நடிகர் வெற்றி – “என்டர் தி டிராகன்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் புதிய படைப்பாக உருவாகி வரும் “என்டர் தி டிராகன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்திக் இணைந்து வெளியிட்டனர்.
இந்தப் படத்தை சேலம் வேங்கை கே. அய்யனார் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் ராட்சகன் ஸ்ரீதர் – பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தவர் – தற்போது தனது முதல் திரைப்பட இசை முயற்சியாக என்டர் தி டிராகன் மூலம் அறிமுகமாகிறார்.


இப்படத்தை இயக்கியுள்ளவர் பார்த்திபன். இவர், முன்னதாக நடிகர் வெற்றி நடித்த படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தற்போது தனியாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் நாயகியாக பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளார். இவருக்கு இது முதலாவது சினிமா வாய்ப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டில் சரவணன் மற்றும் கார்த்திக் ஆகியோர் இப்படத்தின் மக்கள் தொடர்பாளர்களாக செயல்படுகின்றனர்.
அதிக எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த “என்டர் தி டிராகன்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

Related posts

Leave a Comment