கதை…
நாயகன் – சந்தோஷ் சோபன்..
நாயகி – மானசா
சென்னைக்கு வேலை தேடி வரும் நாயகன் சரியான வேலை கிடைக்காமல் தவிக்கிறார்.. இதேபோல நாயகியும் ஐடி துறையில் பணிபுரிகிறார்.. இருவருக்கும் போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே அறையில் ஒன்றாக தங்குகின்றனர்..
இவர்களின் நட்பு தொடரும்போது இவரின் வாழ்க்கை தரம் உயர்கிறது.. இந்த சூழ்நிலையில் இருவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.. அது என்ன..? அதில் இருந்து மீண்டார்களா.?என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…
நாயகன் சந்தோஷ் சோபன்.. எதார்த்த நாயகன்.. அடடா நன்றாக நடிக்கிறாரே என சொல்ல வைக்கிறார்
நாயகியாக மானசா வாரணாசி.. அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. சென்டிமென்ட் காட்சியில் அழ வைக்கிறார்..
யோகி பாபு.. குறைவான காட்சி என்றாலும் வழக்கம் போல டைனிங் காமெடி கொடுத்து கலக்கி இருக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவாளர் – தினேஷ் புருஷோத்தமன்.. காட்சிகளை கலர்புல்லாக்கி ஒவ்வொரு காட்சியும் செதுக்கியிருக்கிறார்..
இசையமைப்பாளர் – ஆதித்யா ரவீந்திரன் பின்னணி இசை சிறப்பு.. பாடல்கள் படத்துடன் ஒன்ற வைக்கிறது..
கணேஷ் சிவா – படத்தொகுப்பு.. ஷார்ப் எடிட்டிங் கொடுத்து நம்மை கவர்ந்திருக்கிறார்..
இயக்குனர் – அஸ்வின் சந்திரசேகர்..
நட்பு – காதல் – தம்பதி எதுவாக இருந்தாலும் துணை இல்லாமல் வாழ்க்கை இல்லை.. ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக அமையும் என காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
Couples Friendly.. ஆக இருக்க வேண்டும் என்ற கருத்தோடு மன நிறைவான படத்தை கொடுத்திருக்கின்றனர் படக்குழுவினர்..

