கதை…
பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஹிந்து மத கதைகளை பார்த்திருப்போம்.. புராண படங்களை பார்த்திருப்போம்… அதுபோல கிறிஸ்தவ மத சார்ந்த கதைகளையும் நாம் கண்டு ரசித்திருக்கிறோம்..
இதில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் வாழ்வியலை யதார்த்தமாக உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மீரா கதிரவன்..
தென்காசி பகுதியில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் நாயகன் ஈஷா நாயகி மாளவிகா வசிக்கின்றனர்..
கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷா.. கண்ணாடி வாப்பா என்ற கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்து வருகிறார்.. படிப்பு பெரிதாக ஏறவில்லை காரணம் நாயகி.. ஈஷாவுக்கு மாளவிகா மீது காதல்..

இவர்கள் ஒரே மதம் இஸ்லாமிய மதமாக இருந்தாலும் இவர்கள் வேறு சாதி என்பதால் இவர்களுக்கு காதலுக்கு பிரச்சினை வருகிறது… ஒரு கட்டத்தில் காதலியை பார்க்க சென்றபோது கையும் களவுமாக பிடிபடுகிறார்..
அதன் பிறகு இவரது வாழ்க்கை வேறு கட்டத்திற்கு மாறுகிறது… அதன் பிறகு நடந்தது என்ன என்பதெல்லாம் சுவாரசியமான திரைக்கதை..
நடிகர்கள்…
Kasthoori Raja – Mohamed Yousuf
Esha – Syed Abuthahir
Malavika Monoj – Nilofar Nisha
Dhanasree – Kathija Parvin
Anusreya Rajan – Saliha Beevi
Jayasree Binuraj – Mammathu
Arul Kumar – Sheik Uthuman
Rekha Kumanan – Rabiya
Ismath Banu – Byroja
Malar Kaizen – Nilofar Mother
Sun Shahul – Parvin’s Father
Master Theehan – Child Abuthahir
Dheeksha Sree – Child Nilofar
நாயகன் ஈஷா.. இவர் மதுரை மண்ணைச் சார்ந்தவர்.. நிஜத்திலும் இவர் இஸ்லாமியர் என்பதால் ஒரு இஸ்லாமியர்க்கு உரிய உடல்மொழி தன் உணர்ச்சிபூர்வமான நடிப்பில் கொடுத்திருக்கிறார்.. அவர்கள் லுங்கி கட்டும் முறை.. தொப்பி அணியும் முறை என அனைத்தையும் சிறப்பாக செய்து இருக்கிறார்..
காதலிக்காக ஒவ்வொரு இடத்திலும் தயங்கி தயங்கி நிற்பது.. காதலை சொல்ல முடியாமல் தவிப்பது என அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. 20 வயது முதல் 40 வயது தோற்றத்தில் தன் உடலை அதற்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார்..
நிலோபர் நிஷா கேரக்டரில் மாளவிகா.. படத்தில் ஐந்து வார்த்தைகள் கூட பேசி இருக்க மாட்டார்.. ஆனால் கண்களாலும் உடல் மொழியாலும் கவர்ந்து மயக்கி இருக்கிறார் மாளவிகா..
இஸ்லாமிய பெரியவராக கஸ்தூரிராஜா… அவரின் 30 வயது முதல் 70 வயது வரை அவரது தோற்றத்திலும் மாறுபாட்டை காண்பித்திருக்கிறார்… ஒரு கட்டுக்கோப்பாக வளர்ந்த ஒரு இஸ்லாமியர் அவர் வீட்டை விட்டுக் கொடுக்காமல் ஏங்கும் காட்சிகளில் ஒரு உணர்வு பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்… நிச்சயம் இவருக்கு இந்த படத்தில் விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு
பைரோஜா & பர்வீன் உள்ளிட்ட கேரக்டரில் நடித்தவர்களும் கவர்ந்திருக்கின்றனர்
ஈஷாவின் சித்தப்பா சித்தி ஆக நடித்தவர்கள் நம் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார்கள்.. சித்தியாக நடித்தவர் சிறப்பான மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
தொழில்நுட்ப குழு…
Director – Meera Kathiravan
Writer – V.S.Mohamed Ameen
Music Director – Sam Cs
Cinematographer – Mahesh Muthuswami
Editor – Mathi Vs
Art Director – Appunni Sajan – 1980 – 1990 – 2023 உள்ளிட்ட காலகட்டங்களுக்கு ஏற்ப கலை இயக்குனர் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்..
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய மதி என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார்.. இஸ்லாமியர்களின் வாழ்க்கை வாழ்க்கை முறையை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்..
சாம். சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.. ஏதோ ஏதோ பேச தோணுதே… பாட்டும் மெட்டும் மட்டும் மனதை விட்டு நீங்காது.. இரைச்சல் இல்லாத இசையை இதயத்திற்க்கு நெருக்கமாக கொடுத்திருக்கிறார்..

Producers :
Nesam Entertainment
Shahul Hameed
Kovai Ibrahim
அவள் பெயர் தமிழரசி & விழித்திரு.. தமிழ் சினிமாவின் தரமான படங்களை கொடுத்த மீரா கதிரவன் தான் இந்த படத்தையும் கொடுத்திருக்கிறார்..
ஒரு இஸ்லாமிய குடும்பத்திற்குள் நம்மை அழைத்துச் சென்று நமக்கு சுவையான கறி பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்..
பெரும்பாலும் இஸ்லாமியர்களில் ஆண்கள் வெளிநாட்டுக்கு செல்வதும்… பெண்கள் வீட்டுக்குள் முடங்கி கிடப்பதும் நான்கு சுகருக்குள் அவர்களின் வாழ்க்கை முடிவதும் என்பதையும் ஒரு உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி பெண்களின் மனக்குமுறலை சொல்லி இருக்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்கவும் செய்திருக்கிறார்..
