நடிகை ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்

‘பரதேசி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா ‘மெட்ராஸ்’ படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார். ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன்,ஓநாய்கள் ஜாக்கிரதை, இரண்டாம் உலகப்போரும் கடைசி குண்டும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து எதார்த்தமாக நடிக்க கூடிய நடிகை என்று பாராட்டு பெற்ற ரித்விகா, தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை ரித்விகாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. திருச்சியை சேர்ந்த ஐடி ஊழியர் வினோத் லக்‌ஷ்மண் என்பவரை ரித்விகா மணக்க உள்ளார். இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகும்.

சமீபத்தில் நடைபெற்ற ரித்விகா – வினோத் லக்‌ஷ்மண் நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.

ரித்விகா – வினோத் லக்‌ஷ்மண் திருமண தேதி உள்ளிட்ட திருமணம் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Related posts

Leave a Comment