கதை…
திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்ட பகுதியை ஆட்சி செய்கிறார் மன்னர் வல்லாளர் நட்டி நடராஜ்.. இவர் தீவிர சிவன் பக்தர்.. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதை அடிக்கடி உச்சரிப்பவர்..
இவருக்கு விசுவாசியான போர்படை தளபதி கருட படையைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் ரிஷி.. வீரசிம்ம காடவராயர்.. தளபதி நடவடிக்கை பிடித்து போனதால் அவருக்கு ஒரு பெண் பார்த்து திரௌபதியை (ரக்ஷனா) திருமணம் முடித்து வைக்கிறார்..

இந்த சூழ்நிலையில் வட இந்தியாவில் ஆட்சி செய்யும் இஸ்லாமியர்கள் தென்னிந்தியாவில் இருக்கும் இந்துக்களை மதம் மாற சொல்கின்றனர்.. கப்பம் கட்டு இல்லையேல் மதம் மாறு என்பதே அவர்களின் கொள்கையாக இருக்கிறது..
குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரையும் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். சிலரும் வேறு வழியின்றி மதம் மாறுகின்றனர்..
இந்த சூழ்நிலையில் மன்னரை இஸ்லாமிய மன்னர் கொலை செய்து விடுகிறார்.. இதன் பழி ரிச்சர்ட் மீது விழுகிறது.. எதிரிகளின் ராஜதந்திர சூழ்ச்சியை அறியாத திரௌபதி நாயகனிடம் பிரச்சனை செய்கிறார்.. அடுத்தது நடந்தது என்ன என்பதுதான் மீதி கதை.. முயற்சி பலித்ததா?
நடிகர்கள்…
ரிச்சர்ட் ரிஷி, ரக்க்ஷனா இந்துசூடன், நட்டி
நட்ராஜ், வேல ராமமூர்த்தி, பரணி மற்றும் பலர்..
திரௌபதி கேரக்டரை ஏற்றுள்ள நாயகி ரக்க்ஷனா.. தமிழில் முதல் படத்திலேயே சிக்சர் அடித்திருக்கிறார்.. அழகான தமிழ் பேசி அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்..
ரிச்சர்ட் ரிஷி.. போர்ப்படைத் தளபதியாக கம்பீரம் காட்டி இருக்கிறார் தன் மீது பழி விழுந்தது.. அது துடைக்க அவர் மேற்கொள்ள முயற்சிகள் ரசிக்க வைக்கிறது.. ஆக்சன் அசத்தியிருக்கிறார்.. ஆனால் நாயகியுடன் ரொமான்ஸ் பத்தவில்லை..
மகாராஜாவாக நட்டி நடராஜ்.. இலக்கிய தமிழ் பேசி இயன்றதை செய்திருக்கிறார்.. ஆனால் இவர் தோற்றம் மன்னருக்கு பொருந்தவில்லை.. ஆனால் வயதான தோற்றத்தில் உடல் மெலிந்துள்ளது பொருத்தம்….
பரணியின் கேரக்டர் அவரது தோற்றம் பக்கா பொருத்தம்.. அல்லாஹ்வை வணங்கும் & பெருமாளை வணங்கும் தோற்றத்திலும் அப்படி ஒரு பொருத்தம்
சாமியாராக வரும் தர்மராஜ் கவனம் பெறுகிறார்..
தேவியானி ஷர்மா மற்றும் திவி வைத்தியநாதன் ஆகியோர் கேரக்டராகவே உணர்ந்து நடித்துள்ளனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்..
இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர்,
கலை இயக்குநர்: எஸ். கமல்,
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்,
படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்
ஜிப்ரான் இசையில் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.. அரசர் காலத்து கதை என்றாலே போர்க்களக்காட்சி நிறைய இருக்கும்.. ஆனால் இதில் பெரிய காட்சிகள் இல்லை என்பது வருத்தம்.. பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம்..
ஒளிப்பதிவில் செஞ்சி பகுதியில் உள்ள கோட்டை அழகு..
கலை இயக்குனரின் பணி சிறப்பு…. 14 நூற்றாண்டில் வாழ்ந்தவர்களின் உடை அலங்காரம் சிறப்பு..
ஒன்றை மாதத்தில் பிரம்மாண்ட பட்ஜெட் இல்லாமல் படத்தை அழகாக கொடுத்திருக்கிறார்.. இன்னும் பட்ஜெட் கூடியிருந்தால் படத்தை சிறப்பாக கொடுத்து இருப்பார் என நம்பலாம்.. சில இடங்களில் செட் ஒர்க் தெரிகிறது.. அதை தவிர்த்து இருக்கலாம்..
மறைக்கப்பட்ட தமிழ் மன்னர்களின் வரலாற்று உண்மை சம்பவங்களை ஆராய்ந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன்..
4/5
