான ஒரு படைப்பை கொடுக்க முயற்சித்து இருக்கிறார். கதை… 2028 ல் நடக்கும் கதையை வடிவமைத்திருக்கிறார்.. ஐ நா சபைக்கு போட்டியாக ரிபப்ளிக் என்ற அமைப்பு உருவாகுகிறது.. அதில் இணைந்து கொள்ள இந்தியா மறுக்கும் போது அத்துமீறி இந்தியர்களை கைக்குள் கொண்டு வருகிறது அந்த அமைப்பு.. அப்போது மோதல் போர் வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.? ஆதியின் பங்கு என்ன என்பதுதான் மீதிக்கதை.. நடிகர்கள்… படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி என்றாலும் படம் முழுக்க வருவதும் வாய்ஸ் ஓவரில் பேசுவதும்…

Read More

ARR ஃபிலிம் சிட்டி – சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

முழுமையான தொழில்நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக்கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம் சிட்டியில் தன் புத்தெழுச்சியான பயணத்தைத் 22nd September 2024 அன்று தொடங்குகிறது. ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் uStream உருவாகிறது. இந்திய சினிமாவின் புதிய யுகத்தை வரவேற்க வழிவகுப்பதாய் இது வடிவம் எடுத்திருக்கிறது. வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டூடியோவில், கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்தக்கணத்திலேயே கண் முன் காட்சிப்படுத்த முடிகிறது. இந்த நவீன டிஜிட்டல் நுட்பத்தைக் உலகப்பதிவுகள், அக்கணத்தின் கற்பனைக்காட்சிப்படுத்துதல், செயல்திறன் பதிவு, பல மெய்நிகர் காட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் simulcam நுட்பம், கேமராவினுள்ளேயே செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் (ICVFX) கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத்துறையில் முன்னணியில் இருக்கிறது uStream. நவீன அம்சங்கள் மற்றும் விரிவுபடுத்தக்கூடிய…

Read More

ஜாக்கி சான் நடிக்கும் ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது

உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது சமீபத்திய ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் விரைவில் வெளியிடுகிறது. ஸ்டான்லி டாங் இயக்கியிருக்கும் இத்திரைப்படம், ‘தி மித்’ சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். பரபர சண்டைகள், விறு விறு சாகசங்கள், உள்ளத்தை தொடும் உணர்வுகள், கற்பனைக்கு எட்டாத காட்சிகள் என கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜாக்கி சான், லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென், பெங் சியோவ்ரான் மற்றும் ஜெங் யெச்சென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தற்கால அகழ்வாராய்ச்சி நிபுணர் மற்றும் முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இளம்…

Read More

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த திரைப்படத்திற்காக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார். கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார். புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார், தினேஷ் பொன்னுராஜ் படதொகுப்பை கவனிக்க,…

Read More

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ இசை வெளியீட்டு விழா!

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார். இந்த…

Read More

நந்தன் – திரைவிமர்சனம்

கதை… புதுக்கோட்டை மாவட்டம் வனங்கான்குடி என்ற பகுதியில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் இரா சரவணன்.. போட்டியே இல்லாத ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் பாலாஜி சக்திவேல்… இவரது வீட்டில் அப்பாவுக்கு பணிவிடை செய்யும் ஒரு வேலையாளாக இருக்கிறார் சசிகுமார்… இவர்களின் பகுதி தலித்துகளுக்கான ரிசர்வ் பகுதியாக மாற்றப்படுகிறது. இதனை அடுத்து வேறு வழி இன்றி தன் வீட்டில் பணிபுரியும் சசிகுமாரை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட வைத்து ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார். பாலாஜி சக்தி வீட்டில் வேலை செய்த சசிகுமார் ஊராட்சி மன்ற தலைவரான பின்னர் என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை. நடிகர்கள்.. சசிகுமார் தன்னுடைய முழு உழைப்பை கொடுத்து அம்பேத்குமார் என்ற கேரக்டரை அசத்தலாக வடிவமைத்து இருக்கிறார்.. ஒரு கமர்சியல் ஹீரோ இந்த அளவிற்கு துணிந்து செய்ய தயங்குவார்..…

Read More

கோழிப்பண்ணை செல்லத்துரை விமர்சனம்

கதை… ஐஸ்வர்யா தத்தாவின் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவர் ஊரில் இல்லாததால் இவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்.. இதனை அறிந்து கொண்ட கணவர் இவர்களை தீர்த்து கட்ட முயற்சிக்கிறார்.. எனவே குழந்தைகளையும் கணவனையும் தவிக்க விட்டு கள்ளக்காதனுடன் ஓடி விடுகிறார் ஐஸ்வர்யா தத்தா.. அம்மாவும் ஓடி விட்ட நிலையில் அப்பாவும் இவர்களை துரத்தி விடுகின்ற சூழ்நிலையில் நாயகன் ஏகன் மற்றும் அவரது தங்கை சத்யதேவி இருவரும் இவர்களின் பெரியப்பா யோகி பாபு வளர்ப்பில் வளர்கின்றனர். அதன் பிறகு இவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன? தந்தை தாய் இல்லாத இந்த குழந்தைகள் என்னென்ன போராட்டங்களை சந்தித்தனர் என்பதை வலிகளுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.. நடிகர்கள்… நாயகன் ஏகன்… முதல்…

Read More

தோழர் சேகுவாரா திரைப்பட விமர்சனம்

கதை… ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயகன் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறார்.. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையிலும் தடைகளைத் தாண்டி கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் வில்லனுக்கும் இவருக்கும் அடிக்கடி மோதல் வலுக்கிறது. இந்த கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார் சத்யராஜ். இந்த சூழ்நிலையில் கல்லூரி கேண்டினில் பணி புரியும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தி விடுகிறார் வில்லன்.. இதனை அடுத்து நாயகன் அவரை அடித்து துவைத்து விடுகிறார். பலர் முன்னே தன்னை அவமானப்படுத்திய நாயகனை தீர்த்து கட்ட முடிவு எடுக்கிறார் வில்லன்.. அதன் பின்னர் என்ன நடந்தது?இருவருக்குமான மோதல் தீர்வுக்கு வந்ததா? என்பது மீதிக்கதை.. நடிகர்கள்… இதில் சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நட்சத்திர அடையாளத்திற்காக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.. இவர்களோடு படத்தின் இயக்குநர்…

Read More

எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘#நானிஓடெல்லா 2’

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் ‘#நானிஓடேலா 2’ படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் தனித்துவமான நடிப்பால் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ‘#நானிஓடேலா 2 ‘ அறிவிப்பு மூலம் மீண்டும் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ‘தசரா’ படத்தின் மூலம் நூறு கோடிக்கு மேல் வசூலித்த வெற்றி கூட்டணியான நானி- ஓடேலா மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ‘தசரா’ படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என உறுதியளிக்கும் வகையில் புதிய திரைப்படத்தில் இந்த இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். குறிப்பாக ‘தசரா படத்தினை விட நூறு மடங்கு அதிகமாக பார்வையாளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய படம் உருவாகும்’ என…

Read More