ராட்டினம், எட்டுதிக்கும் மதயானை படங்களை இயக்கியவர் தங்கச்சாமி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைவையொட்டி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்திநேற்று சென்னையில் விடுதியில் தங்கியிருந்தபோது அந்த செய்தி வந்தது. ஜனநாதன் மறைந்தார்.அவர் மறைந்த செய்தி சட்டென்று என்னுள் நிலைகுலைவை உருவாக்கியது. தமிழ் இயக்குனர்களில் என் உள்ளத்திற்கு அணுக்கமானவர் ஜனநாதன்.
அவருடைய தனிப்பட்ட உடல்நிலைகளை நான் அறிய முடிந்ததில்லை.அவரை நான் சந்தித்ததே ஒரு அஞ்சலி கூட்டத்தில் தான். என் முதல் படமான ராட்டினம் படம் பற்றி அவர் உற்சாகத்துடன் விலாவாரியாக பேசினார். ராட்டினம் படம் குறித்து அவர் சொன்னபோதிருந்த முகபாவங்களை திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்கிறேன். நாம் மனிதர்கள் என்றுமிருப்பார்கள் என்றே நம்ப விரும்புகிறோம். அந்த நம்பிக்கை வெறும் எண்ணம்தான், நிதர்சனம் வேறு என்று வாழ்க்கை உணர்த்திக்கொண்டேதான் இருக்கிறத
நான்காவது மாடி விடுதி அறையின் அகன்ற ஜன்னல் வழியாக சாலையை பார்த்து கொண்டு இருந்தேன். சாலையில் அதிக போக்குவரத்து இல்லை. மனம் அவரின் இறப்பையே சுற்றி வந்தது. அவரின் இறப்புக்கு காரணமாக நான் யோசிப்பதுஓய்வொழிவில்லா வேலை. அந்தளவுக்கு வேலை செய்தால் இணையாக வேறு விஷயங்களில் மனதைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும், ஓயாமல் சிந்திப்பதும் வேலைதான். சொல்ல போனால் உடல் உழைப்பை விட மூளை உழைப்பிற்கு ஓய்வு அவசியம். உலகில் எந்த இரண்டு நாட்களும் ஒன்று போல இருப்பதேயில்லை. நாம் தான் ஒரே வேலையை ஒரே மாதிரி தினசரி செய்து கொண்டேயிருக்கிறோம். சிந்தித்து சிந்தித்து மனதையும் உடலையும் ஒருசேர வருத்துகிறோம். உடலை கவனித்து கொள்ள மறக்கிறோம். நமது சலிப்பை போக்கி கொள்ள சில தருணங்களை நாம்தான் உருவாக்கி கொள்ள வேண்டும். உலகம் என்றும் வியப்பானதே.அதன் ஒவ்வொரு காட்சிகளும் மயக்கமூட்டக்கூடியவையாகவே இருக்கின்றன. நாம் தான் பார்க்கவும், உணரவும் அதன் உள்ளாக கரைந்து போகவும் பழக வேண்டும். அது நம் மனநிலையை,உடல்நிலையை நிச்சயம் காப்பாற்றும்.சக திரையுலக நண்பர்களிடம் இதை ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். ஜனநாதனுக்கு சமூகம், அரசியல்,கார்பரேட் நிறுவனங்கள் என பல்வேறு தளங்களில் தெளிவான பார்வை இருந்தது.இயற்கையின் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாடு அற்புதம். அவரின் முதல் பட தலைப்பே ‘இயற்கை’இயற்கைக்கு எதிராக மனிதன் வாழக்கூடாது. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் மிக அபாயகரமானவை. நாம் பிரபஞ்சத்தைக் காப்பாற்றுவதன் மூலம் நம் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்கிறோம்.இயற்கையோடு இணைந்து வாழுவது தான் மனிதன் மேற்கொள்ள வேண்டிய முக்கியப்பணி. சுயலாபங்களுக்காக இயற்கையை அழித்துக் கொண்டேயிருந்தால் இயற்கை மனிதனைச் சூறையாடுவதைத் தவிர்க்கவே முடியாது.இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாவிட்டாலும் இயற்கை இருக்கும். இயற்கையோடு இணைந்த உயிரினங்கள் இருப்பார்கள்.இவையனைத்தும் அவரின் படங்களின் வழியாக அவர் தூவிய விதைகள்.காலத்தால் பின்தள்ளமுடியாத சமூக படைப்புகளாக அவை ஒளிர்கின்றன.