மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள’ மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக திரையில் தோன்றுகிறார். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். ஜாக்கி கலை…

Read More

52 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ‘ வீர தீர சூரன் !!

சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது இப்படம். ரிலீஸ் நாளில் பல தடைகள் ஏற்பட்ட நிலையில், அனைத்தையும் கடந்து, ரசிகர்கள்…

Read More

மாண்டேலா திரைப்படம் 5ஆம் ஆண்டு நினைவாக…– யோகி பாபு

இன்றுக்கு மாண்டேலா ரிலீஸாகி 5 ஆண்டுகள் ஆகுது. தேசிய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படம். ஒரு நடிகனாக எனது வாழ்க்கையில முக்கியமான திருப்புமுனையாக இருந்த படம் இது. இந்த மண்டேலா சிரிப்புகளுக்குள் சமூக சிந்தனையையும், உண்மையையும் சொல்லித்தந்த மாண்டேலா, மக்கள் இதயத்தில் இருந்து மகிழ்ச்சியோடு ஓடிக்கிட்டே இருக்கு. இதுக்கு காரணமான என் பிரியமான தயாரிப்பாளர் #YNOT சசிகாந்த் அவர்களுக்கும், பாலாஜி மோகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. தம்பி மடோன் அஷ்வின் உன் எழுத்தும், இயக்கமும் மேலும் உச்சத்தை தொட உன்னை மனமார வாழ்த்துகிறேன். என்னோட அன்பு டீம்: விது அய்யன்னா – அழகான ஒளிப்பதிவு, எடிட்டர் பிலோமினா ராஜ், இசை பாரத் ஷங்கர், சக நடிகர்களான ஷீலா, கண்ணா ரவி, சங்கிலி முருகன், ஜி எம் சுந்தர் உங்கள் சிறப்பான பங்களிப்புகள் எல்லாம் இந்தப் படத்தை இன்னும்…

Read More

ZEE5 தமிழ் மெகா ஹிட் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்தது !

தமிழின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கிங்ஸ்டன்” திரைப்படத்தை, வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்த திரில்லர் திரைப்படம், கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்தது. திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற இப்படம், ZEE5 டிஜிட்டல் வெளியீடு மூலம், ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், அந்த ரௌடி, கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன்…

Read More

இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்

சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை வெளியிட்டுள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகியுள்ள  இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் இசையில், ஆதித்யா ஆர் கே குரலில், மனதை வருடும், துள்ளலான காதல் பாடலாக, இப்பாடல் அனைவரின் இதயத்தை கொள்ளை கொள்கிறது. இந்த அழகான பாடல், வெளியான வேகத்தில் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ‘பிக் பாஸ்’ அபிராமி,…

Read More

இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்

சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை வெளியிட்டுள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் இசையில், ஆதித்யா ஆர் கே குரலில், மனதை வருடும், துள்ளலான காதல் பாடலாக, இப்பாடல் அனைவரின் இதயத்தை கொள்ளை கொள்கிறது. இந்த அழகான பாடல், வெளியான வேகத்தில் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ‘பிக் பாஸ்’ அபிராமி,…

Read More

விஜய்க்காக அடுத்த அதிரடியில் இறங்கிய நடிகர் சௌந்தரராஜா

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மரம் வளர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சௌந்தரராஜா இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதுதவிர நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியானது முதலே சௌந்தரராஜா அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த சௌந்தரராஜா, பிறகு கட்சியின் கொடி வெளியிட்டதும் அதனை மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பாக வழிபாடு நடத்தி இருந்தார். பின்னர் மாநாட்டுக்கு சைக்கிள் பேரணி ஆகியவற்றை முன்நின்று செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக ‘தலைவன் நீயே, தொண்டன் நானே…’ என்ற தலைப்பில் ஆல்பம்…

Read More

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் , தென்கொரியாவின் ஃபிளிக்ஸ் ஓவனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் : இந்தோ -கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகள் விரிவடைய வாய்ப்பு

சென்னை, இந்தியா – ( தேதி – 03.04.2025) சென்னையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்,தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதன் மூலம் இந்தோ- கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகளை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுளளது.இந்த கூட்டாண்மை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் குறிப்பாக தமிழ் மற்றும் பான் இந்திய படைப்பாளிகள் தென்கொரியாவில் படப்பிடிப்பு நடத்த புதிய வழிகளை திறக்கும். அதே சமயத்தில் இந்திய பார்வையாளர்களுக்கு கொரியன் கன்டென்டுகளை வழங்குவதற்கும் உதவும். இரண்டு துடிப்பான திரைப்பட துறைகளின் இணைவு தென் கொரிய திரைப்படங்கள், இணைய தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் பெரும் புகழை பெற்றுள்ளன. தமிழ் பார்வையாளர்கள் மற்றும் டிஜிட்டல் தள பார்வையாளர்கள், கொரிய படைப்பாளிகளின் கதை சொல்லலுக்கு பாராட்டை தெரிவிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இந்த…

Read More

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ லவ் மேரேஜ் ‘ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ பட புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் கவனிக்க…

Read More

நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி – அவர் நடிக்கும் ‘ ஆர் பி எம் – R P M’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர் பி எம் ‘ ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம்…

Read More