சமீப காலமாக பல படங்களில் நடித்து வரும் வனிதா விஜயகுமார் தலைப்பு கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் வைஜெயந்தி ஐ.பி.எஸ். இந்த படத்தில் வனிதா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் பாட்டு வெளியிட்டு விழாவின் பொழுது பவர் ஸ்டாரும் வனிதாவும் மாறி மாறி கிண்டல் அடித்துக்கொண்டது மிகவும் வைரலாக பரவியது. இந்த படத்திற்கு இசை அமைத்தது மட்டும் இன்றி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமும் ஏற்று நடித்திருக்கிறார் மாபெரும் ஜாம்பவான் சங்கர் கணேஷ் அவர்கள். இந்த படத்தில் உள்ள ஒரு காட்சியில் தான் வனிதா சங்கர் கணேஷ் அவர்களை விசாரணை செய்யும் காட்சியில் ரோஸ் மில்க் சாப்பிடலாமா?.. என்று கேட்கும் வண்ணம் காட்சியை அமைத்திருக்கிறார்கள் இந்த பட குழுவினர். இந்த படத்தில் மேலும் இமான் அண்ணாச்சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஜென் சினிமாஸ், திரு கே பி தினகரன் அவர்கள் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் மனோஜ் கார்த்திக் காமராஜு இயக்கியுள்ளார். இந்த படத்தை 2எஸ் என்டேர்டைன்மெண்ட், திரு எஸ் வினோத் குமார் அவர்கள் வெளியிடவுள்ளார். இவர் பவர் ஸ்டார் மற்றும் வனிதா நடித்து வரும் பிக்கப் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts
நடிகர் சங்கம் செய்த மாபெரும் உதவிக்கு நன்றி தெரிவித்த குழந்தைகள் அறக்கட்டளை!
HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாத்து அவர்களுக்கு கல்வி மற்றும் அனைத்து உதவிகளையும் வழங்கி ஒப்பற்ற பணிகளை செய்து வருகிறது,...அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தை, அதன் மையத்தை, நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான பாடலாக இந்த டைட்டில் டிராக் உருவாகியுள்ளது....“படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்” – நடிகர் மணிகண்டன்!
ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயரும் நடிகரின் பெயர் முன்னிலையில் சேர்வது இயல்பான விஷயம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...