நடிகர் துல்கர் சல்மானின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான ‘காந்தா’வில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் ‘அய்யா’ வெளியாகியுள்ளது

நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. தற்போது இந்தப் படத்தில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் ‘அய்யா’, அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. ‘அய்யா’வாக அவரது தோற்றம் கம்பீரமாக இந்த போஸ்டரில் உள்ளது. அதிலும் இந்த புதிய போஸ்டரில் ’துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம், இந்தப் படத்தில் சமுத்திக்கனி கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிகிறது. ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் மூலம் பான் இந்தியன் ஸ்டார் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா…

Read More

திரை உலகின் தேவசேனா தேவயானி” ; நிழற்குடை பட விழாவில் வனிதா விஜயகுமார் புகழாரம்

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். தமிழ்நாடு மற்றும் புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனம் பெற்றுள்ளது. உலகமெங்கும் வரும் மே மாதம் 9ம் தேதி நிழற்குடை வெளியாகிறது.. இதனையடுத்து ‘நிழற்குடை’ படத்தின் இசை மட்டும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு…

Read More

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ ( HIT – The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் நானி பேசுகையில், ” நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு…

Read More

சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்கள் எடுங்கள் : ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பேச்சு!

‘ட்ரீம் கேர்ள்’படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’ . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசையமைத்துள்ளார். வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் கலை. படத்தொகுப்பு .கே.பி. அஹமத் . சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார் .விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.விழாவில் ஏராளமான இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் சாலமன்…

Read More

வல்லமை – திரை விமர்சனம்

பாதிக்கப்பட்டவர்கள் போதிக்கும் புதிய பாடம். மகளுக்கு நேர்ந்த பாதிப்புக்கு தந்தை எடுக்கும் புதிய அவதாரம். கிராமத்தில் மனைவி, மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விவசாயி பிரேம்ஜியை மனைவியின் திடீர் மரணம் மொத்தமாக புரட்டிப்போடுகிறது. இதன் பிறகு அந்த ஊரில் இருக்க மனதின்றி மகளுடன் சென்னை வருகிறார். இப்போது அவரது ஒரே கனவு, மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பது தான். சென்னையில் கிடைத்த புதிய ஆட்டோ நண்பர் உதவியுடன் வாடகை வீடு, வேலை, மகளின் பள்ளிப் படிப்பு என்று அனைத்தும் அமைகிறது. இதற்கிடையே உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து தந்தையிடம் ஒரு நாள் மகள் பகிர்ந்து கொள்ள, மகளின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக தந்தையும் மகளும் மருத்துவரை சந்திக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் சிறுமி தனக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்…

Read More

கேங்கர்ஸ் – திரை விமர்சனம்

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சுந்தர் சி-, வடிவேலு கூட்டணி காமெடிக் கொடி பிடித்திருக்கும் படம். அரசுப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போக, அந்தப் பள்ளி ஆசிரியை கேத்ரின் தெரேசா கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார் புகாரின் பேரில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை ஆசிரியர் என்ற போர்வையில் அந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கிறது. இதே சமயத்தில் சுந்தர் சி. அந்த பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வருகிறார். உள்ளூர் அரசியல்வாதியான மைம் கோபி இந்தப் பள்ளியின் தாளாளர் என்ற முறையில் தனது தம்பி அருள்தாசுடன் சேர்ந்து பள்ளியை சமூக விரோத செயலுக்காக பயன்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் சுந்தர். சி, அடையாளம் தெரியாதபடி தன்னை மறைத்து வேஷம் போட்டுக் கொண்டு அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். இதைப்…

Read More

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும் அன்டில் டான் (Until Dawn)

‘அன்டில் டான்’ என்பது சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட ஒரு சுவாரசியமான ஊடாட்ட திகில் விளையாட்டாகும். இந்த விளையாட்டு ஒரு பட்டாம்பூச்சி விளைவு முறையைப் பின்பற்றுகிறது. இதில் வீரர்கள் அவர்கள் எடுக்கும் தேர்வுகளைப் பொறுத்து உயிர்வாழ்வார்கள் அல்லது இறப்பார்கள். வீரர்கள் தங்கள் நகர்வுகளை மூன்றாவது நபரின் கோணத்தில் செய்ய வேண்டும். அப்படியான நகர்வு, மர்மத்தைத் தீர்க்க அவர்களுக்கு உதவும். இப்படம், அந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் F. சாண்ட்பெர்க் இந்த திகில் படத்தை இயக்கியுள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளியான அன்டில் டான் என்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு, அவ்விளையாட்டுக் களத்தில் அமைக்கப்பட்ட ஒரு தனித்த கதையைக் கொண்டுள்ளது இப்படம். அவ்விளையாட்டுத் தொடரின் தொன்மவியலை ஆராயும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது அன்டில் டான் திரைப்படம்.…

Read More

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்…

Read More

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஏப்ரல் 24 முதல், ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது !!

மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “எம்புரான்” வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது. நடிகர், இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மோகன்லால் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகியுள்ளார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில்,…

Read More

ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் நிழற்குடை!!

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி,நீலிமாஇசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார், இப்படத்தைப்பற்றி இயக்குநர் சிவா ஆறுமுகம் கூறும் போது பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள் ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள் என்றவர் மற்றொரு விசயத்தை பகிர்கிறார், நான்…

Read More