போட்றா புக்கிங்கை. NGK தெறிக்கும் முன்பதிவு

இந்த வாட்டி சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. தொடர்ந்து தனது படங்கள் பாக்ஸ் ஆபிஸை நொறுக்கத் தவற விட்டதால் இந்தமுறை அடிச்சித் தூக்க வேண்டும் என்ற வேட்கை அவரது வேகத்தில் தெரிகிறது. வேகமென்றால் படத்தின் ட்ரைலர் ப்ரோமோ எல்லாவற்றிலும் சூர்யா அவ்ளோ எனர்ஜியாக இருக்கிறார். செல்வராகவன் சூர்யா சாய்பல்லவி என இக்கூட்டணியே பலே கூட்டணியாக இருப்பதால் கோடம்பாக்கம் தாண்டி உலகம் எங்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. நேற்றே புக்கிங் ஓப்பனாகும் என்று ரசிகர்கள் தவங்கிடந்த நிலையில் இப்போது தான் புக்கிங் ஓப்பனாகியுள்ளது. ரசிகர்களும் வெறித்தனமாக முன்பதிவு செய்து வருகிறார்கள். எப்படியாவது இந்தப்படம் மூலமாக சூர்யா செல்வராகவன் இருவருக்கும் திருப்புமுனை கிடைச்சா சரி. அப்படியே எஸ். ஆர் பிரபுவும் நல்லாருக்கணும். ஆமா அவர் தானே தயாரிப்பாளர்

Related posts

Leave a Comment

four × one =