தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக தமிழ்சினிமா பிரபலங்கள்

தமிழ் சினிமாவும் – தமிழக அரசியலும் 1957 முதல் பிரிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பதை போன்றுதான் சினிமா மூலம் அரசியல் வளர்ச்சியா அரசியல் மூலம் சினிமா வளர்ச்சியா என்பதற்கு தெளிவான விடை இங்கு காணமுடியாது அரசியல்வாதியாக இருந்த மு. கருணாநிதி திமுகவின் கொள்கைகளை திரைமொழி மூலம் மக்களிடம் அடர்த்தியாக கொண்டு சென்றார் இதற்கு சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமசந்திரன் இருவர் நடித்த படங்களை முழுமையாக பயன்படுத்தினார் நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தல்களில் பெயரளவில் சிலருக்கு போட்டியிடவும் வாய்ப்புகளை திமுக வழங்கியது அப்படித்தான் 1962 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் , எம்.ஜி.ராமசந்திரன் ஆகியோர் 1962 முதல்தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்றனர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை தொடங்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார் ஆனால் தன் வளர்ச்சிக்கு காரணமான திரைத்துறையில் இருந்து நடிகர்களை ஊக்குவிக்கவில்லை 1980ல் ஆண்டிபட்டியில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் திமுக தலைமை கட்சிக்கு நீண்டகாலமாக விசுவாசமாக இருந்த பசையுள்ள நபர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது அந்த வகையில் T.ராஜேந்தர், தயாரிப்பாளர் ராம நாராயணன் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது கடுமையான அரசியல் பணி, ஆட்சி பணிகளுக்கு இடையில் இளைப்பாறும் நந்தவனமாக மட்டுமே திரைத்துறையை மு. கருணாநிதி இறுதி வரை பயன்படுத்திகொண்டார் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் சினிமா கலைஞர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படுத்திகொண்டார்கள் அவர்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் அங்கீகாரத்தை இருவரும் வழங்கவில்லை 2005ல் தனிக்கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த்திரைப்பட நட்சத்திரங்களை கட்சிக்குள் கொண்டுவரவில்லை அவரது அரசியல் பிரவேசத்திற்கு பின்னரே 2010ல் இயக்குனர் சீமான் நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவித்து தேர்தல் அரசியலில் ஈடுபட்டார் அந்த கட்சியிலும் சினிமா கலைஞர்கள் அதிகம் பங்கேற்கவில்லை2018 ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை கமலஹாசன் தொடங்கி நடத்திவந்தாலும் அக்கட்சி சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தலில் திரைப்பட துறையினருக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்கி இருக்கின்றனர்

நடைபெறவுள்ள சட்டமன்ற, நாகர்கோவில் நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்திரைப்படதுறை சார்ந்த 15 பேர் போட்டியிடுகின்றனர் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் இத்தனை சினிமாகாரர்கள் போட்டியிடவில்லை என்பதுடன் இரண்டு சினிமா பிரபலங்கள் முதல்வர் வேட்பாளர்களாக களத்தில் இருப்பதும் இந்த தேர்தலில்தான்
 சேப்பாக்கம் தொகுதியில் நடிகரும்  உதயநிதி ஸ்டாலின்
வந்தவாசி தொகுதியில் ஜிப்சி படதயாரிப்பாளர் அம்பேத்கர் இருவரும் திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்
நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நடிகர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்
ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ, மதுரை வடக்கு தொகுதியில் நடிகரும் தயாரிப்பாளருமான டாக்டர் சரவணன் இருவரும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் காமெடி நடிகர் மயில்சாமி, தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் இருவரும் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்
இயக்குனர், நடிகருமான சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடிகர் கமல்ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியிலும்
நடிகை ஸ்ரீப்ரியா மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலும் தயாரிப்பாளர் பழ.கருப்பையா தியாகராயநகர் தொகுதியிலும்
சினிமா பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் விருகம்பாக்கம் தொகுதியிலும் ,புலி படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் ஆஸ்தான மக்கள் தொடர்பாளருமான பி.டி.செல்வகுமார் கன்னியாகுமரி தொகுதியிலும் கொடைக்கானல் பட தயாரிப்பாளர் ராஜேந்திரன் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகின்றனர் குணசித்திர நடிகர் எஸ்.ராஜேந்திரநாதன் தேமுதகழகம் சார்பில் ஆலங்குளம் சட்டபேரவை வேட்பாளராக போட்டியிடுகின்றார்
தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் காளிதாஸ் அமமுக சார்பில் R.K.நகர் சட்டபேரவை வேட்பாளராக போட்டியிடுகிறார்
தமிழக தேர்தல் வரலாற்றில் 1977க்கு பின் திமுக- அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வந்த சூழ்நிலையில் 2005 ல் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக, சீமான்2010ல் நாம் தமிழர் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தது 2018ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல் தொடங்கியதால் அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கான அரசியல் களம் விரிவடைந்துள்ளதுடன் தேர்தலில்போட்டியிடக்கூடிய
வாய்ப்பையும்ஏற்படுத்திக்
கொடுத்திருக்கிறது அதன் காரணமாகவே சினிமா உலகில் இருந்து 16 பேர் வேட்பாளர்களாக போட்டியிடும் வாய்ப்பை பெற முடிந்திருக்கிறது

Related posts

Leave a Comment