ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும்  நிரஞ்சன் சுதீந்திரா  நடிக்கும் சீதா பயணம் !!

ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார். மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும்  இப்படத்திற்கு ‘சீதா பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார். சீதா மிகப் புதுமையான ஆற்றல் மிகு பாத்திரம், உணர்வுரீதியாக மிக அழுத்தமான தைரியமான பாத்திரம், இப்பாத்திரத்தில் தன் தனித்துவமான நடிப்பின், முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரது பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும். ஐஸ்வர்யாவின்…

Read More

‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, “’லக்கி பாஸ்கர்’ படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சினிமாத் துறையில் மிகப்பெரிய கம்பெனி. இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றது போலவும் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. லக் என்றால் அதிர்ஷ்டம். நாம் ஒரு விஷயத்திற்கு தயாராக இருக்கும்போது வரும் வாய்ப்புதான் அதிர்ஷ்டம் என்போம். துல்கர் திறமையான நடிகர். அப்பா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நம்மிடம் எளிமையாகப் பழகுவார். பழைய பாம்பேவை நம் கண் முன்னே செட் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெங்கி அட்லூரி…

Read More

பிரபாஸின் பிறந்தநாளில் ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது !!

ஹாரர் காமெடி ஜானரில் கலக்கும் பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் வெளியானது !! மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாரான பிரபாஸின் பிறந்தநாளில், அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் போஸ்டர், தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. முதல் முறையாக ஹாரர் காமெடி ஜானரில் பிரபாஸ் களமிறங்குகிறார். இது படத்தின் மீதான ஆவலை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 2 நிமிட மோஷன் போஸ்டர் காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் “ஹேப்பி பர்த்டே” ட்யூனுடன் துவங்குகிறது. பின்னர், ஒரு மர்ம உருவம் காடுகளில் சுற்றித் திரிவதைப் பிந்தொடர்ந்து, பார்வையாளர்களை விண்டேஜ் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு இறுதியாக…

Read More

தனித்துவமிக்க படைப்பாளியாக வெற்றி பெற்றிருக்கும் போஸ் வெங்கட்!!

தமிழ் திரைத்துறையில் தான் இயக்கிய முதல் இரண்டு படங்களிலேயே சமூக அக்கறை மிக்க தனித்துவமிக்க படைப்பாளி எனும் பாராட்டைப் பெற்றிருக்கிறார் நடிகர் இயக்குநர் போஸ் வெங்கட்.  சமீபத்தில் SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில் உருவான, “சார்”  கல்வியின் அவசியம் மற்றும் சமூக மாற்றத்தைப் பேசும் அழுத்தமான படைப்பு என்ற பாராட்டைப் பெற்றுள்ளது. தமிழ் தொலைக்காட்சித் தொடரில் துணை நடிகராக  அறிமுகமான போஸ் வெங்கட் மிக விரைவிலேயே, தன் தனித்துவமான நடிப்புத் திறமையால் நல்ல நடிகன் என மக்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்தகட்டமாக வெள்ளித்திரையிலும் தன் பன்முகத் திறமையால் வெற்றி பெற்றார். ஒரு நடிகனாக மட்டுமே சுருங்கி விடாமால் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தன் பயணத்தை செழுமைப்படுத்தியவர், தற்போது ஒரு படைப்பாளியாக மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். …

Read More

2,100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் சூப்பர் ஸ்டார் பிரபாஸின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்

பிரபாஸின் பிறந்த நாளில் ‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்.. 2,100 கோடி ரூபாய் வசூலிக்கும் என பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. முதல் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள். முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’, ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் தீராத விசுவாசம் பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. இதனால்…

Read More

திரை மற்றும் அரசியல் உலகின் உண்மை சம்பவங்களில் அடிப்படையில் உருவாகியுள்ள‌ பரபரப்பு திரைப்படமான‌ ‘படைப்பாளி’ விரைவில் வெளியாகிறது

