லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘வேட்டையன்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில், புகழ்பெற்ற இயக்குனர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் திரையரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அதிக கோரிக்கைகள் எழுந்ததால், இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான மாநிலங்களில் கூடுதல் திரைகள் சேர்க்கப்படுகின்றன. விறுவிறுப்பான கதை சொல்லல், திறமையான நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பு மற்றும் நேர்த்தியான இயக்கம் மூலம் லட்சக்கணக்கானவர்களின் இதயங்களை கைப்பற்றிய வேட்டையன், வெளியானதிலிருந்து அதிகம் பேசப்படும் படமாக மாறியுள்ளது. முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையிலான ரசிகர்களின் படையெடுப்பால் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அதிக திரையரங்குகளை கோரியதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன. ‘வேட்டையன்’…
Read MoreMonth: October 2024
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘#நானிஓடேலா2 ‘படத்தின் தொடக்க விழா
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘#நானிஓடேலா 2 ‘எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, ‘தசரா’ எனும் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரியுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக இணைகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ #நானி ஓடேலா 2 ‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ‘இந்த திரைப்படம் ‘தசரா’ திரைப்படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்’ என நானி அண்மையில் தெரிவித்திருந்தார். ‘தசரா’ திரைப்படம்…
Read Moreகுளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில், தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட வெளியீட்டை அறிவிக்கும் விதமாக, ஒரு அசத்தலான போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நேர்மைமிக்க ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும் கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நட்சத்திர நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார், நடிகை அஞ்சலி ஃப்ளாஷ்பேக் காட்சியில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கேம் சேஞ்சர் ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக உருவாகியுள்ளது.…
Read Moreமெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – “விஸ்வம்பரா” டீசர் வெளியாகியுள்ளது !
மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர், நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி சாகசத் திரைப்படமான, விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். பிம்பிசாராவின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது ஆதர்ஷ நாயகனை இப்படத்தில் இயக்குகிறார் இயக்குநர் வசிஷ்டா. முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது, முன்னதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களைப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த டீசர் இது ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது. ஒரு தீய சக்தி இந்த சாம்ராஜ்யத்தின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க…
Read Moreமாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா
‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு – தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா + கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் – எம். தேஜஸ்வினி நந்தமூரி ஆகியோர் கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் திரைப்படத்தின் தொடக்க விழா எதிர்வரும் 16 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு இந்தக் கூட்டணி ..இந்திய சினிமாவின் அற்புதமான கூட்டணிகளில் ஒன்று. இந்த டைனமிக் கூட்டணி – ஏற்கனவே ‘சிம்ஹா’, ‘ லெஜண்ட்’, ‘அகண்டா’ என மூன்று பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படைப்புகளை வழங்கி உள்ளது. இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்புகளை கடந்து பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனையை படைத்தது. இந்நிலையில் பாலகிருஷ்ணா – பொயப்பட்டி ஸ்ரீனு…
Read MoreBTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள் !!
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பு துறையில் கோலோச்சி வரும் BTG Universal நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார். பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களாக உருவாகவுள்ள, புதிய படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் BTG Universal நிறுவனம், 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்துள்ளது. டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ தற்போது…
Read Moreபவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு
லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புது விதமான லட்டு ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார். தற்போது பவர் ஸ்டார் அவரது இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்தின் பெயர் “பவர் லட்டு” என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் L V Creations சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார், இவர் இதற்க்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த “முன்தினம்” தயாரித்து இயக்கிய அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குனர் ஆவார் மற்றும் வினோத் குமார்…
Read MoreAmitabh Bachchan Releases Teaser Video for #KalyanNavratri Celebrations at Kalyanaraman Residence
Bollywood megastar and Kalyan Jewellers’ brand ambassador, Amitabh Bachchan, has unveiled the much-anticipated teaser video for the #KalyanNavratri celebrations hosted at the Kalyanaraman family’s residence in Thrissur. The festivities, steeped in tradition and devotion, are now in full swing, marking a special spiritual occasion. The 3-minute teaser, which has captivated audiences, features Amitabh Bachchan reciting a powerful Sanskrit shloka from the Devi Mahatmyam — “Yaa Devi Sarva Bhuteshu, Shakti Roopena Samsthita, Namas Tasyai, Namo Namaha.” This hymn, dedicated to Goddess Durga, is a part of the Markandeya Purana and praises…
Read Moreமர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா, மீண்டும் ஐந்தாம் வேதம் எனும் ஒரு அதிரடி புராண சாகச திரில்லருடன் வருகிறார்!
ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. 90களின் புகழ்பெற்ற புராண சாகச திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும், ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் அசத்தலான டீசரை ZEE5 வெளியிட்டுள்ளது. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரிஸின் டீசர், சீரிஸின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது. அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக,…
Read Moreநடிகர் நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு (அக்-9) துவங்கியது
நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சார்லஸ். அடுத்ததாக தனது லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் சார்பில் ‘ஆண்டவன் அவதாரம்’ என்கிற படத்தை தயாரித்து இயக்குகிறார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து, படத்திற்கு படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நடிகர் நட்டி நட்ராஜ் இந்த படத்தில் கதாநாயகனாக அதிலும் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நடிகர் ராகவ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகி மற்றும் இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு இன்னொரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் (அக்-9) இந்த படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் சென்னையில் துவங்கியுள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படம் குறித்து இயக்குநர் சார்லஸ் கூறும்போது,…
Read More