திரையரங்குகள் எதிர்பார்த்த சுல்தான் 600 திரைகளில்

தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியானசகுனி திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பில் டிரீம் வாரியர் நிறுவனம் தனது பயணத்தை தொடங்கியது அடுத்தடுத்து இந்நிறுவன தயாரிப்பில் வெளியான ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, என்.ஜி.கே, ராட்சசி, கைதி ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா தயாரிப்பு துறையில் தவிர்க்க முடியாத நிறுவினமானது டீரீம் வாரியர்  கார்த்தி,ராஷ்மிகா,நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் டிரீம் வாரியர் தயாரிப்பில் தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரைகளில் இன்று வெளியாகியுள்ளது

டிரீம் வாரியர் தயாரிப்பில் 2019ல் வெளியான “கைதி” படத்திலும் கார்த்திதான் காதாநாயகன் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வெளியான என்று வெளியிடப்பட்ட கைதி தமிழ்சினிமாவில் வசூல், திரையிடல், இவற்றில் புதிய சாதனைகளை படைத்தது தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தபோது இணையத்தில் வெளியான முதல் படம் கைதி அதன் பின்னரேOTT என்கிற புதிய வியாபார தளம் தமிழ் சினிமாவில் பிரபலமானது

இந்த ஆண்டு இதுவரை 60 படங்கள் வரை வெளியிடப்பட்டிருந்தாலும் விஜய் நடிப்பில் வெளியான” மாஸ்டர்” மட்டுமே திரையரங்குகளில் பாக்ஸ்ஆபீஸ் ஹிட்டடித்தது மற்ற படங்கள் அனைத்தும் நஷ்டத்தையே ஏற்படுத்தியது

திரையரங்குகளை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும் நிலையில்தான் சுல்தான் ஏப்ரல் – 2 வெளியீடு என அறிவிப்பு வெளியானது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது

உலகம் முழுவதும் சினிமா வியாபார முறைகள்மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தமிழ் திரையுலகமும் அதனை சார்ந்து இயங்கும் திரையரங்குகளும் மாறாத நிலையிலேயே உள்ளது மாற்றுவதற்கான முன்முயற்சியை சுல்தான் படம் மூலம் தயாரிப்பாளர்கள் S.R.பிரபு, S.R.பிரகாஷ்பாபு இருவரும் தொடங்கியுள்ளார்கள்

இதுவரையிலும் தயாரிப்பாளர்களை பொறுத்தவரைபடத்தை அவுட்ரேட், மினிமம் கேரண்டி என்கிற முறையில் வியாபாரம் செய்து பொறுப்பிலிருந்து விலகி கொள்ளுவது வாடிக்கையான ஒன்று சுல்தான் படத்தை பொறுத்தவரை 28வது நாள்OTTயில் திரையிடப்பட உள்ளது அதற்கு ஏற்ப தனிப்பட்ட விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படகூடாது என்பதால் தமிழகம் முழுவதும் சுமார் 600 திரைகளில் டீ ரீம் வாரியார் நிறுவனமே படத்தைவெளியிட்டிருக்கிறது

இது சம்பந்தமாக தயாரிப்பாளர் S.R.பிரபுவிடம் பேசிய போது சினிமா தயாரிப்பு, வியாபார முறைகள் காலத்துக்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது அதனை கற்றுக்கொண்டு அதனை இங்கு அமுல்படுத்துவதும், அதனுடன் பயணிக்கவும் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் முயற்சிக்க வேண்டும் அதற்கான முதல் முயற்சிதான் “சுல்தான்” படத்தின் வியாபாரமும், வெளியீட்டு முறைகளும் படைப்பு மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது நல்ல படைப்புகளை சினிமா ரசிகன் கைவிட்டதில்லை இதனை எங்களது தயாரிப்புகளுக்கு கிடைத்த வெற்றியின் மூலம் அனுபவரீதியாக நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம் “சுல்தான்” படம் மூலம் அதனை அமுல்படுத்தியிருக்கிறோம் ரசிகர்கள் சுல்தான்-னை ஏமாற்றமாட்டார்கள் சுல்தான் ரசிகனை ஏமாற்றமாட்டான் என்றார் நம்பிக்கையுடன்

Related posts

Leave a Comment