இன்றைய தலைமுறைக்கு தேசப்பற்றின் அருமையை எளிமையாக எடுத்துச் செல்லும் ஒரு நல்ல முயற்சியாக ‘FLAG’ திரைப்படம்!!

“இன்றைய தலைமுறைக்கு தேசப்பற்றின் அருமையை எளிமையாக எடுத்துச் செல்லும் ஒரு நல்ல முயற்சியாக ‘FLAG’ திரைப்படம் அமையும். இந்த திரைப்படத்தை மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்று பல்வேறு துறை பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘FLAG’ திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசப்பற்று கொண்டாட்டமாக அமையும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட உள்ளது . “140 கோடி மக்களின் தேச உணர்வை சொல்லும்  FLAG திரைப்படம் –  இந்த சுதந்திர தினத்தில், உங்களை குடும்பத்துடன் திரையரங்குகளில் மகிழ்விக்க வருகிறது ”   

Read More

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’, தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு (Sound Design), பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் (VFX) மற்றும் டிஐ (Digital Intermediate)…

Read More

நான்காம் தலைமுறை ரோபோட்டிக் அறுவைசிகிச்சை, பல்துறை நிபுணத்துவம்* *மற்றும் சீரான உயர்தர சிகிச்சை முறைகளை சென்னையில்* *உள்ள தனது மூன்று மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தும் ‘காவேரி 3X* *சென்னை’ செயல்திட்டம் அறிமுகம்

உயர் சிகிச்சைக்கு இந்நாட்டில் புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை குழுமம், *‘காவேரி 3X சென்னை’* என்ற பெயரில் ஒருங்கிணைந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பம், விரிவான அறுவைசிகிச்சை நிபுணத்துவம் மற்றும் அதிக திறன் கொண்ட பல்துறை மருத்துவக் குழுக்களை சென்னையில் உள்ள அதன் மூன்று மருத்துவமனைகளிலும் சீரான உயர்தர சிகிச்சை வழிகாட்டுதல்களின் கீழ் ஒன்றிணைக்கிறது. இந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டங்கள், உலகின் மிக மேம்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்றான 4-ஆம் தலைமுறை டா வின்சி ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சாதனத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இரையக குடலியல், புற்றுநோயியல், சிறுநீர்பாதையியல், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல், மற்றும் சிறுநீரக மருத்துவவியல் உள்ளிட்ட பல மருத்துவத் துறைகளில் ரோபோட்டிக் சாதன உதவியுடன் சிகிச்சையளிக்கப்படும். குடல் இரைப்பை புற்றுநோய்கள், பெருங்குடல் புற்றுநோய்கள், மகளிர் நோயியல் புற்றுநோய்கள், மார்பகப்…

Read More