புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 30 தொகுதிகள் உள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு, திமுக – காங்கிரஸ் இடையே அண்ணா அறிவாலயத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 13) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 தொகுதிகளில், 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாகூர் தொகுதிக்கு மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது.
புதுவை வேட்பாளர்கள் பட்டியல்
உருளையன்பேட்டை – எஸ்.கோபால்,
உப்பளம் – வி.அனிபால் கென்னடி,
மங்கலம் – சண்குமரவேல்,
முதலியார் பேட்டை – எல்.சம்பத்,
வில்லியனூர் – ஆர். சிவா,
நெல்லித்தோப்பு – வி.கார்த்திகேயன்,
ராஜ்பவன் – எஸ்.பி.சிவகுமார்,
மண்ணாடிப்பாட்டு – கிருஷ்ணன் (எ) எ.கே.குமார்,
காலாப்பட்டு – எஸ். முத்துவேல்,
காரைக்கால் (தெற்கு) – நாஜிம்,
திருப்புவனை (தனி) – முகிலன்,
நிரவி திருப்பட்டினம் – நாகதியாகராஜன்
தமிழகத்தில் நேற்று 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.