கதை…
காடர் மொழி பேசும் தம்பதி ஆரவ் – ரம்யா பாண்டியன்.. இவர்களது ஒரே மகள் குறிஞ்சி (கிருத்திகா)..
இவர்களுக்கு படிக்கத் தெரியாது என்பதால் இவர்கள் வசிக்கும் பகுதியை வன அதிகாரி ஜான் விஜய் ஒரு பொய்யை சொல்லி நிலங்களை பெற்று விடுகிறார்.. இதனால் படிப்பின் அவசியத்தை உணரும் சிறுமி குறிஞ்சி கலெக்டரை சந்தித்தால் தான் இங்கு பள்ளிக்கூடம் வரும்.. மக்களுக்கு படிப்பறிவு கிடைக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்..
ஆனால் குறிஞ்சியின் முயற்சியை புரிந்து கொள்ளாத பெற்றோர் அவள் வயதுக்கு வந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர்..
பெற்றோரின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட குறிஞ்சி யாருக்கும் தெரியாமல் இரவில் மாவட்ட கலெக்டரை (அருள்நிதி) சந்திக்க நகரத்திற்கு செல்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.? அவளால் கலெக்டர் சந்திக்க முடிந்ததா.? குறிஞ்சியால் தன் இன மக்களுக்கு கல்வி கிடைத்ததா.? அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
Arulnithi – Muthuvel
Aarav – Kanthan
Ramya Pandian – Amaravalli
Baby kritika – Kurunji
John Vijay – Pandian
Kali Venkat – Dhanraj
VTV Ganesh – Chandran
கதாநாயகன் அருள்நிதி என்றாலும் கதையின் நாயகி பேபி கிருத்திகா.. கேரக்டர் பெயருக்கு ஏற்ற போல குறிஞ்சியாய் மலர்ந்து இந்த அருள்வான் படத்தை உயர்த்தி இருக்கிறார்..
காட்டில் வாழும் மிருகங்களை விட நகரத்தில் வாழும் மனிதர்கள் கொடூரமானவர்கள் என்று இவர் சொல்லும்போது நம் மனங்கள் கலங்கும்.. நடிப்பில் தனி முத்திரை பதித்திருக்கிறார் கிருத்திகா..
காடர் மொழி பேசும் தம்பதிகளாக ஆரோ மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் தங்கள் நடிப்பில் ஜொலிக்கின்றனர்.. இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் ஒரு கலெக்டரின் பொறுப்பை உணர்ந்து அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார் நாயகன் அருள்நிதி..
காட்டுப்பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியர்களே வராத நிலையில் கலெக்டர் எடுக்கும் முடிவு பாராட்டத்தக்கது..
சமூகப் பொறுப்புள்ள பத்திரிக்கையாளராக காளி வெங்கட்.. கலெக்டரின் உதவியாளராக விடிவி கணேஷ் உள்ளிட்ட வரும் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்..

தொழில்நுட்ப குழு…
Director : Ganesh Vinayakan
Cinematographer : M.Sukumar
Music director : G.V. Prakash Kumar
Editor : Lawrence Kishore
Art Director: Lalgudi Ilaiyaraja
PRO: Nikil Murukan
ஜிவி பிரகாஷ் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளது.. பாடல்களும் அதனுடன் பயணிப்பது சிறப்பு.. வயதுக்கு வந்த பெண்ணுக்கு போடும் மெட்டு பாடல் ரசிக்க வைக்கிறது..
அடர்ந்த காடு பசுமையான வயல்வெளி.. சுகுமாரை நம்பி கொடுக்கலாம்.. அந்த அளவுக்கு அருமையான ஒளிப்பதிவை கொடுத்து கண்களை குளிர்ச்சியாக்கி இருக்கிறார்…
தேன் என்ற அருமையான படத்தை கொடுத்த கணேஷ் விநாயகன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. சுதந்திரம் வாங்கி பல வருடங்களை கடந்து விட்ட போதிலும் இன்னும் பலருக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.. நமக்கு கிடைத்த கல்வி இன்னும் சில மக்களுக்கு கிடைக்கவில்லை.. அதை கிடைக்கும் வகையில் ஒரு விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார்…
