இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வாலி மோகன் தாஸ் தயாரித்து இயக்குகிறார். படத்தின் எழுத்துப் பணிகளை வாலி மோகன் தாஸ் மற்றும் உமர் எஸ். இணைந்து மேற்கொண்டுள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஒளிப்பதிவுப் பணிகளை ஆர்தர் ஏ. வில்சன் கவனிக்கிறார். இந்தியா ஃபிலிம் கம்பெனி, ஸ்ரீ சுமனோஹரா புரொடக்ஷன்ஸ் மற்றும் கிராட்டிட்யூட் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இயக்குநர் வாலி மோகன் தாஸ், கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ரங்கோலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள நடிகர்…
Read MoreDay: November 15, 2026
ஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘கிளிக்’
ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனம் சார்பில் ராஜாபிரபு தயாரித்து, சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில், ஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘கிளிக்’ எனும் யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டைனர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தைத் தயாரிப்பதுடன் ராஜாபிரபுவே கதாநாயகனாகவும் நடிக்கிறார். துள்ளலான இளமை, சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு புதுமையான கதையாக, இன்றைய தலைமுறையினருடன் எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஜென் சி (Gen-Z) கதைக்களத்துடனும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் உருவாகும் ‘கிளிக்’, உறவுகளின் உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளின் எதிர்பாராத திருப்புமுனைகளை அழகாக வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கலகலப்பான திரை அனுபவத்தை வழங்க உள்ளது. *நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்* ஓவியா, ராஜாபிரபு, சுந்தர் மஹாஸ்ரீ , அஸ்மிதா, அமுதவாணன், ‘லொள்ளு சபா’…
Read More