*செல்வராகவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷின் இசையில் கார்த்தி வெளியிட்ட ‘மென்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்* தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் ‘மென்டல் மனதில்’ திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் – மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே.…
Read MoreDay: February 25, 2026
ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் !!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ‘ஜமா’ படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன், இப்படத்தில் கதை மற்றும் திரைக்கதை…
Read More‘சார்மிங் ஸ்டார்’ ஷர்வா – பிளாக் பஸ்டர் இயக்குநர் சம்பத் நந்தி – கே. கே. ராதா மோகன் – ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘போகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது
‘சார்மிங் ஸ்டார்’ ஷர்வா முதன்முறையாக அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் ‘போகி’ எனும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே. கே ராதா மோகன் தயாரிக்கிறார். மேலும் இதனை லட்சுமி ராதா மோகன் வழங்குகிறார். ஷர்வாவின் திரையுலக பயணத்தில் மிக பிரம்மாண்டமான படைப்பாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். இதில் ஷர்வா முரட்டுத்தனமான மற்றும் மூர்க்கத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் இந்த போஸ்டர் கடுமையான மற்றும் நெருக்கடியான காட்சியை பிரதிபலிக்கிறது. அத்துடன் வெகுஜன மக்களை கவரும் அவதாரமாகவும் தோன்றுகிறது. அவரது அடர்த்தியான ஒழுங்கற்ற தாடி, மீசை, சுருள் முடி.. ஆகியவை அவருக்குள் ஒரு தீவிரமான போர்க்குணம் இருப்பதை காட்சிப்படுத்துகிறது. இந்தத் தோற்றம்…
Read More