சாருகேசி – விமர்சனம்…

கதை…

கர்நாடக இசை கலைஞர் மாமேதை ஒய் ஜி மகேந்திரன்.. இவர்தான் சாருகேசி.. இவரது மனைவி சுவாசினி இல்லத்தரசி. இவரது மகன் ராஜ ஐயப்பா..

தந்தை பிரபலமானவராக இருந்தாலும் அவரின் நிழலில் தான் வளரக்கூடாது என்பதில் மகன் தீவிரமாக இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் இசைக் குழுவில் பாட வரும் ரம்யா பாண்டியனை காதலித்து வீட்டில் அப்பா அம்மாவுக்கு இவரே அறிமுகம் செய்து வைக்கிறார்..

தன் ஸ்டுடியோ சம்பந்தமாக பெங்களூர் செல்கிறார் ராஜ ஐயப்பா.. அப்போது வீட்டில் இருக்கும் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சுகாசினியை 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை ரகசியத்தை சொல்லி மிரட்டுகிறார் ரம்யா.. இதனால் தான் சேர்த்து வைத்த கௌரவம் என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார் ஒய் ஜி மகேந்திரன்..

அப்படி என்றால் ரம்யா எந்த நோக்கத்துடன் மருமகளாக வந்தார்.. அவர் சொன்ன ரகசியம்? மிரட்ட காரணம் என்ன.? அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

40 ஆண்டுகளுக்கு மேலாக நாடகம் அனுபவம் மிக்கவர் YG மகேந்திரன்.. எனவே இன்பம் துன்பம் பதட்டம் அல்செய்மர் வியாதி என பலவிதமான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. அழகான வாழ்க்கையில் அதிரடியான விஷயம் நடக்கும்போது செய்வதறியாமல் குழப்பமான மனநிலையில் காணப்படும் ஒய் ஜி மகேந்திரன் தன் நடிப்பில் ரசிக்க வைக்கிறார்..

இவரின் குழப்பமான சூழ்நிலைக்கு ஆலோசனை சொல்லும் ராகதேவனாக சத்யராஜ் வந்து செல்கிறார்.. அவர் சொல்லும் குட்டிக் கதைகள் ஒவ்வொன்றும் ரசனை மிக்கவை.. ஆனால் சில சீன்களில் ஓவர் டோஸ் ஆகவே தெரிகிறது..

சாருகேசி கேரக்டருக்கு ஏற்ற சாந்தமான மனைவியாக சுகாசினி.. பாக்கியம் கேரக்டரில் பக்குவப்பட்ட நடிப்பை கொடுத்து இருக்கிறார்..

பந்தா செய்யும் கேரக்டரில் ராஜ் ஐயப்பா அசத்தியிருக்கிறார்.. போதையில் சிக்கிக்கொண்டு காவல் நிலையத்தில் கெத்து காட்டியிருக்கிறார்..

அழகிலும் நடிப்பிலும் ரம்யா பாண்டியன் அசத்தல்.. மாமியாரிடம் காபி கேட்டுவிட்டு அவரே அதைக் கொண்டு வர வைக்கும் போடும் திட்டம் செம..

பெரிய வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்யும் விசுவாசி நபராக தலைவாசல் விஜய்.. நடிப்பில் கவனிக்க வைக்கிறார்

இவர்களுடன் சமுத்திரக்கனி, மதுவந்தி, போலீஸ் சாய் தீனா, டாக்டர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலரும் உண்டு..

தொழில்நுட்ப குழு…

படத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்.. காட்சிகளை அழகாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படங்களுக்கு தேவா இசை என்றாலே தேன் அமிர்தம் தான்.. இவர்கள் கூட்டணியில் வந்த அண்ணாமலை – பாட்ஷா படங்களை பாடல்களை மறக்க முடியுமா.? தற்போது அந்த வரிசையில் இந்த சாருகேசி படத்தின் பாடல்களும் இணைந்துள்ளது..

கலைமகள் அவள் தந்த வரம்… பாட்டு.. கர்நாடக இசையை போற்றும் பாடலாக அமைந்துள்ளது.. அதுபோல கித்தாரே வயலின் உள்ளிட்ட இசை கருவி மூலம் உணர்வுகளை பா விஜய் அழகான பாடல் வரிகளாக கொடுத்து இருக்கிறார்.. இந்த படத்திற்கு பா விஜய் தான் வசனங்களும் எழுதி இருக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது

ஆஹா சங்கமம் உள்ளிட்ட படங்களில் சுரேஷ் கிருஷ்ணா மென்மையான குடும்ப உணர்வுகள் மூலம் இசையாக சொல்லியிருப்பார்.. இதில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு தந்தைக்கு மகனுக்கும் நடக்கும் போராட்டம்.. மருமகள் செய்யும் பிரச்சனை.. முதியவர்களுக்கு ஏற்படும் மனஉளச்சல் ஆகியவற்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்..

மொத்தமாக 15 கேரக்டர்களை வைத்து படத்தை முடித்துவிட்டு சுரேஷ் கிருஷ்ணாவின் சாமர்த்தியமான இயக்கத்தை காட்டுகிறது..

Charukesi movie review

Related posts

Leave a Comment