கதை…
1975 காலகட்டங்களின் கதை..
தமிழகத்தில் ஒரு அடர்ந்த காடு.. அபி நட்சத்திரா அவரது காதலர் உள்ளிட்ட மலைவாழ் பகுதி மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்.. அங்கு காவல் நிலையம் செயல்படாத நிலையில் அங்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் இசக்கி கார்வண்ணன்..
எந்த ஒரு வழக்கும் பதிவாகாத நிலையில் தினம் ஒரு வழக்கு வேண்டும் என சக போலீஸ்காரர்களுக்கு கட்டளையிடுகிறார்..
அப்போது அங்கு ஆசிரியர் கொல்லப்பட்டு கிடக்கிறார்.. அந்த ஆசிரியரை கொன்றவர் யார்.? இந்த அடர்ந்து காட்டுக்குள் அவருக்கு எதிரிகள் யார்.? அதன் பிறகு நடந்தது என்ன என்பதே மீதிக்கதை..
நடிகர்கள்…
தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே போலீஸ் அதிகாரி ஆக நாயகனாக நடித்துள்ளார்.. போலீஸ் என்றால் சீரியஸாக இருக்க வேண்டும் என இயக்குனர் சொன்னாரோ என்னவோ படம் முழுவதும் கொஞ்சம் கூட சிரிக்காமல் வருகிறார்..
‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா நாயகி.. கல்வி மட்டும் தான் ஒரு சமூக மாற்றத்திற்கான கருவி என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.. அங்கு கல்விக்கான பல பிரச்சனைகள் இருக்கும் போது இவர் எப்படி கல்வி கற்றார்..??
படிக்காமல் அடம்பிடிக்கும் இரண்டு சிறுவர்கள் சேட்டை ரசிக்க வைக்கிறது..
Esakki Karvannan – Amaithi Raj
Abi Nakshathra – Azhagu
Kadhal Sukumar – Vidiyal (Constable)
Soundar – Esakki (Postman)
Selvakumar – Kuppusamy (Constable)
Praveen Palanisamy – Selvam (Teacher)
Karan Chakravarthy – Sangili
Alan Kirshna – Vanaga mudi
Sidhu kumaresan – Kaali
Anand Soundarajan – Kadamban
Nesan – Killers Gang Informar
Kuyili Nachiyaar – Maruthuvachi (Killers Gang leader)
Udhaya Sumathi – Killers Gang
Nila – Killers Gang
Sumithra devi – Killers Gang
Ashika – Killers Gang
சீரியஸான இந்த படத்தில் காதல் சுகுமாரின் காமெடி கொஞ்சம் நம் மனதை இளகுவாக்கிறது..
போஸ்ட் மேன் சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.. ஆசிரியராக வரும் பிரவீன் பழனிச்சாமியின் வில்லத்தனமும் அவரது கெட்டப்பும் மிரட்டல்.. அந்தக் கால வில்லன்களை நினைவுபடுத்துகிறார்..
தொழில்நுட்ப குழு…
Screenplay: Thirumurugan
Editor: C.M Elangovan
Cinematography: Sibi Sadhasivam
Art Director: Mujibur Rahman
Music:Theeson
Stunt: Suresh
Makeup: Abdul
PRO: A. John
தீசன் இசையமைத்திருக்கிறார்.. பின்னணி இசை படத்திற்கு பலம்..
மேக்கப் ஆடை அலங்காரம் கலைப்பணிகள் படத்திற்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது.. காரணம் 1970 காலகட்டங்களில் மலைவாழ் பகுதி மக்கள் பயன்படுத்திய ஆடை.. அவர்களின் வீடு என அனைத்தையும் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்..
மேக்கப் பணிகளை அப்துல் செய்ய கலைப் பணிகளை முஜிபுர் ரஹ்மான் செய்திருக்கிறார்.. சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. அன்றைய காலகட்டங்களை குறைந்தபட்ச லைட்டிங் இருக்கும்.. அந்த லைட்டிங் கொடுத்து அந்த அடர்ந்த காட்டுக்குள் வாழ்வியலை அழகாக படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர்..
கிட்டு இயக்கியுள்ளார்.. பெண்களின் முன்னேற்றம்.. பெண் புரட்சி என்று கடந்த 50 ஆண்டுகளில் சில விஷயங்கள் பேசப்பட்டு வந்தாலும் இதற்கு எல்லாம் முன்னோடியாக 100 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் தான் முதன்மையானவர்கள்.. அவர்கள் தங்களுக்கான பாதைகளை அவர்களே வடிவமைத்து கொண்டனர்..
அவர்களுக்கான பயிற்சி அவர்களுக்கான போராட்டம் என அப்போதே இருந்தது.. தங்கள் பிரச்சனையை அவர்களே சிங்கப்பெண்கள் ஆக இருந்து தீர்த்துக் கொண்டனர் என்பதையும் என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார் கிட்டு..
ஆட்டி என்றால் பெண் ஆட்டி.. பெண் என்பவள் சமூகத்தை ஆட்டி படைக்கும் ஒரு ஒரு சக்தி.. அவள் நினைத்தால் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க முடியும் என்பதையும் விழிப்புணர்வாக சொல்லி இருக்கிறார்..
ஆனால் ஆட்டி படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க வேண்டும் என்பதற்காக முதல் பாகத்தில் ஒரு தெளிவான முடிவு இல்லாமல் படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் கிட்டு..
—–
