தீபாவளிக்கு பான் இந்தியா திரைப்படமாக வந்திருக்கிறார் இந்த லக்கி பாஸ்கர். கதை 1990 இல் தொடங்குகிறது. அதிகாலை வாக்கிங் முடித்து பால் பாக்கெட் வாங்க வரும் துல்கர் சல்மானை சுத்தி வளைக்கும் சிபிஐ. அப்படியே அவரை வங்கிக்கு அள்ளிக் கொண்டு போகிறது. அவரது வங்கிக் கணக்கை சோதனையிடும் சிபிஐ அதிகாரிகள் அதிர்ந்து போகிறார்கள். வங்கி கணக்கு இருப்பு மட்டும் 100 கோடிக்கு மேல் இருந்தால் அதிர்ச்சி சகஜம் தானே. ஒரு வங்கி உதவி பொது மேலாளர் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி என்ற வினாக் குறியுடன் தொடங்கி வியப்புக் குறியுடன் முடிகிறது படம். மும்பையில் பல பல வங்கியில் மாதம் ரூ. 6000 சம்பளத்தில் கேசியராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு கடனாக இருப்பதோ ரூ 16,000. அடுத்து வரவிருக்கும் உதவி மேலாளர் பிரமோஷனில் சம்பளம் டபுள் ஆகும்.…
Read MoreMonth: November 2024
பிளடி பெக்கர் – திரை விமர்சனம
தமிழ்த் திரைக்கு எப்போதாவது இம்மாதிரியான கதைக்களம் சிறப்பு சேர்க்கும். அப்படியொரு படம் இது. பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்ட நாயகனுடன் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனும் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் கோடீஸ்வரர் ஒருவரின் நினைவு நாளையொட்டி 25 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடாகிறது. இந்த 25 பேரில் ஒருவனாக நமது நாயகனும் அழைக்கப்பட, போகிறான். அங்கே வயிறார சாப்பிட்டு முடித்த நேரத்தில் நாயகனுக்கு ஒரு ஆசை. இந்த பங்களாவுக்குள் ஒரு முறையாவது போய் வந்து விட வேண்டும் என்பதே அந்த ஆசை. பல கட்டுப்பாடுகளை தாண்டி அந்த பங்களாவுக்குள் நுழைகிறான் நாயகன். அங்கே ஒரு நிஜ பேயையும் சொத்துக்கு அடித்துக் கொள்ளும் சில பணப்பேய் களையும் சந்திக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகும் நாயகன் அங்கிருந்து உயிரோடு திரும்பி வர முடிந்ததா என்பது திகு…
Read Moreமீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன்…
Read Moreமில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் – ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும், ‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு !!
ரத்தம் தெறிக்க தெறிக்க, காதலைச் சொல்லும் “ஹேப்பி எண்டிங்” ரொமாண்டிக் காமெடி திரைப்பட, டைட்டில் டீசர் வெளியீடு !! ‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், கலக்கலான ரொமாண்டிக் காமெடியாக உருவாகும், ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் அசத்தலான டைட்டில் டீசர், தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் வாழ்வியலைச் சொல்லும் வகையில், மிக புதுமையான திரைக்கதையில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார். நடிகர் ஆர். ஜே. பாலாஜி இதுவரை ஏற்றிராத புதுமையான வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.…
Read More