தெறிக்க விடும் கருணாஸ்! மாறுபட்ட கோணத்தில் ஆர்ஜே பாலாஜி!

ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக ‘சொர்க்கவாசல்’ உருவாகி வருகிறது. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிக்கும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமாகிய நட்டி (நடராஜன் சுப்பிரமணியன்) மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களான சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். சிறையை பிரதான கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்தப்…

Read More

சென்னையில் Torque Entertainments – ன் ‘Return of the Dragon – Home Edition ‘ music concert – ல் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி

தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராகவும், சர்வதேச அளவில் தனித்துவம் வாய்ந்த இசை கலைஞராகவும், ராப் பாடகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ‘ Return of the Dragon – Home Edition’ எனும் பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமான Music Concert ஐ நடத்தினார். Torque Entertainments நிறுவனம் சார்பில் சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த Music Concert க்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். இந்த மைதானத்தில் நடைபெற்ற Music Concert ஒன்றில் இதுதான் அதிக அளவில் ரசிகர்கள் ஒன்று கூடிய இசை நிகழ்ச்சி என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி- மேடையின் இறுதி பகுதி வரை சென்று, அனைத்து…

Read More

ஆலன் விமர்சனம்… ஆபத்தில்லா பயணம்

கதை… சித்தப்பாக்களின் பணத்தாசை வெறியால் தன் குடும்பத்தை இழந்து தவிக்கிறார் நாயகன் வெற்றி.. பின்னர் இவரது அப்பாவின் நண்பர் உதவியுடன் சென்னைக்கு சென்று ஒரு மேன்ஷனில் தங்குகிறார்.. ஆனால் அங்கே தங்க மனமில்லாமல் காசிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கே பல வருடங்களை கழிக்கும் அவர் ஆன்மீகத்திலும் ஆர்வமில்லாமல் தாத்தாவின் சொல்படி எழுத்து உலகிற்கு திரும்புகிறார். அங்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணை சந்தித்து அவருடன் காதல் கொள்கிறார்.. அந்தப் பெண்தான் இனி தன் வாழ்க்கை என்று காதல் வாழ்க்கையில் திளைக்கும் இவர் திடீரென காதலின் மரணத்தால் குழம்பி தவிக்கிறார். அதன் பிறகு இவர் என்ன செய்தார்..? குடும்ப அதன் பிறகு இவரது பாதை ஆன்மீக பாதையா? குடும்ப வாழ்க்கையா? எழுத்து உலகமா? என்பதெல்லாம் மீதிக்கதை. நடிகர்கள்… கமர்சியல் ஆக்சன் என பாதைகளை தேர்ந்தெடுக்காமல் படத்திற்கு படம் வித்தியாசமான…

Read More

ராக்கெட் டிரைவர் விமர்சனம்… ஆட்டோவில் அப்துல் கலாம்

கதை… நாயகன் விஷ்வத் ஒரு ஆட்டோ டிரைவர்.. ஆனாலும் இவர் விஞ்ஞானியாக ஆசைப்பட்டு வறுமையின் காரணமாக அது முடியாமல் போகவே ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். டிராபிக் போலீஸ் நாயகி சுனைனா.. கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக இல்லாமல் கருணை உள்ள கொண்ட நாயகியாக நாயகனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். ஒருநாள் விஷ்வத் ஆட்டோவில் சவாரி செய்ய இளவயது அப்துல் கலாம் வருகிறார்.. இதனால் அவருக்கு சந்தேகம் வரும் நிலையில் ஒரு கட்டத்தில் அப்துல் கலாம் தான் டைம் ட்ராவல் செய்து தற்போது தன் ஆட்டோவில் சவாரி செய்ய வருகிறார் என்பதை உணர்ந்து கொள்கிறார். ஆனால் அப்துல் கலாம் டைம் ட்ராவல் செய்ய வந்த நோக்கம் என்ன என்பது புரியாமல் குழம்பி நிற்கிறார். தான் டைம் ட்ராவல் செய்து இந்த காலகட்டத்திற்கு வந்த நோக்கம் என்ன?என்பதை அறிய…

Read More

”இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு படைப்பாக ‘கலன்’ இருக்கும்” – தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி நம்பிக்கை

