திங்க் இன்டி வெளியிட்ட பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ ஆல்பம்

ராப் இசை கலைஞர் – பாடகர் – பாடலாசிரியர் – நடிகர் – என பன்முக ஆளுமை திறன் படைத்த பால் டப்பா சுயாதீன இசை உலகில் மிக முன்னணி இசைக்கலைஞராக அசைக்க முடியாத இடத்திற்கு உயர்ந்து வருகிறார். இவருடைய மியூசிக் ஆல்பம் வெளியானவுடன் பெரும் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று இணையத்தை அதிர வைத்து வருகிறது. இந்நிலையில் இவர் பாடல் எழுதி, பாடி ,நடித்த ‘ஏரோபிளேன்’ எனும் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை திங்க் இன்டி மியூசிக் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ ஆல்பத்தில் பால் டப்பா மற்றும் நடிகை அனன்யா ராம் பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் ராகுல் அசோக் குமார் இயக்க, இசையமைப்பாளர் அடியேல் மஸார் ( Adiel Massar) இசையமைக்க.., பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.…

Read More

ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘மின்னும் ஓர் இரவு’

நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது. அஞ்சு கிருஷ்ணா அஷோக் நாயகியாக நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், “ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இரவுப் பொழுதை உற்சாகமாகக் கடக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள்…

Read More