தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை கவனித்திடும் வகையில் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்து உள்ளார்.
அதன்படி தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-
கனிமொழி, ஜெகத்ரட்சகன்
மத்திய மண்டலம் – தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி.
தெற்கு மண்டலம் – மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.
வடக்கு மண்டலம் – உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.
மேற்கு மண்டலம் – உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன் எம்.பி.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் – துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா.
தொகுதி பொறுப்பாளர்கள்
தொகுதி பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:-
கொளத்தூர் – கி.நடராஜன், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் – ஏ.சரவணன், ராயபுரம், பெரம்பூர் – வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், ஆர்.கே.நகர் – சுபா.சந்திரசேகரன், மதுரவாயல், அம்பத்தூர் – ஜி.செல்வராஜ், அண்ணாநகர் – சி.எச்.சேகர், திருவள்ளூர் – துறைமுகம் காஜா, மதுராந்தகம் – ஆர்.டி.அரசு.

