தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, கத்தி சண்டை, பிகில் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த பிறகு அவருக்கு நெருக்கமான இவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். அதன்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெயர் அறிவிக்கப்பட்டு, கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியுடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்ற நடிகர் சௌந்தரராஜா கோவில் சன்னதியில் கட்சி கொடியை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் குறித்து தொலைகாட்சி…
Read MoreMonth: October 2024
மிகத் தரமான, தைரியமான திரைப்படம் நந்தன்” – நடிகர் Rajinikanth பாராட்டு!
நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘நந்தன்’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்… ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்’ என பாராட்டினர். விமர்சகர்களும் ‘நந்தன்’ திரைப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் – விமர்சகர்கள்- திரையுலகினர் – திரையுலக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘நந்தன்’ திரைப்படம் , அண்மையில் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. ‘நந்தன்’ திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி பிரமுகர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார்…
Read Moreமாலை 5 மணிக்கு திரைத்துறையின் சிறப்பு ஆளுமைகளுடன் ‘முதல் பார்வை’ அறிமுகம்
வணக்கம். நான் இயக்குநர் மீரா கதிரவன். இன்று மாலை 5 மணியளவில் என்னுடைய மூன்றாவது திரைப்படத்தின் முதல் பார்வையை ( *First Look poster* ) நான் மதிக்கும் திரைத்துறையின் முக்கிய ஆளுமைகள் இணைந்து வெளியிடுகிறார்கள். இந்தப் படத்தை எனது கனவுப்படம் என்றும் சொல்லலாம். இதுபோன்ற ஒரு படம்தான் எனது முதல் படமாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். எனக்கு இதை சாத்தியப்படுத்த இருபது வருடங்களாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் வரலாற்றின் பயணத்திலிருந்து பார்த்தால் நூறு ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றும் சொல்லலாம். எல்லாப் பாகுபாடுகளையும் கடந்து அன்பையும், மனிதத்தையும் விரும்புகிற பலரின் கனவாகவும் இது இருப்பதால் உங்களுடைய பங்களிப்பும் முக்கியமாக இருக்க வேண்டுமெனக் கருதுகிறேன். அன்பிற்குரிய நண்பர்கள் மற்றும் மரியாதைக்குரிய பத்திரிகை, ஊடக நண்பர்கள் தங்கள் வாட்ஸப் குழுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் இப்படத்தின் முதல்…
Read Moreடிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள்… கெத்து, அன்பு இருவரும் விருந்து கொடுக்க வருகிறார்கள்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அக்டோபர் 31 முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘லப்பர் பந்து’ படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! ப்ளாக்பஸ்டர் “லப்பர் பந்து” அக்டோபர் 31 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும்…
Read Moreஒற்றை பனைமரம் – திரை விமர்சனம்
இறுதிப் போருக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வீரர்கள் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் ஒருவரான நாயகி நவயுகாவை காப்பாற்றி, அடைக்கலம் கொடுக்கும் நாயகன் புதியவன் ராசையா, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக இருந்த சிறுமிக்கும் அடைக்கலம் கொடுத்து தனது மகளாக வளர்க்கிறார். அவரோ கர்ப்பிணி மனைவியை ராணுவத்தின்குண்டு வீச்சுக்கு பறி கொடுத்தவர். ஆனால் போருக்குப் பிறகான வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை. “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியதுதானே” என முன்னாள் போராளிகளை சக மனிதர்கள் சிலர் கேட்கும் அளவுக்கு அங்கே விரக்தி கொட்டிக் கிடக்கிறது. போரில் அனைத்தையும் இழந்து வறுமையிலும் வெறுமையிலும் உழலும் அப்பாவி கைம்பெண்கள் சிலரை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி பணிய வைக்கின்றனர். ஆண் போராளிகளில் சிலரோ வயிற்றுப்பாட்டுக்காக, அடிதடியை தொழிலாக செய்யத்…
Read More‘கடைசி உலகப் போர் -ஸ்வாக் – லைக் எ டிராகன்: யாகுசா ஆகிய மூன்று படைப்புகளையும் பிரைம் வீடியோவில் ஆஃபருடன் காணத்தவறாதீர்கள்
இந்த வார இறுதியில் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. பரபரப்பான டிஸ்டோபியன் தமிழ் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘கடைசி உலகப் போர் ‘ – தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான ‘ஸ்வாக்’ மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய மொழியில் வெளியான கிரைம் ஆக்சன் தொடரான ‘லைக் எ டிராகன்: யாகுசா’. இந்த மூன்று புதிய வெளியீடுகளை தவற விடாதீர்கள்! கடைசி உலகப் போர் : 2028 ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்ட ஒரு டிஸ்டோபியன் அறிவியல் புனைவு கதை மற்றும் தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமாகும். கதை- அரசியல் மோதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் டிஸ்டோபியன் எதிர்காலத்தில் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவற்றை கருப்பொருளாக ஆராய்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள்…
Read Moreதிருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, “சார்” பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு !!
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் பட வெற்றியைக் கொண்டாடியுள்ளது படக்குழு. கடந்த வாரம் வெளியான “சார்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்வி எனும் ஆயுதம் நம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தையும், கிராமப்புற ஆசிரியர்களின் வலிமிகுந்த தியாகத்தையும், அழுத்தமாக பேசியுள்ள இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்திற்கு தமிழகமெங்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் மக்களின் பேராதரவில், பெரும் வரவேற்பைப் பெற்ற, “சார்” படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், இயக்குநர் போஸ் வெங்கட்,…
Read More’செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ படங்களின் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் அடுத்தப் படைப்பு ‘பிரேக் பாஸ்ட்’!
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரேம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெங்கடேஷ்வரா கார்மெண்ட் நிறுவனம் முதன் முறையாக திரைப்படத்துறையில் தடம் பதிக்கிறது. ’நிலாகாலம்’, ‘செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் காந்தி கிருஷ்ணா ’பிரேக் பாஸ்ட்’ என்ற புதிய படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு கவி பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்க, படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தத் தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகியுள்ள இந்தப் பாடல்கள் வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ராணவ், ரோஸிமின், கிருத்திக் மோகன் மற்றும் அமித்தா போன்ற திறமைமிக்க புதுமுகங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இரண்டு முறை ஊர்வசி பட்டம் வாங்கிய அர்ச்சனா, சம்பத்ராஜ், கஸ்தூரி, மதன் பாப், ரவி மரியா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், மேஹாஶ்ரீ, இயக்குநர்…
Read Moreதளபதி விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி சர்பிரைஸ் கொடுக்கப் போகும் ’தீபாவளி போனஸ்’ திரைப்படம்!
ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எதார்த்தமான வாழ்வியலாகவும், குடும்பத்தோடு பார்க்கும் கமர்ஷியல் படமாகவும் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் பல தரமான சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வரும் ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதோடு, படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பர பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது முயற்சியின் மூலம் ‘தீபாவளி போனஸ்’ சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின்…
Read Moreஅமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்த “போகுமிடம் வெகு தூரமில்லை” திரைப்படம் !!
Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற “போகும் இடம் வெகு தூரம் இல்லை” திரைப்படம், தற்போது ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படக்குழுவை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக, 2024 ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் கடந்த இப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. அமேசான்…
Read More