உள்நாட்டு போட்டிகளின் காரணமாக சீனாவில் ஆன்லைன் வணிகத்தை அமேசான் நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானுக்கு போட்டியாக சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான அலிபாபா, ஜே.டி.காம் உள்ளிட்டவை வேகமாக வளர்ந்து வருகின்றன.
வர்த்தக ரீதியான போட்டிகள் காரணமாகவும, கடுமையான விதிமுறைகள் காரணமாகவும் 15 வருடங்களாக அந்நாட்டில் ஆன்லைன் வணிகம் செய்து வரும் அமேசான், அதனை வரும் ஜூன் மாதம் 18ம் தேதியோடு நிறுத்திக்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே அன்று முதல் சீனாவில் உள்ளவர்கள் வெளிநாட்டில் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே அமேசான் மூலம் வாங்க முடியும். மேலும் அமேசானின் வெப் சேவைகள், கிண்டில் இ-புத்தகங்கள் மற்றும் கிராஸ்-பார்டர் (cross-border) செயல்பாடுகளை சீனாவில் தொடரவும் அமேசான் முடிவு செய்துள்ளது.