ராக்கெட் டிரைவர் விமர்சனம்… ஆட்டோவில் அப்துல் கலாம்

கதை…

நாயகன் விஷ்வத் ஒரு ஆட்டோ டிரைவர்.. ஆனாலும் இவர் விஞ்ஞானியாக ஆசைப்பட்டு வறுமையின் காரணமாக அது முடியாமல் போகவே ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

டிராபிக் போலீஸ் நாயகி சுனைனா.. கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக இல்லாமல் கருணை உள்ள கொண்ட நாயகியாக நாயகனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

ஒருநாள் விஷ்வத் ஆட்டோவில் சவாரி செய்ய இளவயது அப்துல் கலாம் வருகிறார்..

இதனால் அவருக்கு சந்தேகம் வரும் நிலையில் ஒரு கட்டத்தில் அப்துல் கலாம் தான் டைம் ட்ராவல் செய்து தற்போது தன் ஆட்டோவில் சவாரி செய்ய வருகிறார் என்பதை உணர்ந்து கொள்கிறார்.

ஆனால் அப்துல் கலாம் டைம் ட்ராவல் செய்ய வந்த நோக்கம் என்ன என்பது புரியாமல் குழம்பி நிற்கிறார்.

தான் டைம் ட்ராவல் செய்து இந்த காலகட்டத்திற்கு வந்த நோக்கம் என்ன?என்பதை அறிய தன்னுடன் அந்த காலகட்டங்களில் பழகிய நண்பர்களை சந்திக்க விரைந்து செல்கிறார் கலாம்..

அதன் பிறகு நடப்பது எல்லாம் மீதிக்கதை. டைம் ட்ராவல் நோக்கம் நிறைவேறியதா.?

நடிகர்கள்…

முதன்மை கதாபாத்திரத்தில் விஸ்வத்.. படத்தின் கதை ஓட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுவது போலவே தன் கேரக்டரையும் நகர்த்த உதவி இருக்கிறார்..

சுனைனா போலீசாக நடித்திருக்கிறார் கொடுத்த பாத்திரத்தில் கடமையாற்றி இருக்கிறார்..

சிறுவயது கலாம் நடித்திருக்கும் நாகவிஷால் நல்ல தேர்வு.. ஒரு தேசியத் தலைவர் பாத்திரத்தில் நடிப்பதற்காக நல்ல உடல் மொழியும் செய்திருப்பது சிறப்பு..

கலாமின் நண்பராக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி சிறப்பான நடிப்பு மனதில் ஒட்டிக்கொள்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் கெளஷிக் கிரிஷ், ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் ஆகியோரது பணி கவனிக்கத்தக்கது..

இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர்.. ஒரு பேண்டஸி திரில்லருக்கான கதையை தேர்வு செய்தமைக்காக இவரை பாராட்டலாம்.. ஆனால் சொன்ன விதத்தில் தடுமாற்றத்தை தவிர்த்து இருக்கலாம்.. அதற்கான மெனக்கடல் இன்னும் தேவை.. ஒருவேளை படத்தின் பட்ஜெட்டும் அதற்கு தடையாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது..

ஆக ராக்கெட் டிரைவர்.. ஆட்டோவில் அப்துல் கலாம்

Related posts

Leave a Comment