இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தனது அடுத்த படைப்பான “தடயம்” படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். “தடயம்” எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த “விநோதய சித்தம்” திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம்,…
Read MoreDay: January 21, 2026
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தற்போது Post-Production பணிகளில் மும்முரமாக நுழைந்துள்ளது. முன்னதாக, திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) பிரபல இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த பின்னர், படக்குழுவின் உறுதியையும் நேர்மையையும் பாராட்டிய அவர், படத்தின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது ஊக்கமும் ஆதரவும் வழங்கியதற்கு படக்குழு மீண்டும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2M Cinemas நிறுவனத்தின் சார்பாக K.V. சபரீஷ் தயாரித்துள்ளார். D Pictures நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தயாள் பத்மநாபனும் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரகிடா, லிஸ்சி ஆண்டனி, சரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், இளவரசு, கவிதா பாரதி மற்றும் சுப. வீரபாண்டியன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு வலுவான சித்தாந்த ஆழத்தை சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறும் பொழுது, “‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ தீர்மானமான நம்பிக்கையிலிருந்து பிறந்த திரைப்படம். முழு படக்குழுவும் இந்தக் கதையின் மீது நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றியது, படப்பிடிப்பு நிறைவடைந்தது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.மேலும் இந்தப் படம் பார்வையாளர்களை ஆழமாக பாதித்து, சிந்திக்க வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” தயாரிப்பாளர் K.V. சபரீஷ் கூறும் பொழுது, “இந்தப் படம் முதல் நாளிலிருந்தே அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் தெளிவான நோக்கத்தை எதிர்பார்த்தது. இந்தக் கதையின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு முழு அர்ப்பணிப்போடு பணிபுரிந்து நேர்மையுடன் அதை நிறைவேற்றிய படக்குழுவை நினைத்து பெருமைப்படுகிறேன். Post production பணிகளில் மும்முரமாக உள்ளோம். பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.” தொழில்நுட்பக் குழு கதை & இயக்கம்: தயாள் பத்மநாபன் திரைக்கதை & வசனம்: கவிதா பாரதி & தயாள் பத்மநாபன் ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர்செல்வம் எடிட்டிங்: வி. பூபதி இசை & பின்னணி இசை: தர்புகா சிவா கலை இயக்கம்: அன்பு மேக்கப்: குப்புசாமி உடை வடிவமைப்பு: ரமேஷ் தயாரிப்பு நிர்வாகம்: மாரியப்பன் மற்றும் குட்டி கிருஷ்ணன் மக்கள் தொடர்பு: ரேகா Post production பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ‘லகட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஒரு வலுவான, சமூகப் பொறுப்புள்ள திரைப்படமாக உருவெடுத்து வருகிறது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தற்போது Post-Production பணிகளில் மும்முரமாக நுழைந்துள்ளது. முன்னதாக, திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) பிரபல இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த பின்னர், படக்குழுவின் உறுதியையும் நேர்மையையும் பாராட்டிய அவர், படத்தின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது ஊக்கமும் ஆதரவும் வழங்கியதற்கு படக்குழு மீண்டும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2M Cinemas நிறுவனத்தின் சார்பாக K.V. சபரீஷ் தயாரித்துள்ளார். D Pictures நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தயாள் பத்மநாபனும் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில்…
Read Moreசத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு !
அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது. வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. தீவிரமான காட்சிகளும், மௌன இடைவெளிகளும், நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்களின் பாரம் மௌனத்தின் மூலம் வலுவாக உணர்த்தப்படுகிறது. நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு வார்த்தைகள் இன்றியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமையை…
Read More‘திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்! இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன் ஆகியோருக்கு தங்கள் நடிப்பை வலுவாக வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் தங்கள் கதாபாத்திரங்களான திரௌபதி, ஆயிஷா, கோதை ஆகியவற்றின் அனுபவங்களை நாயகிகள் பகிர்ந்துள்ளனர். திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்த ரக்ஷனா இந்துசூடன் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ படத்தில் திரௌபதியாக நடித்தது என் சினிமா கரியரில் மறக்க முடியாத அனுபவம். இந்த கதாபாத்திரம் தீவிரமான உணர்வுகளையும், எதையும் தாங்கும் உறுதியையும் அதே சமயம் நளினத்தையும் ஒருங்கே கொண்டது. அந்த ஆழமான உணர்ச்சிகளையும் வலிமையையும் வெளிப்படுத்துவது எனக்கு மிகப் பெரிய சவாலாக…
Read Moreஅஸ்வின் குமார்- ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் , ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை விளம்பரப்படுத்தும்…
Read Moreதனித்த இடத்தை உருவாக்கி வரும் பவானி ஸ்ரீ!!
நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதோடு, ஆழமும் தீவிரமும் கொண்ட கதாபாத்திரங்களில் முழுமையாக ஒன்றி நடிக்கும் அவரது திறமைக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமனதாக பாராட்டியுள்ளனர். அவரது பயணத்தில் புதிய மற்றும் உற்சாகமான கட்டமாக, ஹாட்ஸ்பாட் 2 மூலம் light hearted சினிமாவுக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கிறார். நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், இந்த வாரம் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தின் preview காட்சிகளும் மற்றும் பத்திரிகையாளர் காட்சிக்கான திரையிடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது புத்துணர்ச்சியான திரைத் தோற்றமும் சிறப்பான நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. தன்…
Read Moreமாயபிம்பம் – விமர்சனம்
கதை… 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்.. ஒரு பெண்.. நாலு நண்பர்கள்.. நாலு நண்பர்கள் ஜாலியான பேர்வழிகள்.. இதில் ஒருவர்… எந்த பெண்ணை பார்த்தாலும் அவள் எப்படிப்பட்டவர் அவரது கேரக்டர் எப்படி என்பதை கிட்டத்தட்ட துல்லியமாக கணிப்பவர்.. ஒரு நாள் நாயகன் ஜீவா நாயகி ஜானகியை சந்திக்க பார்த்தவுடன் பிடித்தும் போகிறது.. அது காதலா.? என்று தெரியாமல் குழம்ப.. தன் நண்பர்களிடம் பகிர்கிறார்.. அடுத்த சில தினங்களில் எதிர்பாராத விதமாக நாயகன் நாயகியை சந்திக்கின்றனர்.. அப்போது ஒரு நண்பர்… அவள் உன்னுடன் உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறாள்… அதற்காக உனக்கு வலை வீசுகிறாள் என்றெல்லாம் சொல்கிறார்.. இதனை நண்பர் ஜீவாவும் நம்புகிறார்.. ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்.. ஆனால் அவள் உடனே தட்டிவிட்டு சென்று விடுகிறார்… அதன் பிறகு தான்…
Read Moreஹாட் ஸ்பாட் 2 மச் – விமர்சனம்
கதை… ஆந்தாலஜி பாணியில் கதைகள்.. முதல் கதை.. தாதா ராசா ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள்.. அந்த ரசிகர்களின் தலைவர் குடும்பத்திலிருந்து இருவரை கடத்தி வைத்துக் கொள்கிறார் எம் எஸ் பாஸ்கர்.. அவர் வைக்கும் நிபந்தனைகளை தாதா மற்றும் ராசா ஆகியோர் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.. நிறைவேறியதா.? இரண்டாவது கதையில்… தன் மகளை கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறார் தம்பி ராமையா.. ஆனால் அவளோ நாகரிக மோகத்தில் ஆடைகளை குறைத்து சுதந்திரமாக செயல்படுவேன் என்கிறார்.. தந்தைக்கு மகளுக்குமான போட்டி தான் இந்த படத்தின் மையக்கரு. மூன்றாவது கதையில் 2025-ல் இருக்கும் நாயகன் அஸ்வின் 2050 ஆம் ஆண்டில் இருக்கும் நாயகி பவானியுடன் காதல் கொள்கிறார்.. இருவருக்குமான காதல் நிறைவேறியதா.? என்பதுதான் கதை.. நடிகர்கள் (Cast): * பிரியா பவானி சங்கர் – ஷில்பா * பிரிகிடா சாகா…
Read More