”அலங்கு” படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் வரும் வரிசையில் “அலங்கு “ திரைப்படமும் இணைந்து பல பாராட்டுகளையும், பல சினிமா நட்சத்திரங்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. அந்த வகையில் அலங்கு படக்குழுவினர் தளபதி விஜய் அவர்களை காண சென்றுள்ளனர். படத்தின் முன்னோட்டத்தை பார்த்த தளபதி விஜய் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தின் Release Glimpse-யும் வெளியிட்டுள்ளார்.   இத்திரைப்படத்தை DG FILM COMPANY சார்பில் D.சபரிஷ் , MAGNAS PRODUCTIONS சார்பில் சங்கமித்ரா சௌமியா அன்புமணி இருவரும் முறையே இணைந்து தயாரித்திருக்கின்றனர். SP சக்திவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக குணாநிதி நடித்திருக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். அலங்கு திரைப்படத்தை, உலகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி…

Read More

ஜனவரி 31, 2025 அன்று வெளியாகும் பான் இந்திய திரைப்படம் “அகத்தியா”

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் “அகத்தியா”. “ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் “அகத்தியா” படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது – நான்கு மொழிகளில்…

Read More

‘நான் பேசமாட்டேன், என் படம் பேசும்’: மோகன்லால்!!

Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது., இந்நிகழ்வினில்… வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது… மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன் பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் வந்ததில்லை. டெக்னீசியன்ஸ் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர்.…

Read More

சினிமா குறித்து எந்த அறிமுகமும் இல்லாத கிராமத்து மக்கள் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் என்பதை கலகலப்பாக சொல்லும் உண்மைக் கதை

பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் ‘பயாஸ்கோப்’. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டனர். சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பயாஸ்கோப்’ குறித்து பேசிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், “ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து நான் ‘வெங்காயம்’ திரைப்படத்தை எப்படி…

Read More

அமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற “கேம் சேஞ்சர்” முன் வெளியீட்டு நிகழ்வு !!

குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் கர்டிஸ் கல்வெல் மையத்தில் நடைபெற்றது. இந்திய திரை வரலாற்றில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படத்தின் முதல் முன் வெளியீட்டு நிகழ்வு இதுவாகும். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள, மாபெரும் கொண்டாட்டமாக இந்நிகழ்வு நிகழ்ந்தேறியது. குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சிரிஷ், இசையமைப்பாளர் தமன், நடிகை அஞ்சலி உள்ளிட்ட படத்தின் முக்கிய குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ள இயக்குநர் சுகுமார் மற்றும் புச்சி பாபு சானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த அற்புதமான நிகழ்வை ராஜேஷ் கல்லேபள்ளி ஏற்பாடு செய்திருந்தார். டல்லாஸ்…

Read More

தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளையை திறந்து வைத்த நடிகர் ஆர்யா

சென்னையின்  பாரம்பரியமிக்க பிரியாணி கடையான தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளை, சென்னை அண்ணாநகரில், கோலாகலமாக துவக்கப்பட்டது. பிரபல நடிகர் ஆர்யா இக்கடையை துவக்கி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார். 2009 ல் ராம்குமார், சுந்தர், காந்தினி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை துரைப்பாக்கத்தில், துவங்கப்பட்ட தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடை, காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையில், தனித்துவமான பிரியாணியை வழங்கி, மக்களின் மனதில் இடம்பிடித்தது. இந்த 15 வருடங்களில் இக்கடை, துரைப்பாக்கம், தரமணி, ஆழ்வார்பேட்டை , வேளச்சேரி மற்றும் காட்டுப்பாக்கம் என 6 இடங்களில் கடை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கடையின் 6 வது கிளை அண்ணாநகரில் நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா தெரிவித்ததாவது… எனக்கு தி ஓல்ட் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அண்ணாநகர் பிரியாணிக்கு பெயர் பெற்ற இடம்,…

Read More

“இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை வித்தியாசமாக எடுத்துள்ளனர்” — ‘தி ஸ்மைல் மேன்’ பட விழாவில் நடிகர் சரத்குமார் புகழாரம்

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில்,  சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது  “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை  சந்தித்தனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் பேசியதாவது…. இது தயாரிப்பில் என் முதல் தமிழ்ப்படம், முழுமையான ஒத்துழைப்பு தந்த என் குழுவினருக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி. திரைக்கதை எழுத்தாளர் கமலா ஆல்கெமிஸ் பேசியதாவது… எங்க செட்லயே உற்சாகமான நபர் சரத்குமார் சார் தான். பவுண்ட் ஸ்க்ரிப்ட் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு, எப்பொழுதும் தயாராக இருப்பார். அவரின் 150 பட திரை அனுபவம், அறிவு எங்களை திகைக்க…

Read More

‘மெண்டல் மனதில்’ படத்தின் படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த ‘இசை அசுரன் ‘ ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த படைப்பாளியான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்’ மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஆர். கே. விஜய் முருகன் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பாலாஜி மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.  …

Read More

முஃபாஸா தி லயன் கிங் – திரை விமர்சனம்

2019 ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான தி லயன் கிங் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த வெற்றியை குறிவைத்து வெளியாகி இருக்கும் படம், ‘முபாசா தி லயன் கிங்.’ பபூன் குரங்கான ரபீக் சிம்பாவின் மகளிடம் சொல்லும் பிளாஷ்பேக்குடன் படம் தொடங்குகிறது. சிறுவயதில் தங்கள் பூர்வீக இடத்தை விட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒபாசா வேறொரு சிங்கஆளுகை இருக்கும் காட்டுக்குள் வந்து சேர்கிறது. ஆனால் அந்த சிங்கக் கூட்டத்தின் தலைவனான முபாசி, இடம் பெயர்ந்து வந்த இந்த குட்டி சிங்கத்தை ஏற்க மறுக்கிறது. இதற்குள் முபாசியின் மகன் டாக்காவின் அன்பை பெற்று விட்ட படியால் பெண் சிங்கங்கள் கூட்டத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கிடைக்கிறது. இந்நிலையில் எதிர்பாராமல் நடந்த ஒரு சண்டையில் வெள்ளை நிற சிங்கக் கூட்டத்தை சேர்ந்த ஒரு குட்டி சிங்கத்தை முபாசா கொன்று…

Read More

UI (உய்) – திரை விமர்சனம்

உலகளாவிய நுண்ணறிவு என்ற பொருள் படும் யுனிவர்சல் இன்டெலிஜென்ஸ் என்பதன் சுருக்கமே இந்த ui. கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கியதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். அதுவும் இரட்டை வேடத்தில். படத்திலும் அவர் இயக்குனராகவே வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை பார்க்கும் ரசிகர்களில் பலர் பித்து பிடித்தது போல் ஆகிறார்கள். அதுவரை கோழையாக இருந்த சிலர் தைரியமான முடிவுகள் எடுக்கிறார்கள். இதனால் இந்த படத்தை ஒரு தரப்பு கொண்டாடி தீர்க்க, மற்றொரு தரப்போ படத்தை தடை செய்தாக வேண்டும் என்று போராடுகிறது. பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் மூன்று முறை அந்த படத்தை பார்த்த பிறகும் எப்படி விமர்சனம் எழுதுவது என்று தடுமாறுகிறார். அதனால் அவர் அந்தப் படத்தை இயக்கிய உபேந்திராவையே சந்திக்க புறப்படுகிறார். அந்த சந்திப்பில் அவரு க்கு கிடைத்த…

Read More