சென்னை, இந்தியா – அக்டோபர் 2024 – ஃபேஷன், கலை மற்றும் கலாச்சாரத்தின் கொண்டாட்டங்களுக்குப் புகழ்பெற்ற முன்னணி பத்திரிக்கையான ப்ரோவோக் லைஃப்ஸ்டைல், நவம்பர் 2 மற்றும் 3, 2024 ஆகிய தேதிகளில் ஆரஞ்சுவுட் வழங்கும் ’ப்ரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவல் 2024’ ஐ அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இரண்டாவது வருடமாக நடக்கும் இந்த விழாவின் வசீகரிக்கும் தீம், ’Where Elegance Meets Art’ என்பதாகும். நிகழ்வு நடக்கும் மாலை வேளை, பங்கேற்கும் அனைவருக்கும் மறக்க முடியாததாக அமைய மகிழ்ச்சியான கலை நிகழ்ச்சிகள் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதும் வழங்கப்படுகிறது.
நவம்பர் 2, 2024: புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் பத்மஸ்ரீ ஷோபனா சந்திரகுமார், கர்நாடக இசைக்கலைஞர் ஸ்ரீ அபிஷேக் ரகுராமுடன் இணைந்து நடத்தும் கலைநிகழ்ச்சி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக அமையும். கலைத் துறையில் சிறந்த பங்களிப்பாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மாலை வழங்கப்படுகிறது.
* பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன்
* பத்மஸ்ரீ பத்ரப்பன்
* கலைமாமணி டெல்லி கணேஷ்
• கலைமாமணி கே.என்.ராமசாமி
• கலைமாமணி ராஜ்குமார் பாரதி
• கலைமயம் ஸ்ரீமதி எஸ் எஸ் கலைராணி
நவம்பர் 3, 2024: இரண்டாவது நாள் இரவு சுப்பிரமணிய பாரதியின் படைப்புகளை சிறப்பித்துக் காட்டும் வகையில் ஸ்ரீ சஞ்சய் சுப்ரமணியனின் நிகழ்வு இருக்கும். கூடுதலாக, ஸ்ரீ ரெஞ்சித் மற்றும் ஸ்ரீமதி விஜ்னா இணைந்து அன்னைக்கு ’விஸ்வகர்பா’ பாடலை வழங்குவார்கள். இது தாய்மை மற்றும் படைப்பாற்றலுக்கான அஞ்சலியாக பாரம்பரிய மற்றும் சமகால கலைத்திறனைக் கொண்டு வரும். மாலையில் திறமையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும்.
• பத்ம பூஷன் டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன்
* பத்மஸ்ரீ லீலா சாம்சன்
* பத்மஸ்ரீ ஆர்.முத்துக்கண்ணம்மாள்
* கலைமாமணி டி.எஸ்.பி.கே மௌலி
* வீணை விதுஷி ஹேமலதா மணி
* திரு கங்கை அமரன்
2024 ப்ரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவலில் நேர்த்தியும் கலைத்திறனும் ஒன்றிணைவதை அனுபவியுங்கள்!