கதை…
ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயகன் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறார்.. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையிலும் தடைகளைத் தாண்டி கல்லூரியில் சேர்கிறார்.
அதே கல்லூரியில் படிக்கும் வில்லனுக்கும் இவருக்கும் அடிக்கடி மோதல் வலுக்கிறது.
இந்த கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார் சத்யராஜ்.
இந்த சூழ்நிலையில் கல்லூரி கேண்டினில் பணி புரியும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தி விடுகிறார் வில்லன்.. இதனை அடுத்து நாயகன் அவரை அடித்து துவைத்து விடுகிறார்.
பலர் முன்னே தன்னை அவமானப்படுத்திய நாயகனை தீர்த்து கட்ட முடிவு எடுக்கிறார் வில்லன்..
அதன் பின்னர் என்ன நடந்தது?இருவருக்குமான மோதல் தீர்வுக்கு வந்ததா? என்பது மீதிக்கதை..
நடிகர்கள்…
இதில் சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இவர்கள் நட்சத்திர அடையாளத்திற்காக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்..
இவர்களோடு படத்தின் இயக்குநர் அலெக்ஸ் மற்றும் தயாரிப்பாளர் அனிஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நாயகன் வில்லன் என தங்கள் கேரக்டர்களில் ஸ்கோர் செய்ய முயற்சித்துள்ளனர்..
வில்லனைப் பார்த்தால் நமக்கே பல இடங்களில் எரிச்சல் வருகிறது.. சாந்தமான நாயகன் பல இடங்களில் சரவெடியாய் வெடித்திருக்கிறார்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பிஎஸ் அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தை அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்துள்ளார்… உலகப் புகழ் பெற்ற புரட்சி போராளி ‘தோழர் சேகுவாரா’ பெயரில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது..
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் முன்னுக்கு வரலாம்.. அவர்களுக்கு பல தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து புரட்சி செய்யலாம் என்ற நல்ல நோக்கத்தோடு படத்தை கொடுக்க முயற்சித்துள்ளனர்.. ஆனால் அதற்குள் வன்முறையை கொடுத்து படம் முழுக்க ரத்தத்தை தெறிக்க விட்டு உள்ளனர்.. குறைந்த பட்ஜெட்டில் ஒரு புரட்சியான படத்தை கொடுக்க முயற்சித்துள்ளனர்..