‘சென்னை ‍ 28’, ‘பேரழகன்’ உள்ளிட்ட‌ 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக‌ விநியோகித்த முன்னணி விநியோகஸ்தரான‌ பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் பேனரில் தயாரிக்கும் முதல் படம் ‘படைப்பாளி’. பாலாஜி ஜெயபாலன் இயக்கும் இத்திரைப்படத்தில் மலேசிய தமிழ் திரையுலகில் 20க்கும் மேற்ப்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள‌ யுவராஜ் கிருஷ்ணசாமி மற்றும் பாலாஜி ஜெயபாலன் நாயகர்களாக நடிக்கின்றனர். தனது முதல் படத்தை இயக்கும் ஒரு இளைஞனும் ஆணவக் கொலைகள் குறித்த அவனது படைப்பும் திரையுலக மற்றும் நிஜ அரசியலை எதிர்கொள்வதே படத்தின் மையக்கரு. சில உண்மை சம்பவங்களில் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ள‌து. கதாநாயகியாக நடிகை சவுந்தரியா அறிமுகமாகும் ‘படைப்பாளி’ திரைப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், ‘காதல் கண்கட்டுதே’ திரைப்படத்தின் இயக்குநர் சிவராஜ், கார்த்திகேயன் கோவிந்தராஜ், பிரசாந் வர்மன், ஏ.எம்.எஸ். ஹரிகிருஷ்ணன், பிரியதர்ஷினி, டோமினிக், ஆண்ட்லின்,…

Read More

‘ஐந்தாம் வேதம்’ புதிய ZEE5 சீரிஸ்: பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்தியேக முன்னோட்டம்

ZEE5 நிறுவனம் அதன் அடுத்த  ஒரிஜினல் சீரிஸான,  ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது.  ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில்  தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர். இந்த அதிரடி  திரில்லர் சீரிஸில் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த முன் திரையிடல் நிகழ்வில் சீரிஸை பார்த்து ரசித்த பத்திரிக்கை விமர்சகர்கள், படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மொத்த படக்குழுவினரும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சீரிஸ் குறித்த…

Read More

‘இரவினில் ஆட்டம் பார் ‘ ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர் !

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் நவராத்திரி படத்தில் இடம்பெற்ற ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ‘ என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும். அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் ‘இரவினில் ஆட்டம் பார் ‘என்கிற பெயரில் ஒரு முழு நீள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றம் செய்பவர்களையும், பள்ளி மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்காரக் கும்பலையும் எதிர்த்து ஒரு நிழல் கதாநாயகன் இரவினில் ஆடும் ஆட்டம் தான் இந்தப் படம்.அந்தக் காமக் கொடூரர்களையும் போதை அடிமைக் கொடியவர்களையும் மர்மமான முறையில் அழித்து ஒழிக்கும் கறுப்பு நாயகன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். படத்தின் முழுக்கதையும் இரவில் நடக்கிறது. இந்தப் படத்தை ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர். சேகர்…

Read More

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது!

மார்வெல் ஆண்டி ஹீரோ வெனோமின் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக அதிக எதிர்பார்ப்பில் உள்ள ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் உலகளவிலான வெளியீட்டுத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது. டாம் ஹார்டியின் ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதிப் படம் அக்டோபர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்துள்ளது. ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் வெனோம் மற்றும் விமானத்தின் மேல் உள்ள ஜெனோமார்ப் இருவரும் இருக்கும்படியான போஸ்டரும் வெளியாகியுள்ளது. ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்திற்கான முன்பதிவுகள் அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. டாம் ஹார்டியின் பிரியமான ஆன்டி-ஹீரோ உரிமையின் கடைசிப் பாகமான ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் த்ரில்லான ஆக்‌ஷன் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களைக் கொண்டிருக்கிறது. மேலும், மார்வெலின் ஆன்டி-ஹீரோவுக்கு…

Read More

கார்க்கி தமிழ்க் கழகம் மற்றும் சில்வர்சோன் அமைப்பு இணைந்து நடத்தும் “தமிழ் ஒலிம்பியாட்!!

கல்வியின் எதிர்காலம் 2024 எனும் மாநாடு ஐஐடி சென்னை ஆராய்ச்சிப் பூங்காவில் இன்று நடைபெற்றது. WASC மற்றும் AIAASC அமைப்புகளின் சார்பில் அமெரிக்கன் உலகப் பள்ளி ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் பாடலாசிரியர் மற்றும் தமிழ் மொழி ஆராச்சியாளர் மதன் கார்க்கி மற்றும் அவரது மனைவி நந்தினி கார்க்கி ஆகியோர் இணைந்து தங்கள் கார்க்கி தமிழ்க் கழகம் (Karky Tamil Academy) எனும் அமைப்பை அறிமுகம் செய்தனர். பள்ளிகளில் வேதியல் இயற்பியலுக்கு ஆய்வகங்கள் இருப்பது போல் முதன் முதலாக தமிழ் ஆய்வகம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் மொழியை மாணவர்கள் ஆர்வத்தோடு பயிலும் வண்ணம் மென்பொருள் கருவிகள், தமிழ் சொல் மற்றும் இலக்கண விளையாட்டுகள், தமிழ் வழியாக உலக அறிவு, பாடல்கள், கதைகள், நூல்கள், போட்டிகள் என்று இந்த ஆய்வகத்தை…

Read More