ராமலெட்சுமி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’. ‘ கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா , யாசர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.   ஜெர்சன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் பாடல்கள் எழுதியுள்ளனர். திலகராஜன் அம்பேத் கலை இயக்குநராக பணியாற்ற, வெரைட்டி பாலா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். சவுண்ட் எஞ்சினியராக சந்தோஷ் பணியாற்ற, துணை இணை இயக்குநராக ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குநராக பாலாஜி சாமிநாதன்,மகேஷ் மற்றும்…

Read More

நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசியதாவது, “இந்தப் படம் நான் நள்ளிரவு ஒரு மணிக்கு ஒத்துக்கொண்டேன். நான் செய்ய நினைத்ததை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார். எடிட்டர் நிர்மல், “இந்தப் படம் ஆரம்பிக்க காரணமாக இருந்த நெல்சன் சாருக்கு நன்றி. சிவபாலன் சார் எங்கள் டீம் என்பதால் காமெடி படம்தான் எடுப்பார் என நினைத்தேன். ஆனால், அதையும் தாண்டில் நல்ல கதையை படமாகக் கொடுத்திருக்கிறார். டிரெய்லரில் இருப்பது போலதான் கதை இருக்கும். நிச்சயம் தீபாவளிக்கு படம் பார்த்து…

Read More

அமோக வரவேற்பு… தியேட்டர் அதிகரிப்பு… உற்சாகத்தில் சார் படக்குழுவினர்

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள  “சார்” திரைப்படம் திரையரங்குகளில்  வெளியாகி வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறது. இப்படம் மக்கள் மத்தியிலும் திரை ஆர்வலர்கள் மத்தியிலும் பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியான போதிலும், வெளியான முதல் நாளிலேயே மக்களின் ஆதரவில், தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மிக முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும், கல்வி எனும் ஆயுதத்தை சார் திரைப்படம் தூக்கி பிடிப்பதாகவும், சமூகம் தலைநிமிர கல்வி அவசியம் என இப்படம் உரக்க சொல்லுவதாகவும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இப்படம் பேசும் கருத்தியலை வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை போல, இப்படமும் சமூக அக்கறையுடனும்,…

Read More

கல்வியின் மகத்துவத்தை பேசும் நல்ல படைப்பு சார் – திருமாவளவன் புகழாரம் !!

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இப்படம் பேசும் கருத்தியலை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன். அவர்கள், படம் பார்த்து, படக்குழுவினரை பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் படம் குறித்து கூறியதாவது.. நண்பர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சார் திரைப்படம் கல்வியால் தான் எளிய மக்கள் மேன்பட முடியும் என்பதை பேசுகின்ற ஒரு திரைப்படம், கல்வி தான் உண்மையான…

Read More

Bigg Boss Tamil Season 8 பிரம்மாண்டமாக துவங்கியது!

Bigg Boss Tamil Season 8 Oct 6 ஆம் தேதி பிரம்மாண்டமான 5 மணி நேர தொடக்கவிழாவுடன் துவங்கியது. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 8வது சீசனின் தொடக்கத்திலிருந்தே, இந்த நிகழ்ச்சி பல புதிய அம்சங்களால் நிரம்பியுள்ளது – புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் அசாத்திய ‘ஆண்கள் Vs பெண்கள்’ கருப்பொருள் என ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக அசத்தலான தோரணையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார். விவாதங்களை நேரடியாக சந்திப்பது, போட்டியாளர்களின் தவறுகளை நேர்மையாக விசாரிப்பது, உள்ளிட்ட விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை மிக்க அணுகுமுறைக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தன. தொடக்க எபிசோடு தமிழகம் முழுவதும் 9 TVR மற்றும் சென்னையில் 13 TVR என சாதனை படைத்திருப்பது,…

Read More

RSSS பிக்சர்ஸ் தயாரிப்பில் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’

சிறந்த இயக்குனர் விருது பெற்ற ”மண்” பட இயக்குனர் *புதியவன் ராசையா*வின் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனை மரம்’ உருவாகியுள்ளது.   யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடுகின்றன இப்படத்தில் வரும் காட்சிகள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அஷ்வமித்ரா. தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திருப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைந்துள்ளது. அதனாலேயே சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார்.   தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச…

Read More