கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
கதை…
தமிழ்நாட்டில் வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் பிரியங்கா மோகன்.. ஆனால் இவருக்கு கொரியாவிற்கு சென்று அங்கு செட்டில் ஆக வேண்டும் எண்ணம் சிறு வயது முதலே எழுந்து விடுகிறது.. கொரியாவுக்கு போக என்னென்ன செய்ய வேண்டுமோ அதற்கான நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார்.. ஆனால் பெற்றோருக்கு அவரை வெளிநாட்டுக்கு அனுப்ப எண்ணம் இல்லை..
இந்த சூழ்நிலையில் காதலனுடன் இணைந்து விடுகிறார் பிரியங்கா.. ஒரு கட்டத்தில் காதலனை திருமணம் செய்து கொள்கிறார்.. பிரியங்காவின் ஆசைப்படி கொரியாவுக்கு அனுப்பி வைக்கிறான்.. ஆனால் தனியாக செல்லும் பிரியங்கா அங்கு சென்ற பின் வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டார் என்பதுதான் மீதிக்கதை..

நடிகர்கள்…
பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின்
படத்தின் ஒட்டுமொத்த கதையும் தாங்கி கதையின் நாயகியாக பிரியங்கா மோகன்.. காதலனுக்காக அப்பாவை எதிர்ப்பது ஒரு கட்டத்தில் அப்பாவுக்காக காதலனை எதிர்ப்பது இப்படியாக செல்லும் பிரியங்காவின் வாழ்க்கை கொரியாவுக்கு சென்றபின் மாறுகிறது.. அங்கு அவர் படும் இன்னல்களை அழகாக தன் முகத்தில் பிரதிபலிக்கிறார்..
ஒரு கட்டத்தில் கொரியாவில் உயர்ந்த நிலையை அடையும் போது மகிழ்ச்சியான நிலைக்குத் திரும்பும் போதும் பிரகாசமாக ஜொலிக்கிறார் பிரியங்கா..
இவருடன் நடித்த கொரியா நடிகர்களும் நல்ல தேர்வு..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
எழுத்து, இயக்கம்: ரா.கார்த்திக்,
தயாரிப்பாளர்: ஸ்ரீநிதி சாகர்,
தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்
கொரியாவில் ஒட்டுமொத்த அழகும் கேமராவில் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர்.. நாமும் கொரியாவுக்கு ஒரு முறை சென்று வரவேண்டும் என்ற உணர்வை இந்த ஒளிப்பதிவு ஏற்படுத்தியிருக்கிறது.. பின்னணி இசையும் பாடல்களும் அருமை..
வாழ்க்கையில் ஒரு பெண் நினைத்தால் அவளால் எதையும் செய்ய முடியும்.. தாங்க முடியும் அதற்கு அவளது மன தைரியம் தான் முக்கியம்.. என்பதை பிரியங்கா கேரக்டர் மூலம் உணர வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக்..
அதுபோல கொரியாவில் படுத்த படுக்கையாக இருக்கு ஒரு பெண்மணி அவளது ஆசைக்காக சுதந்திரமாக திரிய ஆசைப்பட்டு பிரியங்கா உடன் கரகோர்த்து புதிய உணவகம் ஆரம்பித்து அதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்து.. தன்னம்பிக்கையை காட்டும் பாத்திரமாக அமைந்துள்ளது..

