அம்..ஆ..! – திரை விமர்சனம்

கேரளாவின் மலை கிராமம் ஒன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். அதில் ஒரு குடிசையில் வசிக்கும் தேவதர்ஷினி, பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறார். பேச்சுத் திறனற்ற அந்த குழந்தையை யாரிடமும் நெருங்க விடாமல் மிக மிக கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதற்கிடையே, அந்த மலைக் கிராமத்திற்கு சாலை பணிக்கு வந்ததாக கூறும் திலீஷ் போத்தன், வந்த வேலையை விட்டுவிட்டு தேவதர்ஷினி, அவரிடம் இருக்கும் பெண் குழந்தை பற்றி விசாரிக்க தொடங்குகிறார். திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீது அந்த ஏரியா மக்களால் ஆசான் என்று அழைக்கப்படும் முதியவருக்கு சந்தேகம். ஊருக்குள் வந்திருக்கும் புதிய நபர் பற்றி விசாரிக்க தொடங்குகிறார். அப்போது தங்கள் மலை கிராமத்துக்கு வந்திருக்கும் அந்த புதியவர் சாலையை செப்பனிட வரவில்லை என்பதை தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே அந்த புதிய மனிதனின் பார்வையில்…

Read More

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்…

Read More

டென் அவர்ஸ் – திரை விமர்சனம்

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் தர… புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி ராஜுக்கு அந்தப் பெண் திட்டம் போட்டு கடத்தப் பட்டது தெரிய வர… சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த சிபி மறுநாள் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த கடத்தல் கேஸை கையில் எடுத்தவருக்கு இடையில் இருப்பது பத்து மணி நேரம் மட்டுமே. அந்த 10 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வியூகம் அமைத்தவருக்கு கூடுதலாக இன்னொரு கேசும் சவாலாக அமைகிறது. சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாக போனில் தகவல் வர, அந்த பெண்ணையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது, புகார்…

Read More

புருஸ்லீ ராஜேஷ் நடித்துள்ள “ஒரே பேச்சு, ஒரே முடிவு ” அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது!

கல்யாணம் ஆனவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கான்செப்ட் தான் கதை… https://app.primevideo.com/detail?gti=amzn1.dv.gti.102f647d-11e5-4a64-8b9b-4e7409191bdf&ref_=atv_lp_share_mv&r=web புருஸ்லீ ராஜேஷ், ஸ்ரிதா சுஜிதரன், தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ‌.எம்.விஜயன், கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வி.ஆர்.எழுதச்சன். ஒளிப்பதிவு ஆதர்ஷ் பி.அனில், இசை யூ.எஸ்.டீக்ஸ், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். தயாரிப்பு ஸ்கிரீன் லைட் பிலிம்ஸ். @GovindarajPro

Read More

தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பட்டு, சினிமா டிவி அவுட்டோர் யூனிட் நிர்வாகிகள் புதிய முடிவு!

சவுத் இந்தியன் சினி & டிவி அவுட்டோர் யூனிட் ஓனர் அசோசியேஷன். தொழில் ஒத்துழைப்பு சம்பந்தமான அறிக்கை எவ்வித காரணமுமின்றி எங்கள் அசோசியேஷனின் யூனிட் முதலாளிகளான மூன்று உறுப்பினர்கள் மீது 07/04/2025 முதல், லைட் மேன் யூனியன் நிர்வாகிகள், முன் அறிவிப்பு இல்லாமல் தொழில் முடக்கத்தை அறிவித்ததன் அடிப்படையிலும், அப்பிரச்சினை தொடர்ந்து நீடிப்பதாலும், அதற்கு தீர்வு காண வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 15/04/25 அன்று சின்னத்திரை, பெரிய திரை சம்பந்தமான அனைத்து விதமான படப்பிடிப்புகளுக்கும், எங்களது அவுட்டோர் யூனிட் உபகரணங்களை அனுப்புவதில்லை எனும் முக்கிய முடிவை அறிவித்திருந்தோம். அதை செயல்படுத்த எங்களது அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அன்று மாலை வரை பிரச்சனையை துவங்கியவர்கள் அதை முடித்து வைக்க முன் வராததால் நாங்கள் நடைமுறைப்படுத்திய முடிவை அடுத்த நாட்களிலும் தொடர்ந்து…

Read More

நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட், விதி மதி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜனனி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி சென்னையில் இவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். https://www.instagram.com/p/DIgfP7NSSn9/?igsh=MW1yZjk3ejR3bW0wbA==

Read More

சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!

Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”. வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், A.C.S மருத்துவக் கல்லூரி விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் ஏ சி சண்முகம் அவர்கள் பேசியதாவது… அனைவருக்கும் வணக்கம். எம்ஜிஆர் பல்கலைகழகத்தில் கலைவிழா நடத்த வேண்டுமென்று முடிவெடுத்து, பிரசிடெண்டட் அருண்குமார் இந்த படக்குழுவை அழைத்துள்ளனர். மகிழ்விக்கும் மன்னர்கள் சுந்தர் சி மற்றும் வடிவேலு அவர்களை கெஸ்ட்டாக அழைத்துள்ளனர். பென்ஸ் மீடியாவிற்கு அடுத்தடுத்து, வெற்றிப்படங்களைத் தந்து…

Read More

”என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச” – மையல் படத்திலிருந்து மெலோடி இசையை விரும்பும் இசைநாயகர்களுக்கான இனிய இசை விருந்தாக வெளியாகியுள்ளது!

மெல்லிசை, மனதை வருடும் குரல்கள், கவிதையாய் பேசும் வரிகள்… இவை அனைத்தும் இணையும் போது, இசை நாயகர்களின் உள்ளங்களை தீண்டும் ஒரு மந்திரம் உருவாகிறது. கூட மேல கூட வச்சு, கண்கள் இரண்டால் போன்ற இனிமை நிரம்பிய பாடல்களின் வரிசையில் இப்போது இணையப்போகும் இன்னொரு மர்ம மாயம் – மையல் படத்தில் இருந்து வெளிவந்துள்ள “என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச”. இந்த சுகாத இசை அனுபவத்தை இசையமைப்பாளர் அமர்கீத் தனது நுட்பமான இசை பாணியால் உயிரூட்டுகிறார். பாடலுக்குச் சுவை கூட்டும் விதமாக, சத்யப்ரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோரின் மென்மையான குரல்கள் பாடலின் உணர்வுகளை நம் உள்ளங்களில் நேரடியாகப் பதிய செய்கின்றன. மிக எளிமையாக அமைக்கப்பட்ட இசை பின்னணி, பாடலின் உணர்வுபூர்வ தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஏகாதசி எழுதிய வரிகள், எளிமை மற்றும் அழகிய உணர்வுகளின் இணைவு.…

Read More

50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த “கிங்ஸ்டன்” திரைப்படம்

தமிழின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் திரைப்படம், வெளியான வெறும் 48 மணி நேரத்திற்குள், 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், இப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி, இளங்கோ குமரவேல், சபுமோன் அப்துசமத் மற்றும் சேதன் கடம்பி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், ரௌடி கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள், தன்…

Read More

45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

SP Suraj Production சார்பில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னட திரைப்படம் 45. கன்னட திரையுலகின் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து மிரட்ட, மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் அர்ஜுன் ஜன்யா பேசியதாவது… அனைவருக்கும் வணக்கம் சென்னைக்கு நான் ஃபேன் பாய். 25 வருடமாக இசையமைப்பாளராக வேலை…

Read More