இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான IFFI-யின் இந்தியன் பனோரமா பிரிவில் இடம்பெற்றிருப்பது, தமிழ் சினிமாவுக்கும், ‘தாய்க்கிழவி’ திரைப்படத்திற்கும், அதன் தயாரிப்பு நிறுவனமான SK Productions-க்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகும். இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் படக்குழுவினர் பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர். ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ‘தாய்க்கிழவி’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, வயதான பெண்ணின் வாழ்க்கை, குடும்ப உறவுகள், சமூகத்தின் பார்வை, பெண்களின் சுயமரியாதை எனப் பல்வேறு அம்சங்களை நகைச்சுவையும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் கலந்து சொல்லியிருந்த இப்படம், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. உலகளவில் 90 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்ற இப்படம், 2026-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்தது. இப்படத்தில் பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்த ராதிகா…
Read More