சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த ‘ப்ராமிஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்,நடிகர் காதல் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவுக்குப் படக் குழுவினர் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்கள். அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள தயாரிப்பாளர் N.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசும்போது, “இந்த இயக்குநரை 2023இல் வேலூரில் சந்தித்தேன். அவர் ஒரு கதையைச் சொன்னார்.…
Read MoreDay: January 25, 2026
ஜெயராம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – நகுல் நடிக்கும் ” காதல் கதை சொல்லவா ” பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது.
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ” காதல் கதை சொல்லவா” இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நகுல் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ஆத்மிகா, ரித்திக்கா சென் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ளார். வசனம் – கண்மணி ராஜா ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். M. ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இருவரும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். கண்மணி ராஜா, முத்தமிழ், கவிதாரவி, K. பார்த்திபன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். C. பிரசன்னா, சுஜித், பிரவின்.G மூவரும் நடனம் அமைத்துள்ளனர். எடிட்டிங் – ஜீவன் கலை இயக்கம் – சிவா யாதவ்…
Read Moreஅக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா – சேவை பயணத்தின் முக்கிய மைல்கல்
அக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா, சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில், மூத்த நடிகை திருமதி லதா சேதுபதி அவர்கள் தலைமையில், வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25 ஆண்டுகளாக தன்னலமற்ற சேவையை முன்னெடுத்து வரும் அக்ஷயா டிரஸ்ட், சென்னையில் செயல்பட்டு வரும் 6 இலவச முதியோர் இல்லங்கள் மற்றும் காஞ்சிபுரம் – ஆற்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு இலவச முதியோர் இல்லம் மூலம், 400 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு அடைக்கலம் மற்றும் அத்தியாவசிய ஆதரவுகளை வழங்கி வருகிறது. மேலும், அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் முற்றிலும் இலவசமான ஆங்கில வழி பள்ளிக்கூடம் மூலம், பொருளாதார வசதியற்ற சுமார் 250 மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய திடக்கழிவு மேலாண்மை அமைப்பை…
Read Moreதிரையுலகம்–சமூக சேவை–அரசியல் பயணத்திற்கு மரியாதை: பி.டி.செல்வகுமாருக்கு சென்னை வடபழனியில் பிரமாண்ட பாராட்டு விழா
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக’வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23.1.2026 அன்று சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பதற்காகவும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு கலையரங்கம், வகுப்பறைகள் கட்டித் தந்ததற்காகவும் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது. நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு அப்பாவு, திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ், இயக்குநர் விக்ரமன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர் எஸ் வி சேகர், நடிகை தேவயானி, படத் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு…
Read Moreவங்காள விரிகுடா – திரைப்பட விமர்சனம்
கதை… தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய ஆள் அண்ணாச்சி (குகன் சக்கரவர்த்தியார்.) ஒரு பக்கம் நல்லவர் என்ற போர்வையில் இருந்தாலும் திரை மறைவாக பல கொலை சம்பவங்களை செய்பவர் இவர். இவரின் நண்பரின் மகளே இவரை கட்டிக் கொள்ள ஆசைப்பட கல்யாணம் செய்து கொள்கிறார்.. அதே சமயத்தில் இவரது முன்னாள் காதலியும் இவரை தேடி வருகிறார்.. ஆக இரண்டு மனைவிகளுடன் வாழும் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.. அதாவது முன்னாள் காதலியின் கணவர் பேய் ரூபத்தில் மர்ப நபராக வருகிறார்.. அவர் யார்.? அந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்.? இவர் போட்ட வேஷம் கலைந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள் & தொழில்நுட்பக் கலைஞர்கள் குகன் சக்ரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லெனா, அலிஷா படத்தில் ஏகப்பட்ட துணை நட்சத்திரங்கள் இருந்தாலும்…
Read Moreதிரௌபதி 2 – விமர்சனம்
கதை… திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்ட பகுதியை ஆட்சி செய்கிறார் மன்னர் வல்லாளர் நட்டி நடராஜ்.. இவர் தீவிர சிவன் பக்தர்.. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதை அடிக்கடி உச்சரிப்பவர்.. இவருக்கு விசுவாசியான போர்படை தளபதி கருட படையைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் ரிஷி.. வீரசிம்ம காடவராயர்.. தளபதி நடவடிக்கை பிடித்து போனதால் அவருக்கு ஒரு பெண் பார்த்து திரௌபதியை (ரக்ஷனா) திருமணம் முடித்து வைக்கிறார்.. இந்த சூழ்நிலையில் வட இந்தியாவில் ஆட்சி செய்யும் இஸ்லாமியர்கள் தென்னிந்தியாவில் இருக்கும் இந்துக்களை மதம் மாற சொல்கின்றனர்.. கப்பம் கட்டு இல்லையேல் மதம் மாறு என்பதே அவர்களின் கொள்கையாக இருக்கிறது.. குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரையும் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். சிலரும் வேறு வழியின்றி மதம் மாறுகின்றனர்.. இந்த சூழ்நிலையில் மன்னரை இஸ்லாமிய மன்னர் கொலை செய்து விடுகிறார்..…
Read More