ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ள ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ளார். முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டுள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். இயக்குநர் சுந்தர் சி இடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய…

Read More

கல்வியின் அவசியத்தைப் பேசும் அற்புதமான படம் சார் – சீமான் புகழாரம் !!

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “சார்”.  இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் படம் குறித்துக் கூறியதாவது.. என் அன்புக்குரிய தம்பி நடிகர் போஸ் வெங்கட் அவர்கள், அவரை நடிகராகத் தான் பார்த்திருக்கிறோம். என்னுடைய அப்பா பாரதிராஜாவின் ஈரநிலம் திரைப்படத்தில் நன்றாக  நடித்திருந்தார், ஆனால் இயக்குநராக அவரது இரண்டாவது படம் “சார்”.  SSS Pictures நிறுவனத்தின் சார்பில் இளைஞர்கள் இணைந்து, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.  கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நாங்கள் எல்லாம் கற்று,  இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்.  பல கிராமங்களில்…

Read More

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”!

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமாக பிரசாந்த் வர்மா எழுதி இயக்கிய ஹனுமான் பான் இந்தியா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. PVCU3 சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ 3வது திரைப்படத்தை அறிவித்துள்ளார். RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இப்படத்தை தயாரிக்க, RK துக்கல் வழங்குகிறார். RKD Studios இந்தியாவின் முன்னணி மோஷன் பிக்சர் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கையகப்படுத்தும் நிறுவனமாகும், இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பில் களமிறங்குகிறது. கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் வர்மா எழுத, பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு இப்படத்தை இயக்குகிறார். ஆன்மீகம் மற்றும் புராணங்களை சமகால சிக்கல்களுடன் கலந்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து வரும் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் மற்றும் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் அசத்தலான சூப்பர் ஹீரோவாகும். இப்படத்திற்கு வங்காளத்தின்…

Read More

l80-களில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’ அக்-18ல் ரிலீஸ்

வடலூர் J சுதா ராஜலட்சுமி தயாரிப்பில் ஜனா ஜாய் மூவீஸ் மற்றும் குழுவின் சார்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யமாலா’. ‘பீச்சாங்கை’ புகழ் ஆர்.எஸ்.கார்த்தி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். எண்பதுகளில் நடக்கும் விதமாக தெருக்கூத்து கலையை மையப்படுத்தி அதன் ஊடாக ஒரு அழகான காதல் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான் நடிகர்களான பி.யு.சின்னப்பா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றோர் நடித்து பிரபலமான ஆர்யமாலா-காத்தவராயன் என்கிற புராண நாடகத்தை பின்னணியாக கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஆர்யமாலா என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மனிஷா ஜித். இவர் சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் அவரது மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் விந்தை, பிழை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த…

Read More

ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது ! தசரா பண்டிகை நாளில், கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள் !

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, அக்டோபர் 10 அன்று ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தினை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது. ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தினை, முன்னணி இயக்குநர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார். இந்த அதிரடி திரைப்படத்தில், நடிகர் ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘வேதா’ ஒரு உறுதியான தலித் பெண்ணின் பயணத்தை விவரிக்கிறது மற்றும் சாதி அடிப்படையிலான அநீதிகள் மற்றும் குற்றங்களின் அழுத்தமான பிரச்சினைகளைத் தைரியமாகப் பேசுகிறது. இந்த தசரா பண்டிகையில், அக்டோபர் 10 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகத் தொடங்கும், ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ இன் இந்த உற்சாகமூட்டும்…

Read More

வேட்டையன் – திரை விமர்சனம் – 4/5

நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நபர்களின் பேராசையை கிழித்து தொங்க விட்டு இருக்கிற திரைக்கதை படத்தின் முதல் பலம். அடுத்து இந்தக் கதைக்கான நாயகன் ரஜினி . கதையின் நாயகனான அவர் கேரக்டராகவே மாறி முழு படத்தையும் தாங்கியிருப்பது இன்னொரு சிறப்பு. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரவுடிகளை சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா விஜயன்) தனியார் நீட் கோச்சிங் சென்டரின் அப்பட்டமான மோசடியை எதிர்த்து துணிச்சலாக போராடுகிறார். அப்பாவிகளை எமாற்றி கோடிகளில் லாபம் பார்க்கும் கார்ப்பரேட் காரர்கள் சும்மா இருப்பார்களா? ஆம், அதே தான் நடக்கிறது. சரண்யா கொலையாகிறார், அதுவும் பாலியல் பலாத்கார அடையாளத்துடன். அந்த வழக்கு விசாரணையில்…

Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “1000 பேபிஸ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது !!

மலையாள ஒரிஜினல் படைப்புகளைச் சிறப்பிக்கும் வகையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஐந்தாவது ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸ் “1000 பேபிஸ்” சீரிஸை வழங்குகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சீரிஸின் புதிய டிரெய்லர், தனித்துவமான கதை சொல்லல் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் என, ஆவலைத்தூண்டும் பரபரப்பான உலகை நமக்குக் காட்டுகிறது. இந்த சீரிஸ் அக்டோபர் 18 முதல் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது. இந்த பரபரப்பான சீரிஸில், புகழ்பெற்ற நடிகர்களான நீனா குப்தா மற்றும் ரகுமான் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சஞ்சு சிவராம், அஷ்வின் குமார், அடில் இப்ராஹிம், ஷாஜு ஸ்ரீதர், இர்ஷாத் அலி, ஜாய் மேத்யூ, வி.கே.பி, மனு எம் லால், ஷாலு ரஹீம், சிராஜுதீன், நாசர், டெயின் டேவிஸ், ராதிகா ராதாகிருஷ்ணன், விவியா சாந்த், நஸ்லின், திலீப் மேனன், தனேஷ் ஆனந்த், ஸ்ரீகாந்த் முரளி, ஸ்ரீகாந்த்…

Read More

வெளியானது ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் ட்ரைலர்!!

இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹியூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும், 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யேகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது,…

Read More

முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு‌ சென்ற தமிழ் நடிகை!!

நம் தமிழகத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8,கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக துவங்கியது,அதில் நம் தமிழகத்தைச் சார்ந்த பல போட்டியாளர்கள்‌ பங்கேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.அதே நாளில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் தொடங்கியது,அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக நம் தமிழகத்தைச் சார்ந்தவரும்,நடிகையுமான”ஸ்ருதிகா அர்ஜுன்” பங்கேற்றுள்ளார்.2006 ஆம்‌ ஆண்டு தொடங்கிய ஹிந்தி பிக்பாஸ் சீசன் 1 முதல் இதுவரை நடந்த எந்தவொரு சீசனிலும் தமிழகத்தைச் சார்ந்தவர்‌ பங்கேற்றது இல்லை ஆனால் அப்பிம்பத்தை உடைத்து ஒரு தமிழ் நடிகை ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.   நம்மில் ஒருவர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்றது நமக்கு பெருமையே,இப்பெருமையை நமக்கு பெற்று தந்த…

Read More

சிடிஎம்ஏ ஆவணிப்பூவரங்கு 2024: அமைச்சர்களின் சிறப்புப் பங்கேற்பு!

CTMA (Confederation of Tamil Nadu Malayalee Association) சமீபத்தில் சென்னையில் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் பண்டிகை இது. வயநாடு நிலச்சரிவின் போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு சிறப்பு முயற்சியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எம். மதிவேந்தன் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார். இவர்களுடன் நடிகர்கள் மஹத் ராகவேந்திரா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் கலந்து கொண்டனர். திரு பி.கே. சேகர் பாபு பேசுகையில், “தேவைப்படுபவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ள இந்தக் கொண்டாட்டம்…

Read More