செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!

எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில், தனக்குப் பிரியமான உணவான துர்கா ஹோட்டலின் புகழ்பெற்ற தயிர் வடையின் சுவை மூலம் பள்ளிப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்து சமந்தா ரூத் பிரபு கண் கலங்கியது பார்வையாளர்களை நெகிழச் செய்தது. சில உணவுகளின் சுவை நம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும். அப்படியொரு நெகிழ்ச்சியான தருணத்தைச் செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபு பகிர்ந்து கொண்டுள்ளார். பள்ளிக்காலத்தில் தனக்கு மிகப்பிடித்த உணவாக பல்லாவரத்தில் இருக்கும் துர்கா ஹோட்டல் தயிர் வடையை குறிப்பிடுகிறார் சமந்தா. பள்ளிப் பருவத்திற்குத் திரும்பிச் செல்வதாகக் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்யுமாறும், அங்கிருந்து நேராகத் துர்கா ஹோட்டலுக்குச் செல்வதாக நினைத்துப் பார்க்குமாறும் சமந்தாவிடம் சொல்லப்படுகிறது தன்னுடைய பள்ளிப் பருவத்தின் எளிமையான, இனிமையான நாட்களை மனக்கண்ணில் மீண்டும் காணும் சமந்தா,…

Read More